ஆடம்பர வாழ்க்கையில் புதியதொரு மாற்றத்தை கொண்டு வரும் ஜிடிபி அர்பன்
டெவலப்பர்ஸ்
சென்னை ஈசிஆரில் செயற்கை
கடற்கரையுடன் 32 ஏக்கரில் அடுக்குமாடி
குடியிருப்புகள் வில்லாக்களுடன் உருவாகும் ‘ரிபப்ளிக் ஆப் நேச்சர்’
----------
~
இயற்கையுடன் இணைந்து வாழ விரும்பும் மக்களுக்காக குறைந்த
அளவிலான வில்லாக்களுடன் பரந்த அளவிலான இயற்கை பரப்பில் அமைந்துள்ளது
~
32 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இது 'கார் இல்லாத'
சமூகமாகும், மேலும் இங்கு நான்கு இயற்கை குளங்கள், தாவர கால்வாய் மற்றும்
ஆறு ஏக்கருக்கும் அதிகமான இடத்தில் பூர்வீக தாவரங்களின் பசுமை போர்வையை கொண்டிருக்கும்
~
இங்கு உலகத்தரம் வாய்ந்த சொகுசு ஓட்டலான செலக்ஷன்ஸ்
பிராண்ட் ஓட்டலையும் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனியுடன் இணைந்து கொண்டு வருகிறது
~
இதன் தொடர்ச்சியாக ஜிடிபி சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிராண்டட் வில்லா மற்றும் வில்லமென்ட் திட்டங்களை துவக்க
உள்ளது
~
‘ரிபப்ளிக் ஆப் நேச்சர் மைக்ரோநேஷன்’ வரும் 5
ஆண்டுகளுக்குள் ரூ.2500 கோடியில் 4 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது
சென்னை, 11 நவ 2025- சென்னையின் மிகவும் பிரபலமான
ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனங்களில் ஒன்றான ஜிடி பாரதி அர்பன் டெவலப்பர்ஸ்
நிறுவனம், இந்தியாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் கடற்கரையான
மைக்ரோநேஷன் உடன், கிழக்கு கடற்கரை சாலையில் ஆடம்பர வாழ்க்கையுடன்
அமைதியான இயற்கை சூழலில் வாழ விரும்பும் மக்களுக்காக ‘ரிபப்ளிக் ஆப் நேச்சர்’ என்னும் வில்லா குடியிருப்பு
திட்டத்தை இன்று அறிவித்தது.
இந்த முன்னோடி
திட்டம் ஆடம்பர வாழ்க்கை, இயற்கையால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் நிலையான
வளர்ச்சியை ஒன்றிணைத்து, இந்தியா முழுவதும் உயர்தர வாழ்க்கையை மறுவரையறை
செய்கிறது.
சென்னையின் கிழக்கு
கடற்கரை சாலையின் அமைதியான கடற்கரை அருகே அமைந்துள்ள இந்தக் குடியிருப்பு, கட்டிடக்கலை நேர்த்தியுடன் சுற்றுச்சூழலுக்கு
உகந்த முறையில் கட்டப்படுகிறது. இங்குள்ள அடுக்குமாடி குடிருப்புகள் மற்றும் வில்லாக்கள்
அனைத்தும் உலகத்தரம் வாய்ந்த வசதிகளைக் கொண்டிருக்கும் என்று இந்நிறுவனம்
தெரிவித்துள்ளது.
மேலும் பிரத்யேக
விருந்தோம்பல் அனுபவத்தை வழங்கும் வகையில் இங்கு ஜிடிபி, இந்தியாவின் சிறந்த பிராண்டாக தர வரிசைப்படுத்தப்பட்டு உள்ள செலக்ஷன்ஸ் பிராண்ட் ஓட்டலை இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனியுடன் இணைந்து துவக்க இருக்கிறது. அதற்காக
அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஹோட்டல், உடல்நலத்தில்
கவனம் செலுத்தும் மக்களின் இயற்கைக்கான நுழைவாயிலாக இருக்கும். மேலும், இது
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையின் வார இறுதி நாட்களை மகிழ்ச்சியாக கழிப்பதற்கான
ஒரு சிறப்புமிக்க இடமாகவும் உருவாக இருக்கிறது.
இது குறித்து ஜிடிபி
அர்பன் டெவலப்பர்ஸ் தலைவர் பாரத் தோஷி கூறுகையில், வாழ்வதற்கும் முதலீடு செய்வதற்கும் தகுதியான ஆடம்பர இடங்களை உருவாக்குவதில்
நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். சென்னையின் தனித்துவமிக்க ‘ரிபப்ளிக் ஆப் நேச்சர்’, மனிதனால் உருவாக்கப்பட்ட கடற்கரை, இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனியின் செலக்ஷன்ஸ் பிராண்ட் ஹோட்டல் மற்றும் இன்னும் அறிவிக்கப்படாத சர்வதேச அளவில்
புகழ்பெற்ற பிராண்டட் குடியிருப்புகள் உள்ளிட்ட பல முதன்மையான அம்சங்களைக் கொண்டு இருக்கும்.
இதன் காரணமாக இங்கு முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு அது மிகுந்த
மதிப்புமிக்கதாக இருக்கும். ஏனெனில் இங்கு ஒரு ஏக்கர் நிலத்தில் மொத்தம் 15 யூனிட்கள்
மட்டுமே கட்டப்பட உள்ளன,
இதில் அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லமென்ட்கள்,
வரிசை வீடுகள் மற்றும் வில்லாக்கள் ஆகியவை அடங்கும் என்று
தெரிவித்தார்.
இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அருண் பாரதி கூறுகையில், ரிபப்ளிக் ஆப் நேச்சர்’ என்பது இயற்கையுடன் இணைந்த ஆடம்பரத்தை விரும்பும் மக்களுக்காக உருவாக்கப்படும் ஒரு திட்டமாகும். ஒரு பக்கம் காடு மற்றும் மலை, மறுபுறம் கடல் மற்றும் கடற்கரை என ஒரு தனித்துவமான மைக்ரோநேஷனல் அனுபவத்தை உருவாக்க கட்டிடக் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் என அனைவருடனும் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
உரிமையாளர்கள்
தங்கள் குடியிருப்புகளின் வாடகை, மறுவிற்பனை மற்றும் உணவு
மற்றும் பானங்கள், வீட்டு பராமரிப்பு மற்றும்
குடியிருப்புகளின் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நாங்கள் அறிமுகம்
செய்ய இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
About GTB Developers
GT
Bharathi Urban Developers Pvt. Ltd. (GTB) is a Chennai-based real
estate and infrastructure development company with a legacy of excellence
spanning over [insert number] years. Renowned for its innovation-led approach
and commitment to sustainable urban design, GTB has delivered landmark
residential, commercial, and hospitality-led developments across Tamil Nadu.
The company’s vision is to create enduring communities that embody responsible
luxury and holistic living for future generations.

