திருப்பதி வெங்கடாஜலபதியிடம் இந்த நிர்வாக பாடங்களை கற்றிருக்கிறீர்களா? Tirumala
திரு. LVR சிவகுமார்
திருப்பது
திருமலை உள்நுழையும்போதே கருடாழ்வாருடன் எம்.எஸ்.சுப்புலஷ்மி
`கெளசல்யா சுப்ரஜா ராமபூர்வா...’ என சுப்ரபாதத்துடன் வரவேற்க... மெய் சிலிர்த்துப்
போனேன். திருமலை... பூலோக வைகுண்டம் என்றால் அது மிகையாகாது.
ஒவ்வொரு முறை வரும்போதும், ஒரு புதிய அனுபவம். அந்த
வகையில், சென்ற முறை உதித்தது ஒரு புதிய சிந்தனை (அவன்தான் தோன்ற வைத்தானா!). நிர்வாகம்
என்கிற ‘மேனேஜ்மென்ட்’ என்ற கண்ணோட்டத்தில் ஏழுமலையில் நான் பார்த்த, கற்றுக்கொண்ட
7 விஷயங் களை... பகிர்ந்துகொள்கிறேன் உங்களுடனும்.
LVR சிவகுமார் |
1
சுய ஒழுக்கம் (Self Discipline)
காலை 3 மணி
முதல் நள்ளிரவு 12 மணி வரை, ஒவ்வொரு நாளும், இடைவேளை இல்லாமல் பக்தர்களுக்கு
அருள்பாலிக்கிறார் பெருமாள். ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே ஓய்வு. ஒருநாள்கூட
விடுப்பு இல்லை... 365 நாள்களும் இடையறாத பணி.
இதன் மூலம்
இறைவன் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், சுய ஒழுக்கம் என்பது நேர
மேலாண்மையிலிருந்து துவங்குகிறது. அவரது உலகத்தில் அவர் மிகப்பெரிய பணக்காரராக
இருப்பதற்கு மிக முக்கியக் காரணம், ஒரு நாளைக்கு 21 மணி நேரம் நின்றுகொண்டே
பணிபுரிவது. நேரத்தை நிர்வாகம் செய்பவர்களே வெற்றியாளர்கள் ஆகிறார்கள்.
2
பொறுப்பு (Responsibility)
பெருமாள் தன்
பொறுப்பிலிருந்து சற்றும் விலகியதில்லை. தேடி வருபவர்களை ஆசீர்வதிக்கிறார், சொன்ன
வார்த்தையைக் காப்பாற்றுகிறார்,
அதற்காகப்
பணிபுரிகிறார், கேட்பதைக் கொடுக்கிறார். அதனால்தான், மக்கள் மீண்டும் மீண்டும்
அவரைத் தேடிச் சொல்கிறார்கள்.
3.
நேர்த்தி (Grooming)
ஆள் பாதி,
ஆடை பாதி எனும் பழமொழிக்கேற்ப, பல்வேறு வகையான மலர்கள், நகைகள், சந்தனம்,
குங்குமம், வில்வ இலைகள் எனப் பெருமாள் தன்னை ஒவ்வொரு வேளையும் அழகுப்படுத்திக்
கொள்கிறார். மேலும், தினசரி அபிஷேகத்துக்கு ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ,
நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவிலிருந்து புனுகு, பாரீஸில் இருந்து வாசனை
திரவியங்கள் எனப் பயன்படுத்துகிறார்.
நிர்வாக மேலாண்மைப்
பயிற்சியில், `First impression is the best impression’ என்பார்கள். உங்கள்
இலக்கை அடைவதற்கு இந்த இம்ப்ரஷனும் அவசியம் என்பதால், நேர்த்தியாக இருங்கள்
கேசவனைப்போல.