மொத்தப் பக்கக்காட்சிகள்

வருமானம் 9.25% -10%: முத்தூட் ஃபைனான்ஸ் பாதுகாப்பான கடன் பத்திரங்கள்


முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட், என்.சி.டி. மூலம் ரூ. 790 கோடி திரட்டுகிறது


கொச்சிநவம்பர் 28, 2019முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட் (Muthoot Finance Ltd) தனது 22- வது பாதுகாப்பான பங்குகளாக  மாற்ற முடியாத கடன் பத்திர (Non-Convertible Debentures - NCD) பொது  வெளியீட்டை (Public Issue) அறிவித்துள்ளது.  அடிப்படையில் ரூ. 100 கோடிக்கு இந்தக் கடன் பத்திரங்கள் வெளியிடப்படுகின்றனஅதிக தேவையிருந்தால் கூடுதலாக ரூ. 690 கோடி வரைக்கும் திரட்டப்படும்ஆக மொத்தம் என்.சி.டி. வெளியீடு மூலம் ரூ. 790  கோடி திரட்டப்படுகிறது. இந்த என்.சி.டிவெளியீடு 2019 நவம்பர் 29 தொடங்கி  2019 டிசம்பர் 24-ஆம் தேதி நிறைவு பெறுகிறதுகடன் பத்திரங்கள் வேண்டி அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டால் முன்னதாக நிறைவு செய்யப்படும் அல்லது குறைவாக விண்ணப்பிக்கப்பட்டால் வெளியீடு  நீடிக்கப்படும்இதற்கான முடிவை இயக்குநர் குழு அல்லது என்.சி.டி. குழு முடிவு செய்யும்.

இந்த வெளியீட்டுக்கு இரண்டு  தரக்குறியீட்டு நிறுவனங்கள் - கிரிசில் லிமிடெட் மற்றும் இக்ரா  லிமிடெட் (CRISIL Ltd and ICRA Ltd)  தரக்குறியீடு வழங்கி உள்ளன. இரு ஏஜென்சிகளும் என்.சி.டி வெளியீட்டுக்கு ஏஏ/நிலையானது (AA/Stable) என நீண்ட கால கடன் மதிப்பீட்டை வழங்கியுள்ளன. இந்த மதிப்பீட்டு அளவுகோல் ‘நிதிக் கடமைகளை சரியான நேரத்தில் நிறைவேற்றுவது மற்றும் மிகக் குறைந்த கடன் இடர்ப்பாட்டை (credit risk) கொண்டிருக்கிறது’ என்பதைக் குறிக்கிறது.

இந்த என்.சி.டிகள் பி.எஸ். பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்ஒதுக்கீடுமுதலில் வருபவர்களுக்கு முதலில் என்கிற அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

பாதுகாப்பான  இந்த என்.சி.டி.க்களுக்கு ‘மாதம் தோறும்’ அல்லது ‘ ஆண்டுக்கு ஒரு முறை’ வட்டி வருமானம் பெறும் வசதி உள்ளது. அல்லது முதிர்வின் போது, மொத்தமாக பெறுதல் உள்ளிட்ட பத்து முதலீட்டு விருப்பங்கள் (investment options) உள்ளன. ஆண்டுக்கு வட்டி வருமானம் 9.25% முதல் 10.00%  வரை  வட்டி வருமானம் கிடைக்கும்.

முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட்-ன்  நிர்வாக இயக்குனர் திருஜார்ஜ் அலெக்சாண்டர் (Mr.George Alexander Muthoot, Managing Director, Muthoot Finance) கூறும் போது, இந்தக் கடன் பத்திர வெளியீடு, நிறுவனத்துக்கு நீண்ட கால நிதியைத் திரட்ட உதவும். மேலும், கடன்  திரட்டுவதை பன்முகப்படுத்தவும் நிறுவனத்திற்கு உதவும். முந்தைய என்.சி.டி வெளியீடுகள் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதிக  ஆதரவும் பெற்றன.’’
அவர் மேலும் கூறும் போது,, “ சிறு மற்றும் உயர் மதிப்பு தனிநபர் முதலீட்டாளர்களுக்கு (Retail and High Networth Individual investors) இந்த என்.சி.டி வெளியீடு  ஒரு முதலீட்டு  வாய்ப்பை வழங்குகிறது. அதாவது,  மொத்த வெளியீட்டில் அவர்களுக்கு நாங்கள்  80%  ஒதுக்கியுள்ளோம். முதலீடுகளுக்கு ஒப்பிடத்தக்க குறைவான மாற்று வழிகள்  இருக்கும்போது, நிலையான மற்றும் கவர்ச்சிகரமான நீண்ட கால வருமானம் அளிக்கும் இந்த என்.சி.டிகள் அவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்..”

இந்த என்.சி.டி கடன் பத்திர  வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதி, முதன்மையாக நிறுவனத்தின் கடன் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும்.
 எடெல்வைஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் மற்றும் கேகேப்பிட்டல் சர்வீசஸ் லிமிடெட் ஆகியவை இந்த வெளியீட்டுக்கு முன்னணி மேலாளர்களாக உள்ளனர்.ஐ.டி.பி.ஐ டிரஸ்டீசிப் சர்வீசஸ் லிமிடெட் இந்த வெளியீட்டுக்கான கடனீட்டு அறங்காவலர் (Debenture Trustee) ஆகும்இந்த என்.சி.டி. வெளியீட்டுக்கான  பதிவாளர் ஆக.லிங்க் இன்டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட்  உள்ளது.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

20 ஆண்டுகளில் 33 பங்குகள் 100 மடங்குக்கு மேல் வருமானம்..! பட்டியல் இதோ...!

20 ஆண்டுகளில் 33 பங்குகள் 100 மடங்குக்கு மேல் வருமானம் கொடுத்துள்ளன! ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 20 ஆண்டுகளில் ...