மொத்தப் பக்கக்காட்சிகள்

ரூபே குளோபல் கார்டுகள் 6.4 கோடி


ரூபே குளோபல் கார்டுகள், விநியோகம் 6.4 கோடியை தாண்டியது

இந்திய தேசிய பணப் பட்டுவாடா கழகம் என்கிற நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, (National Payments Corporation of India - NPCI)) ரூபே குளோபல் கார்டுகளை  (RuPay Global cards) 6 கோடியே 40 லட்சத்துக்கும் (64 million)  மேற்பட்ட எண்ணிக்கையில் வெளியிட்டு புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த அட்டைகள்  கடந்த  2014 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. என்.பி.சி.ஐ, ரூபே கார்ட் நெட்வொர்க்கை  இந்தியாவில் நிர்வகித்து வருகிறது.  ரூபே குளோபல் கார்டுகளை இந்தியாவுக்கு வெளியே டிஸ்கவர் நெட் ஒர்க் நிர்வகித்து வருகிறது.

இந்தக் கூட்டு மூலம்  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரூபே பணப்பட்டுவாடா கார்டுகள்  உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து என்.பி.சி.ஐ முதன்மை செயல்பாட்டு அதிகாரி திருமதி. பிரவீனா ராய் (Ms. Praveena Rai, Chief Operating Officer of NPCI) கூறும்போது,’’ 6 கோடியே 40 லட்சம், ரூபே குளோபல் கார்டுகளை பெற்றுள்ள நுகர்வோர்கள் சர்வதேச அளவில் இந்த கார்டுகளை சிறப்பாக பயன்படுத்தும் நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்.  டிஸ்கவர் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்திருப்பது மூலம் ரூபே குளோபல் கார்டுகள் 4 கோடியை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வர்த்தக இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது உலகம் முழுவதும் 190 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. ரூபே குளோபல் கார்ட் வைத்திருப்பவர்கள் சர்வதேச அளவில் 200-க்கும் மேற்பட்ட சலுகைகளை பெற்று வருகிறார்கள்.  இது அந்த கார்ட்டை வைத்திருப்பவர்களுக்கு ஓர் இனிப்பான செய்தியாகும்” என்றார்.

இன்று இரு பணப் பட்டுவாடா நிறுவனங்களும் இணைந்திருப்பது மூலம் இணை பிராண்டட் கார்டுகள் (co-branded) வெளியிடப்பட்டிருக்கிறது.  இந்த கார்டுகள், ரூபே டிஸ்கவர் டெபிட் அண்ட்  கிரெடிட்  கார்ட் (RuPay-Discover debit and credit card) என அழைக்கப்படுகிறது. இந்த கார்டுகள் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ரூபே குளோபல் டெபிட் அண்ட் கிரெடிட் கார்டுகளை தற்போது 40 வங்கிகள் வெளியிட்டுள்ளன.  

இந்த கார்டுகளை பயன்படுத்தி பல்வேறு வணிக இடங்களில் பொருட்களை வாங்குவதோடு, டிஸ்கவர் குளோபல் நெட்வொர்க் (Discover Global Network) மூலம் பணமாகவும் எடுக்க முடியும். இந்த டிஸ்கவர் குளோபல் நெட்வொர்க் முக்கிய நாடுகளான அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA), சிங்கப்பூர், இலங்கை போன்றவற்றிற்கு பயணம் செய்யும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.  

டிஸ்கவர் குளோபல் நெட்வொர்க் என்பது டிஸ்கவர் நெட்வொர்க், டைனர்ஸ் கிளப் இன்டர்நேஷனல், பல்ஸ் (Diners Club International, PULSE)  மற்றும் அது சார்ந்த  நெட் ஒர்க்களை குறிக்கும்.

‘’ டிஸ்கவர் குளோபல் நெட்வொர்க் மூலம் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும்போது ரூபே குளோபல் கார்டுகளை வைத்திருப்பவர்கள் லட்சக்கணக்கான இடங்களில் அதனை பயன்படுத்த முடியும் இது எங்களின் புதிய கூட்டு மூலம் ஏற்பட்ட நன்மையாகும். ரூபே குளோபல் கார்டு பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் கார்டுகளை வைத்திருப்பவர்கள் இந்தியாவுக்கு வெளியே பயணம் செய்யும்போது கூடுதல் சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள முடியும்” என  டிஸ்கவர் நிறுவனத்தின் சர்வதேச வணிக மேம்பாட்டு தலைவர் மற்றும் மூத்த துணைத் தலைவர் ஜோ ஹர்லி தெரிவித்தார்.


தற்போது ரூபே குளோபல் கார்டுகள் ஐந்து வகையாக வெளியிடப்பட்டுள்ளன. ரூபே கிளாசிக் டெபிட் கார்டு, ரூபே கிளாசிக் கிரெடிட் கார்ட், ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு, ரூபே பிளாட்டினம் கிரெடிட் கார்டு மற்றும் ரூபே செலக்ட் கிரெடிட் கார்டு (RuPay Classic Debit Card, RuPay Classic Credit Card, RuPay Platinum Debit Card, RuPay Platinum Credit Card and RuPay Select Credit Card) ஆகியவை அந்த ஐந்து வகையான ரூபே குளோபல் கார்டுகள் ஆகும்.

ரூபே செலக்ட் கிரெடிட் கார்ட் முக்கிய அம்சங்கள்

 (Features of RuPay Select Credit Card)

  • வசதியானவர்கள் மத்தியில் இந்த கார்டு பிரபலப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இது வாழ்க்கை முறை (lifestyle) சலுகைகளை அளிப்பதாக இருக்கும்

  • இந்த கார்டுகள் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் 700க்கும் மேற்பட்ட ஓய்வு இடங்களில் (lounge)  பயன்படுத்த முடியும் இந்தியாவில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட ஓய்வு இடங்களில் பயன்படுத்த முடியும்.

  • பயணம், உணவு, பொழுதுபோக்கு (travel, dining and entertainment.) போன்ற சேவைகளை 24 மணி நேரமும் (24X7) இந்த கார்டு மூலம் வசதியாக பெற முடியும்

  • தனிநபர் விபத்துக் காப்பீடு (personal accident insurance) ரூ 10 லட்சம் அளிக்கப்படுகிறது 

  • ஏடிஎம்-ஐ பயன்படுத்தும்போது 5% பணம் திரும்ப அளிக்கப்படுகிறது. இதர சேவை இடங்களில் (POS) பயன்படுத்தும்போது 10% பணம் திரும்ப அளிக்கப்படுகிறது. இது வெளிநாடுகளில் இந்த கார்ட்டை பயன்படுத்தும்போது மட்டுமே கிடைக்கும்.

ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு முக்கிய அம்சங்கள்

(Features of RuPay Platinum Debit Card)

  • வாழ்க்கையை மிகவும் சிறப்பாக அனுபவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் இந்திய இளைஞர்களை  இலக்காக வைத்து இந்த கார்டு வெளியிடப்பட்டுள்ளது.

  • உணவகங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் மையங்கள் (restaurants, fuel stations) ஆகியவற்றில் ஆண்டு முழுக்க  கேஷ் பேக்  சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

  •  இணையதளம் மற்றும் கடைகளில் (online and offline)  பொருட்களை வாங்கும்போது விலையில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அளிக்கப்படுகிறது

  • இந்த கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ 2 லட்சம்  மதிப்பிலான தனிநபர் விபத்து காப்பீடு அளிக்கப்படுகிறது.

  • இந்த கார்டுகள் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் 700க்கும் மேற்பட்ட ஓய்வு இடங்களில் (lounge)  பயன்படுத்த முடியும் இந்தியாவில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட ஓய்வு இடங்களில் பயன்படுத்த முடியும்.

  • வெளிநாடுகளில் இந்த கார்ட்டை ஏடிஎம்-ல் பயன்படுத்தும்போது 5% பணம் திரும்ப அளிக்கப்படுகிறது. இதர சேவை இடங்களில்  பயன்படுத்தும்போது 10% பணம் திரும்ப அளிக்கப்படுகிறது. இது மட்டுமே கிடைக்கும்.
***


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...