மொத்தப் பக்கக்காட்சிகள்

ரெலிகேர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நெருக்கடி மிகுந்த நோய்கள் மற்றும் அறுவைச் சிகிச்சைகளுக்கான சூப்பர் மெடிகிளெயிம்


ரெலிகேர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் நெருக்கடிமிகுந்த நோய்கள் மற்றும் அறுவைச் சிகிச்சைகளுக்கான சூப்பர் மெடிகிளெயிம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

ü  நெருக்கடிமிகுந்த நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கான பிரிவில் இதுபோன்ற திட்டம் அறிமுகமாவது இதுவே முதல் முறையாகும்

ü  கிரிட்டிகல் மெடிகிளெயிம், கேன்சர் (புற்றுநோய் ) மெடிகிளெயிம், ஹார்ட் மெடிகிளெயிம் மற்றும் ஆபரேஷன் மெடிகிளெயிம் என பல்வேறு மெடிகிளெயிம் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் முன்னணி சுகாதார காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ரெலிகேர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் (Religare Health Insurance - RHI), சூப்பர் மெடிகிளெயிம் (Super Mediclaim) என்ற  பெயரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான காப்பீட்டு திட்டத்தை (hospitalization insurance product) அறிமுகப்படுத்தி உள்ளது

இதன்மூலம்  முக்கியமான நோய்கள் மற்றும் அறுவைச் சிகிச்சைகளுக்கு பல்வேறு வகையான சுகாதாரக் காப்பீடுகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.   புற்றுநோய்க்கான சிகிச்சை, இதய நோய்க்கான சிகிச்சை உள்ளிட்ட 32 விதமான முக்கிய நோய்களுக்கும் அறுவைச் சிகிச்சைக்கும் இந்நிறுவனம் வழங்கும் பல்வேறு வகையான திட்டங்கள் பயனளிக்கும்

நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கான மருத்துவ பரிசோதனைவெளி நோயாளியாக இருப்பதற்கான செலவுகள் (OPD expenses), உளவியல் ஆலோசனை, பராமரிப்பு மற்றும் சிகிச்சை செலவு, மீட்பு செலவுகள்நோய் மீண்டும் வராமல் இருப்பதற்கான செலவுகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை இந்த திட்டம் தருவதால் இது  செலவு குறைந்த மிகச்சிறந்த திட்டமாக கருதப்படுகிறது.

  அனைத்து விதமான புற்றுநோய்களுக்கான ஆரம்ப அறிகுறிகுறிகள்  முதல்  அனைத்து கட்டங்களிலும் சிகிச்சை அளிக்க உதவும் கேன்சர் மெடிகிளெயிம் (Cancer Mediclaim), இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஞ்ஜியோபிளாஸ்டி, மாரடைப்பு, பைபாஸ் சர்ஜரி உள்ளிட்ட 17 வகையான நெருக்கடியான கட்டங்களில் கைகொடுக்கும் ஹார்ட் மெடிகிளெயிம் (Heart Mediclaim),  புற்றுநோய், மாரடைப்பு, உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை, பக்கவாதம் உள்ளிட்ட 32 முக்கிய நோய்களின்போது பாதுகாப்பு அளிக்கும் கிரிட்டிகல் மெடிகிளெயிம் (Critical Mediclaim) மற்றும் அனைத்து வகையான அறுவைச் சிகிச்சைகளுக்கான ஆபரேஷன் மெடிகிளெயிம் (Operation Mediclaim) ஆகிய 4 வகைகளில் சூப்பர் மெடிகிளெயிம் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


நோயாளிகளின் வாழ்க்கை மற்று சிறப்பான அனுபவத்தை  மேம்படுத்தும் நோக்கத்துடன், வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கத்தக்க வகையிலான எளிய தவணை முறைகள் இத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


 சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் தேவையைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள ரெலிகேர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் & வர்த்தக செயல்பாடுகள் பிரிவின் தலைவர்  திரு. அஷூதோஷ் ஸ்ரோத்ரியா (Mr. Ashutosh Shrotriya, Head - Products & Business Process, Religare Health Insurance Ltd), 

நிச்சயமற்ற தன்மை நிலையாக உள்ள இந்தக் காலத்தில், உங்கள் ஆரோக்கியம் நிலையானதாக இருக்க வேண்டும். ஒரு வீட்டில் ஒருவர் முக்கியமான, நெருக்கடியான நோயால் பாதிக்கப்பட்டாலே, அந்தக் குடும்பம் முழுவதும் துயர நிலைக்கு ஆளாகும் நிலை  ஏற்படும் என்பதை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம்எனவே, சிறந்த சுகாதார காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பதற்கான வழிக்காட்டலும், சிறந்த மருத்துவ சேவைகளை பெறுவதற்கான நிதியியல் ரீதியாக தயாராக இருப்பதும் மிக முக்கியமான விஷயங்களாகும். மருத்துவ காப்பீடு என்பது ஒரு சாதாரண விஷயமல்ல. அது நாள்முழுவதும் நம்முடன் இணைந்திருக்க வேண்டிய விஷயமாகும். சூப்பர் மெடிகிளெயிம் திட்டத்தின் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வாழ்நாள் முழுவதற்குமான கவனிப்பு மற்றும் சுகாதார பாதுகாப்பை வழங்க விரும்புகிறோம்என்றார்.
 இந்தியாவின் தென்பகுதியில் இந்நிறுவனத்துக்கு 25 மையங்கள் உள்ளன. இதில் 3 மையங்கள் சென்னையில் அமைந்துள்ளன. நகரமயமாக்கல் வேகமெடுத்து வரும் நிலையில், ரெலிகேர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் சிகிச்சைக்கு அதிகமாக செலவாகும் முக்கியமான நோய்கள்  மற்றும் அதிகரித்து வரும் அறுவைச் சிகிச்சைகள் பற்றி மக்களிடம் விளக்கிக் கூறிவருகிறது.  

மக்களுக்கு மலிவான விலையில் உயர்ந்த தரமான சுகாதார நலன்களை வழங்கவேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்கி வரும் ரெலிகேர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய திட்ட விரிவாக்கம், தற்போது நாடெங்கிலும் உள்ள மக்களின் ஆரோக்கிய பராமரிப்பு தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்.


 இதுபற்றி மேலும் கூறிய திரு. அஷூதோஷ் ஸ்ரோத்ரியா, மக்களால் அதிகம் விரும்பப்படும், மக்களை நன்றாக கவனிக்கும், மலிவான, புதுமையான, நம்பகமான சுகாதார காப்பீட்டு சேவை நிறுவனம் என்ற நற்பெயரை பெறும்  எங்கள் முயற்சியின் ஒரு பகுதியாக சூப்பர் மெடிகிளெயிம் விளங்குகிறதுஎன்றார்.

சிக்கலான நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எப்போதும் தரமான சிறப்புவாய்ந்த, தரமான சுகாதார வசதிகளை வழங்கும் இந்நிறுவனத்தின் கொள்கைகளை உறுதிப்படுத்தும் வகையில் இத்திட்டம் தொடங்கப்படுகிறது. சூப்பர் மெடிகிளெயிம் திட்டமானது, வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டை வழங்கி மருத்துவத் துறையில் உள்ள தரமான சிகிச்சைகளை பெற பொருளாதார ரீதியாக அவர்களை தயார்படுத்துகிறது.

 உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation  -WHO),  நடத்தியுள்ள உலக அளவிலான ஆய்வில் இந்திய நகர்ப்புறங்களில் உள்ள 30 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் அதிக எடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதய நோயால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும்  10 லட்சம் பேர் புதியதாக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்

2025-ம் ஆண்டு இறுதிக்குள் 57 மில்லியன் நபர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் காற்று மாசு காரணமாக  சுவாச நோய்களால்  ஒவ்வொரு ஆண்டும் இரண்டு பில்லியன் உற்பத்தி தினங்கள்  எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...