மொத்தப் பக்கக்காட்சிகள்

நவம்பர் 2019 எஃப் அண்ட் ஓ நிறைவு சொல்வது என்ன?

நவம்பர் 2019 எஃப் அண்ட் ஓ நிறைவு சொல்வது என்ன?

 நவம்பர் 2019 –க்கான ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் (எஃப் அண்ட் ஓ) ஒப்பந்தங்கள் நவம்பர் 28-ம் தேதி முதிர்வு அடைந்தன. இந்த விவரங்கள் 2019 டிசம்பர் மாதத்திலும் இந்தியப் பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும் என்பதை சுட்டிக் காட்டுவதாக பகுப்பாய்வாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

 முக்கியக் குறியீடுகளான சென்செக்ஸ், நிஃப்டி போன்றவற்றின் ரோலோவர் மூன்று மாதங்களின் சராசரிக்கு மேலே உள்ளன.

 நவம்பர் நிறைவில் நிஃப்டி 50-ன் ரோலோவர் 76.64% ஆக உள்ளது. இது கடந்த மூன்று மாத சராசரியான 75.31% -ஐ விட அதிகம். பேங்க் நிஃடியின் ரோலோவர் 70.56%. இது கடந்த மூன்று மாத சராசரியான 62.54% - ஐ விட அதிகம். இந்தப் புள்ளி விவரங்கள் இந்தியப் பங்கு சந்தை, 2019 டிசம்பர் மாதத்திலும் ஏற்றத்தின் போக்கில் இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. 


குறிப்பாக ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், எஸ்.பி.ஐ, எல்.ஐ.சி ஹவுஸிங் போன்ற நிதித் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளின் விலை டிசம்பர் மாதத்திலும் ஏற்றம் காணும் எனலாம்.

 கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகள் வருவதால் நிதி நிறுவனங்களின் செயல்பாடும் மேம்படும்.

அதனாலும் மேலே குறிப்பிட்ட நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பங்குகளின் செயல்பாடு 2019 டிசம்பரில் நன்றாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

டாக்டர். மோகன்ஸ் – ன் இந்திய உணவுகளின் வரைபட நூல் DMDSC

  டாக்டர் . மோகன்ஸ் இன்டர்நேஷனல் டயாபட்டீஸ் அப்டேட் நிகழ்வை மத்திய அமைச்சர் டாக்டர் . ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்   மருத்துவ ...