மொத்தப் பக்கக்காட்சிகள்

வயர் மற்றும் கேபிள் உற்பத்தி நிறுவனம் கே.இ.ஐ இண்டஸ்ட்ரீஸ் டீலர் எண்ணிக்கை 1,400



கே.இ.ஐ,  நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் 20%-க்கும் மேற்பட்ட வளர்ச்சியை எதிர்பார்க்கிறது.

ஏற்றுமதி 10 சதவிகிதமாக வளர்ச்சி  காணும், டீலர்கள் எண்ணிக்கை 1,400 –ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கிறது

-         நிகர விற்பனை, கடந்த 2017-18  ஆம் நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளுடன் (Q1-Q3 FY’19) ஒப்பிடும்போது, நடப்பு 2018- 19 ஆம் நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில்  23%அதிகரித்து ரூ .2,968.17 கோடியாக உள்ளது.  

-         வரிக்குப் பிந்தைய நிகர லாபம் ((PAT), கடந்த 2017-18  ஆம் நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளுடன் ஒப்பிடும்போது, நடப்பு 2018-19 ஆம் நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் 28% வளர்ச்சி அடைந்து ரூ. 121.94 கோடியாக உள்ளது.  

-         ஏற்றுமதி, கடந்த 2017-18  ஆம் நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளுடன் ஒப்பிடும்போது, நடப்பு 2018-19 ஆம் நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் 10% வளர்ச்சி அடைந்து ரூ. 390 கோடியாக உள்ளது.  
****  
இந்தியாவின் முன்னணி வயர் மற்றும் கேபிள் உற்பத்தி நிறுவனம் (wire and cable manufacturer) கே.இ.ஐ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (KEI Industries Ltd)  நடப்பு நிதியாண்டில் 2019 மார்ச் 31  இறுதிக்குள் 20 சதவிகிதத்துக்கும் மேல் வளர்ச்சிக்கான இலக்கு நிர்ணயித்துள்ளது. கூடவே ஏற்றுமதி 10% வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கிறது.  காரணம், இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளில் இதன் தயாரிப்புகளுக்கு தொடர்ந்து தேவைப்பாடு இருந்து வருகிறது.

நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் இந்த நிறுவனம் அதன் டீலர்களின் (dealers)  எண்ணிக்கையை 1,400 க்கு மேலாக இந்தியா முழுவதும் அதிகரிக்க உள்ளது.  இது2018 மார்ச் 31ஆம் தேதியுடன் ஒப்பிடும்போது 9%  அதிகம். அப்போது 1,784 டீலர்கள் இருந்தார்கள்.

ஏப்ரல் 1 2018 முதல் டிசம்பர் 31 2018 வரையிலான ஒன்பது மாதங்களில் கே.இ.ஐ  நிறுவனத்தின்  நிகர லாபம் 28.36 அதிகரித்து ரூ. 121.94 கோடியாக உள்ளது. இது2017- 18  ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ95 கோடியாக இருந்தது.

இந்திய வயர் மற்றும் கேபிள் துறையின் வளர்ச்சி குறித்து கே.இ.ஐ  இண்டஸ்டீரிஸ் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. அனில் குப்தா (Chairman cum Managing Director- KEI Industries Ltd, Mr Anil Gupta) கூறும்போது,’’ விரிவாக்க நடவடிக்கையில் இறங்கி இருக்கும் அதேவேளையில் அனைத்து சந்தைகளிலும் எங்களுடைய தயாரிப்புகள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  வலிமையான நிதிநிலை மற்றும் விரிவாக்க நடவடிக்கைகள் மூலம் எங்களின் தொடர் வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறோம்.  எங்களின் வளர்ச்சி தொடர்ந்து மேம்பட்டு அடுத்த நிதியாண்டில் 18 முதல் 20 சதவிகிதத்துக்கும் மேல் வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எல்டி பவர் கேபிள் (LT Power Cable), பத்ரெதி திட்ட (Pathredi project)t முதல் கட்டப் பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டது. ஹெச்டி பவர் கேபிள் இரண்டாவது கட்டப் பணி 2019 மார்ச் முதல் வாரத்தில் முடிவடைந்திருக்கிறது.  எங்களின் ஹெச். டி பவர் கேபிள் (HT Power Cable) விரிவாக்க பணிகளை  ரூ 200 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.” என்றோம்.
அவர் மேலும் கூறும்போது, கே.இ.ஐ.-ன் சில்வஸ்சா திட்டத்துக்காக (Silvassa project) நிலம் மற்றும்  உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ16 கோடி செலவிடப்படுகிறது.  இதன் மூலம் எங்களின் வீட்டு உபயோக வயர் உற்பத்தித் திறன் மேலும் அதிகரிக்கும்.  நாங்கள் மேலும் ரூ 39 கோடி முதல் ரூ. 44 கோடியை உற்பத்தித் திறனை அதிகரிப்புக்காக செலவிட உள்ளோம். இது எங்களின் ரூ300 கோடி உற்பத்தி திறன் அதிகரிப்பு திட்டத்துடன் சேரும்.  அடுத்த கட்டமாக,  அடுத்த நிதியாண்டில் இரண்டாவது கட்டமாக ரூ. 30 கோடி செலவிடப்படுகிறது. இது உற்பத்தி திறனை அதிகரிக்கும் ரூ. 300 கோடி  திட்டத்தில் ஒன்றாகும். இது வீட்டு உபயோக வயர் உற்பத்தி பிரிவுக்காக செலவிடப்படுகிறது” என திரு. குப்தா விளக்கிச் சொன்னார்.

நடப்பு நிதியாண்டின் முதல்9 மாதங்களில் இந்த நிறுவனத்தின் மொத்த விற்பனையில், சில்லறை விற்பனையின்  பங்களிப்பு 33 சதவிகிதமாக (ரூ. 994 கோடி) உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்துடன்  (ஏப்ரல்- டிசம்பர் 2017- 18 ) ஒப்பிடும்போது 50% (ரூ663 கோடி) அதிகமாகும்.
இந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 2018 டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி ரூ2,578 கோடியாக உள்ளது. 2018 ஏப்ரல் 1, தொடங்கிய 9 மாத காலத்தில் இந்த நிறுவனத்தின் ஏற்றுமதி ரூ 390 கோடியாக உள்ளது.

2018-19 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் கே.இ.ஐ. நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ. 888.66 கோடியிலிருந்து ரூ. 1087.48  கோடியாக அதிகரித்துள்ளது.  இது 22.37 சதவிகித  வளர்ச்சியாகும்.  இதேபோல் இரண்டாம் காலாண்டில் நிகர விற்பனை ரூ. 748.82 கோடியிலிருந்து ரூ. 996.79 கோடியாக அதிகரித்துள்ளது.  இது 33.11 சதவிகித வளர்ச்சி ஆகும்.  

2018-19 ஆம்  நிதியாண்டின் முதல் காலாண்டில் நிகர விற்பனை ரூ. 777.97  கோடியிலிருந்து ரூ. 883.90 கோடியாக அதிகரித்துள்ளது. இது  13.62 சதவிகித வளர்ச்சியாகும்.   

வீட்டு உபயோக வயர் மற்றும் கேபிள் பிரிவின் வளர்ச்சியால் இந்த நிறுவனத்தின் சில்லறை விற்பனை சிறப்பாக அதிகரிக்கும் என இந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது.  இது தவிர மத்திய அரசின் குறைந்த விலை வீடுகள் (affordable housing) குறித்த கொள்கை மாற்றத்தால் இந்திய ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி காணும்.  இது இந்த நிறுவனத்தின் வீட்டு உபயோக வயர் மற்றும் கேபிள்களுக்கு தேவையை உருவாக்கும்.

கே.இ.ஐ. நிறுவனத்தின் வீட்டு உபயோக வயர் மற்றும் கேபிள்கள் எரிசக்தியை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உயர்தர பாதுகாப்பையும் வீடு மற்றும்  தொழில்துறை பயன்பாட்டில் அளித்து வருகிறது. இந்த கேபிள்கள்,  எலக்ட்ரிகல் மற்றும் மெக்கானிக்கல் பிரிவில் மிகவும் தரமானது. மேலும், சர்வதேச தரத்துடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தயாரிப்புகள் புதிய தலைமுறை ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் இடையே நீண்ட காலம் உழைக்கும் என்கிற கேரண்டியை சுலபமாக உறுதி செய்துள்ளது. மேலும், அதிக நெகிழ்ச்சி (flexibility) உடன் இந்தத் தயாரிப்புகள் இருக்கின்றன. இந்த நிறுவனம், வீட்டு உபயோக வயர்கள் பிரிவில் ஹோம்கேப் –எஃப்.ஆர் (Homecab-FR) என்கிற பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டே இருக்கிறது.  இந்த கேபிள்கள் வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக வயரிங் வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...