அபாயத்தைக் குறைத்து வருமானத்தை
சமநிலைப்படுத்த ‘மல்டி அசெட் ஒதுக்கீட்டு பண்ட்’: பிஜிஐஎம் இந்தியா சொத்து
மேலாண்மை நிறுவனம் அறிமுகம்
------------
புதிய நிதி திட்டம் நவம்பர் 11 துவங்கி நவம்பர் 25-ல்
நிறைவடைகிறது
------
சென்னை, 11 நவ.2025- முதலீட்டாளர்களுக்கு அபாயத்தை குறைத்து வருமானத்தை
சமநிலைப்படுத்தும் விதமாக ‘மல்டி அசெட் ஒதுக்கீட்டு பண்ட்’ என்னும் மியூச்சுவல்
பண்ட் திட்டத்தை பிஜிஐஎம் இந்தியா சொத்து மேலாண்மை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் திரட்டப்படும் நிதியானது குறைந்தது மூன்று வெவ்வேறு சொத்து பிரிவுகளில்
முதலீடு செய்யப்படும். ஒட்டுமொத்த போர்ட்போலியோ அபாயத்தைக் குறைத்து நிலைத்தன்மையை
வழங்குவதற்காக வெவ்வேறு சொத்து பிரிவுகளில் முதலீடு செய்வதன் மூலம் ஆபத்து மற்றும்
வருமானத்தை சமநிலைப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
இந்த புதிய நிதி திட்டம் நவம்பர் 11, 2025 அன்று துவங்கி நவம்பர் 25, 2025
அன்று முடிவடைகிறது. மேலும் டிசம்பர் 03, 2025 அன்று மீண்டும் திறக்கப்படுகிறது.
இந்த நிதி, சந்தை சுழற்சிகளுக்கு ஏற்ப மாறும் ஒதுக்கீட்டைக் கொண்டு, பங்கு,
கடன், தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு, ரியல் எஸ்டேட் முதலீட்டு
அறக்கட்டளைகள், உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் போன்ற பலதரப்பட்ட சொத்து
வகைகளில் முதலீடு செய்யப்படும்.
இது குறித்து பிஜிஐஎம் இந்தியா சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைமை செயல்
அதிகாரி அபிஷேக் திவாரி கூறுகையில், பிஜிஐஎம் இந்தியா மல்டி அசெட்
ஒதுக்கீட்டு பண்ட், முதலீட்டாளர்கள் சொத்து வகுப்புகளில் வாய்ப்புகளைப் பெறும்போது
நிச்சயமற்ற தன்மையைக் கடக்க உதவும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
"முதலீட்டில் பல்வகைப்படுத்தல் மட்டுமே இலவச மதிய உணவு" என்ற பிரபலமான
பழமொழி, பல சொத்து ஒதுக்கீட்டு நிதிகளை மனதில் கொண்டு இது உருவாக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ஒரு முதலீட்டாளர் தனது முதலீட்டை மேம்படுத்தவும், வருமான திறனை எந்தவித
சமரசம் செய்யாமல் மேம்படுத்தவும் முடியும் என்று தெரிவித்தார்.
இது குறித்து இந்நிறுவனத்தின் தலைமை தகவல் அதிகாரி வினய் பஹாரியா
கூறுகையில், நிச்சயமற்ற உலகில், பல சொத்து ஒதுக்கீட்டு நிதிகள் தெளிவு,
பல்வகைப்படுத்தல் மற்றும் மீள்தன்மையை வழங்குகின்றன. நிலையற்ற சந்தைகளில்,
பல்வகைப்படுத்தல் என்பது வெறும் உத்தி மட்டுமல்ல, அது ஒரு தேவையும் கூட. எங்களின்
புதிய திட்டம் அதை வழங்க முயற்சிக்கிறது என்று தெரிவித்தார்.
Asset Allocation
இது குறித்து பிஜிஐஎம் இந்தியா அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் மூத்த நிதி மேலாளர் விவேக் சர்மா
கூறுகையில், பிஜிஐஎம் இந்தியா
மல்டி அசெட் ஒதுக்கீட்டு பண்ட் சந்தை சுழற்சிகள் முழுவதும் ஆபத்து இல்லா விளைவுகளை
வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பங்கு, கடன் மற்றும் பொருட்களில் முதலீடு
செய்வதன் மூலம், அது எதிர்மறையான அபாயத்தை குறைக்கும் அதே வேளையில்,
முதலீட்டாளர்கள் நீண்ட கால பலனை பெற முடியும் என்று தெரிவித்தார்.
ஏன் பல்வகை சொத்தில் முதலீடு?
கடந்த காலங்களில் சிறப்பான செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்ட சொத்துக்களிலேயே
முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்கிறார்கள். இந்தப் போக்கு, அவர்கள் குறைவான
செயல்திறன் கொண்ட முதலீடுகளை விற்கவும், மிகைப்படுத்தப்பட்டவற்றை வாங்கவும்
காரணமாகிறது, இது குறைந்த வருமானத்திற்கு வழிவகுக்கும். எந்தவொரு சொத்து
வகுப்பிலும் வலுவான ஆதாயங்கள் பெரும்பாலும் கணிசமான நிகர வரவுகளுக்கு
வழிவகுக்கும், மறுபுறம், மோசமான செயல்திறன் பொதுவாக விரைவான விற்பனையைத்
தூண்டுகிறது. இந்த எதிர்வினை நடத்தை - விலைகள் அதிகமாக இருக்கும்போது வாங்குவதும்,
அவை குறைவாக இருக்கும்போது விற்பதும் - நீண்ட கால போர்ட்போலியோ வளர்ச்சியைப்
பாதிக்கும். சமீபத்திய நகர்வுகளின் அடிப்படையில், உணர்ச்சிபூர்வமான
முடிவெடுப்பதைக் குறைக்கும் ஒரு நிலையான, நீண்ட கால உத்தியைக் கடைப்பிடிப்பதன்
மூலம் முதலீட்டாளர்கள் அதிக நன்மையை பெற முடியும்.
பல சொத்து ஒதுக்கீடு நிதியின் நன்மைகள்:
• வெவ்வேறு சொத்து பிரிவுகள் வெவ்வேறு பொருளாதார சூழ்நிலைகளில்
வித்தியாசமாக செயல்படுகின்றன.
• நீண்ட கால செல்வத்தை உருவாக்குவதற்கு பங்குகள் சிறந்தவை, ஆனால் வீழ்ச்சி
சுழற்சியின் போது அவை பாதுகாப்பை வழங்குவதில்லை, அதே நேரத்தில் கடன் நிலையான
வருமானத்தை வழங்கக்கூடும், ஆனால் மேல்நோக்கிச் செல்லத் தவறிவிடும்.
• விலைமதிப்பற்ற உலோகங்கள் வீழ்ச்சி சுழற்சிகளின் போது அதிகம் கீழ்நோக்கிச்
செல்லாமல் பாதுகாப்பை வழங்கக்கூடும்.
• பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்போலியோ நீண்ட காலத்திற்கு
ஆபத்து-சரிசெய்யப்பட்ட வருமானத்தை அடைய உதவும்.
• பங்கு சரிவுகளின் போது வரலாற்று ரீதியாக சிறப்பாகச் செயல்பட்ட
விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான மூலோபாய ஒதுக்கீடு. (ஆதாரம்: MFI ICRA, FactSet).
எ.கா.:- உலகளாவிய நிதி நெருக்கடி (2008), யூரோ மண்டல இறையாண்மை கடன் நெருக்கடி
(2010).
இந்த புதிய நிதி திட்டத்தை விவேக் சர்மா (ஈக்விட்டி பகுதி), ஆனந்த
பத்மநாபன் ஆஞ்சநேயா (ஈக்விட்டி பகுதி), உத்சவ் மேத்தா (ஈக்விட்டி பகுதி) மற்றும்
புனீத் பால் (கடன் பகுதி) ஆகியோர் நிர்வகிப்பார்கள். இந்த நிதி நிப்டி 500
டிஆர்ஐயில் 60 சதவீதம் மற்றும்
கிரிசில் குறுகிய கால பத்திர குறியீட்டில் 20 சதவீதம் மற்றும் தங்கத்தின் உள்நாட்டு
விலைகளில் 10 சதவீதம் வெள்ளியின்
உள்நாட்டு விலைகளில் 10 சதவதம் ஆகியவற்றில்
முதலீடு செய்யப்பட உள்ளது.
பிற முக்கிய அம்சங்கள்:
·
திட்டம்/விருப்பங்களைப் பொறுத்தவரை வருமானத்தை பெறுதல் மற்றும் மூலதனத்தை
திரும்பப் பெறுதல் விருப்பம் / வருமான வினியோகம் மற்றும் மூலதன திரும்பப் பெறுதல்
விருப்பத்தின் மறு முதலீடு ஆகியவை உள்ளன.
·
குறைந்தபட்ச விண்ணப்பத் தொகை ரூ.5,000/- மற்றும் அதன் பிறகு ரூ.1/-ன்
மடங்குகளில் முதலீடு செய்யலாம். கூடுதல் குறைந்தபட்சம் ரூ.1,000/- மற்றும் அதன்
பிறகு ரூ.1/-ன் மடங்குகளில் முதலீடு செய்யலாம்.
·
வெளியேறும் கட்டணத்தைப் பொறுத்தவரை யூனிட்கள் ஒதுக்கப்பட்ட நாளிலிருந்து 90
நாட்களுக்குள் வெளியேறுபவர்களுக்கு: 0.50 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.
யூனிட்கள் ஒதுக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மேல் வெளியேறுபவர்களுக்கு
எந்த கட்டணமும் இல்லை.
