Helios Mutual Fund Launches
Helios Small Cap Fund
ஹீலியஸ்
மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகம் செய்திருக்கும் ஹீலியஸ் ஸ்மால் கேப் ஃபண்ட்:
இந்தியாவின்
அடுத்த கட்ட வளர்ச்சியை நிர்ணயிக்கும் வளர்ந்து வரும் சிறு நிறுவனங்களில் முதலீடு
மும்பை,
நவம்பர் 10, 2025: ஹீலியஸ் மியூச்சுவல் ஃபண்ட்
நிறுவனம் (Helios
Mutual Fund)
வளர்ந்து வரும் சிறிய நிறுவனங்களில் அதிகமாக முதலீடு செய்யும் ஓபன் என்டட் (Open
Ended) வகை சார்ந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்தத்
திட்டத்தின் புதிய ஃபண்ட் வெளியீடு (New Fund Offer -NFO). நவம்பர் 6, 2025 தொடங்கி
நவம்பர் 20, 2025 முடிவடைகிறது. இந்தத் திட்டத்தின் பெஞ்ச்மார்க் நிஃப்டி ஸ்மால்
கேப் 250 TRI குறியீடு ஆகும். மேலும் ஹீலியஸ் நிறுவனத்தின் நிரூபிக்கப்பட்ட
ஆராய்ச்சி சார்ந்த உறுதியான முதலீட்டு செயல்முறையை இந்தத் திட்டம் பின்பற்றும்.
ஹீலியஸ்
இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு. தின்ஷா இரானி
(Mr Dinshaw Irani, CEO
& MD, Helios India) இந்த ஃபண்ட் திட்டத்தைப் பற்றி அறிமுகம் செய்து பின்வருமாறு
குறிப்பிட்டுள்ளார்:
‘’வெளிநாட்டு
போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (Foreign Portfolio
Investors - FPIs)
தொடர்ந்து பங்குகளை விற்று வெளியேறினாலும், பல்வேறு எதிர்மறையான செய்திகளால்
பங்குச் சந்தை பாதிப்பு அடைந்தாலும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதிகமாக இந்தியப்
பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதால்
சந்தை மீள் தன்மை உடையதாக திகழ்கிறது. தற்போதைய காலகட்டத்தில் எதிர்மறையான
செய்திகள் முடிவுக்கு வந்துள்ளதாக நாங்கள் நம்புகிறோம். இனி நேர்மறையான செய்திகள் வருவதற்கு வாய்ப்புள்ளது என்று
எதிர் நோக்குகிறோம். வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் மீண்டும் இந்தியப்
பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் காலகட்டம் இது என்று எதிர்பார்க்கிறோம். இதன்
காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகள் சாதகமாக வர்த்தகம் ஆவதற்கு வாய்ப்பு
ஏற்பட்டுள்ளது. ஜிடிபி வளர்ச்சி, கட்டுக்குள் இருக்கும் பணவீக்கம் மற்றும் மத்திய
அரசின் வலுவான நிதி மற்றும் பணவியல் கொள்கை காரணமாக நமது நாட்டின் மேக்ரோ பின்னணி
மற்ற நாடுகளோடு ஒப்பிட்டால் தனித்து நிற்கிறது. மத்திய அரசு மற்றும் மத்திய
ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கைகள் பணப்புழக்கத்தை அதிகரிக்க, வட்டி விகிதங்கள்
குறைக்க, தனி நபர்களின் சேமிப்பு உயர்த்திட, விலைவாசி குறைய காரணமாக இருக்கிறது.
இதன் காரணமாக மக்களின் ஒட்டுமொத்த நுகர்வு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பங்கு
சந்தையின் மதிப்பீடு (Valuations) மிதமாகவும், கார்ப்பரேட்
நிறுவனங்களின் வருவாய் எதிர்பார்ப்பு நிலைப்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் தருணம்
உலக முதலீட்டாளர்கள் நமது சந்தையில் நுழைவதற்கான சரியான தருணத்தை ஏற்படுத்தி
தந்திருக்கிறது.
வெளிநாட்டு
போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள், MSCI குறியீட்டில் இடம் பெற்றுள்ள வளர்ந்து வரும்
நாடுகளில் செய்துள்ள முதலீடு 3% நமது நாட்டில் குறைவாகவே இருக்கிறது. இது 2009 ஆம்
ஆண்டிற்கு பிறகு மிகவும் குறைவான முதலீடாக பார்க்கப்படுகிறது. MSCI EM
குறியீட்டோடு இந்தியாவின் குறைவான செயல்திறன் வரலாற்று உச்சத்தை தற்போது
எட்டியுள்ளது. கடந்த கால தரவுகள் படி இது போன்ற தருணங்களில் அதிகப்படியான முதலீடு
அடிப்படைகள் வலுப்பெறும் போது வருவது வாடிக்கை என்று ஜெஃப்ரிஸ் நிறுவனத்தின்
தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய
வட்டி விகிதங்கள் உச்சம் அடைந்துள்ளது, அமெரிக்க டாலர் மதிப்பு சீராக உள்ளது
ஆகியவை வளரும் பங்குச் சந்தைகள் மீண்டு எழுவதற்கு சாதகமாக இருக்கின்றன்.
குறிப்பாக, வட ஆசியாவின் சுழற்சி அடிப்படையான மந்த நிலையுடன் ஒப்பிடும் போது நமது
நாட்டின் மீள் வளர்ச்சி சிறப்பாக அமைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. லார்ஜ் கேப்
நிறுவனங்களின் ஒரு வருடத்திற்கான முன்னோக்கி பி/இ விகிதங்கள் அதிக மதிப்பில்
இருக்கும் இந்தக் காலகட்டம் சிறிய நிறுவனங்கள் கவர்ச்சிகரமான மதிப்பீட்டில்
இருக்கின்றன. பி.இ.ஆர். (PER) அடிப்படையில் பெரிய நிறுவனங்கள் 15-20% மலிவான மதிப்பீட்டில் வர்த்தகம்
ஆனாலும் வருவாய் சி.ஏ.ஜி.ஆர் (CAGR). மதிப்பீட்டில் சிறிய
நிறுவனங்கள் கவர்ச்சிகரமான மதிப்பீட்டில் இருப்பதாக ஜெஃப்ரிஸ் நிறுவனத்தின் உள்
ஆராய்ச்சி குழு தரவுகள் தெரிவிக்கின்றன.
சிறிய
நிறுவனங்கள் நமது நாட்டின் உற்பத்தி மற்றும் நுகர்வு சுழற்சிகளில் ஆழமாக
இணைக்கப்பட்டுள்ளது. இது வரலாற்று ரீதியாக உள்நாட்டு பொருளாதார விரிவாக்கத்தில்
சிறிய நிறுவனங்களின் வளர்ச்சியை உறுதி செய்வதாக இருக்கிறது. வரலாற்று அடிப்படையில்
வளர்ச்சி சாத்தியப்படும் போது சிறிய நிறுவனங்கள் சிறப்பாக இந்தக் காலகட்டத்தில்
செயல்படும்.
பணப்புழக்கம்
அதிகரித்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors- FIIs) அதிகம் முதலீடு செய்யும் காலகட்டத்தில் சிறிய நிறுவனங்கள் வரலாற்று
ரீதியாக சிறப்பாக செயல்பட்டுள்ளன
.
மேக்ரோ
காரணிகள் மீது ஏற்படும் நம்பிக்கை மற்றும் நிறுவனங்களின் வருமான தெரிவு நிலை
காரணமாக சிறிய நிறுவனங்கள் சார்ந்த குறியீடு மறுமதிப்பீடு செய்வதற்கு வாய்ப்பு
ஏற்பட்டுள்ளது.
ஹீலியோஸ்
இந்தியாவின் வணிகத் தலைவர் திரு. தேவிபிரசாத் நாயர் (Mr.
Deviprasad Nair, Business Head - Helios India,) இந்தத் திட்டம் பற்றி தமது
கருத்துக்களை பகிர்ந்தார்:
இந்தியாவின்
சிறிய நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடு முதலீட்டாளர்களுக்கு நீண்ட வளர்ச்சிக்கு
வாய்ப்புள்ள நிறுவனங்களில் முன்கூட்டியே முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.
இந்த நிறுவனங்களின் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகம் வெளியில் தெரியாமல் இருந்தாலும்
புதுமை, உள்நாட்டு நுகர்வு மற்றும் உற்பத்தி விரிவாக்கம் ஆகியவற்றின் காரணமாக
வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புள்ளதாக இருக்கிறது. முறையான ஆராய்ச்சி மற்றும் ரிஸ்க் மேலாண்மை
மூலம் சரியான நிறுவனங்களில் முதலீடு செய்வது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு கட்டாய
வாய்ப்புகளை வழங்க கூடியது என்று நாம் நம்புகிறோம்.
இந்தியாவின்
விரிவடைந்து வரும் எம்.எஸ்.எம்.இ (Micro, Small, and Medium Enterprises. MSME)
சூழல் அமைப்பு, சிறிய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கிறது. ஆகஸ்ட் 2025 நிலவரப்படி, நமது நாட்டில் உள்ள 6.5
கோடிக்கு மேற்பட்ட எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் 27 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு
கொடுத்துள்ளது. சிறு நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் டிஜிட்டல் சேவைகள்
கிடைப்பது, சந்தை மற்றும் வாடிக்கையாளருக்கு இடையே இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி
சிறிய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது.
ஆரோக்கிய பராமரிப்பு, ரசாயனம், மூலதன பொருட்கள் மற்றும் நுகர்வு சேவைகள் துறை சார்ந்த நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களின் குறியீட்டில் குறைவாகவே இடம்பெற்றுள்ளன. இது போன்ற நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களின் குறியீட்டில் தான் அதிகம் இடம் பெற்றுள்ளன. இந்தத் தனித்துவமான துறைகள் இந்தியாவின் மூலதனம் மற்றும் நுகர்வு சுழற்சிகளில் இருந்து விகிதாசார மற்ற முறையில் பயன் அடைய வாய்ப்புள்ளது.
ஃபண்ட் முக்கிய விவரங்கள்
• NFO
காலம்: நவம்பர் 6 - நவம்பர் 20, 2025
• பெஞ்ச்மார்க்: நிஃப்டி ஸ்மால் கேப் 250 டிஆர்ஐ
• குறைந்தபட்ச விண்ணப்பம்: ₹ 5,000 (மற்றும் அதன் பிறகு ₹ 1 இன்
மடங்குகளில்)
• குறைந்தபட்ச கூடுதல் முதலீடு: ₹ 1,000 (மற்றும் அதன் பிறகு ₹ 1 இன்
மடங்குகளில்)
• வகை: ஸ்மால்-கேப் நிறுவனங்களில் முக்கியமாக முதலீடு
செய்யும் ஓபன் எண்டெட் ஈக்விட்டி ஃபண்ட் திட்டம்
ரிஸ்க்கோ
மீட்டர்: மிக அதிகம்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
கே.பி.வெங்கடராமகிருஷ்ணன்,
நிறுவனர், விருக்ஷம் ஃபின்மார்ட் பிரைவேட் லிமிட்,
(Viruksham Finmart Private Ltd)
சென்னை
இ மெயில் : kpvenkat02@gmail.com
செல் நபம்பர் : 98410 34997
நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. கே.பி.வெங்கடராமகிருஷ்ணன்
அவர்களின் கட்டுரைகளை படிக்க
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.