பாரம்பரிய பெருநிறுவனக் குழுமங்களில் முதலீடு செய்யும் சிறந்த வாய்ப்பு:
Baroda BNP Paribas Business Conglomerates Fund
பாரம்பரிய பெருநிறுவனக் குழுமங்களில் முதலீடு செய்யும் சிறந்த வாய்ப்பு:
பரோடா பிஎன்பி பரிபாஸ் பிசினஸ்
கங்க்ளோமரேட்ஸ் ஃபண்டு அறிமுகம்
சென்னை, 02 செப்டம்பர் 2025: இந்தியாவின் புகழ்பெற்ற பாரம்பரிய தொழில் – வணிக நிறுவனங்களில் முதலீடு செய்து அதன் ஒரு அங்கமாகத்திகழ நீங்கள் எப்போதாவது விரும்பியிருக்கிறீர்களா? பல முதலீட்டாளர்களுக்கு, இந்த கனவு எட்டாக்கனியாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தியாவின் வர்த்தகப் பெருநிறுவனக் குழுமங்கள், பல தலைமுறைகளாகவே காலத்தின் சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றியமைத்துக் கொள்வதிலும் மற்றும் தங்கள் தொழில் – வர்த்தக செயல்பாடுகளை பல்வகைப்படுத்துவதிலும் கணிசமான திறனையும், மனப்பக்குவத்தையும் வெளிப்படுத்தியிருப்பது வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இந்த
தகவமைப்புத் திறனே, அந்நிறுவனங்களின் பொருளாதார செல்வாக்கைத் தக்கவைத்துக்
கொள்ளவும் மற்றும் இன்னும் பெரிதாக வளரவும் வளர்க்க உதவியுள்ளது*. பல தசாப்தங்களாக, இந்த ஆரம்பகால தொழில்
நிறுவனங்கள், பல தலைமுறைகளைக் கடந்த வர்த்தக பெருநிறுவனக் குழுமங்களாக வளர்ந்து,
இப்போது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு மேலும் ஆற்றலையும், உத்வேகத்தையும் அளிக்க
விழைகின்றன.
பெரிய தொழில் – வர்த்தகப் பெருநிறுவனக் குழுமங்கள், பங்குச் சந்தைகளில்
பட்டியலிடப்பட்ட பல்வேறு நிறுவனங்களை கொண்டதாக இயங்கி வருகின்றன. உப்பு முதல் எஃகு
தயாரிப்பு வரை பல்வேறு தொழில்
பிரிவுகளில் இவைகள் ஈடுபட்டு வருவதால், இந்த பெருநிறுவன குழுமத்தைச் சேர்ந்த எந்த
நிறுவனங்கள் மிகச்சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதைக் கண்டறிவது பெரும்பாலான
முதலீட்டாளர்களுக்கு ஒரு சவாலான நடவடிக்கையாகவே இருக்கும்.
இந்தியாவின் முக்கிய வர்த்தகக் குழுமங்களின் ஒரு பகுதியாக இருக்கும்
நிறுவனங்களில் முதலீடுகள் செய்வது மீது சிறப்பு கவனம் செலுத்துகின்ற ஒரு
பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவை வழங்குவதன் மூலம், முதலீட்டாளர்கள் இந்தியாவின் தலைசிறந்த
வர்த்தகக் குழுமங்களில் முதலீடு செய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பரோடா பிஎன்பி பரிபாஸ் பிசினஸ் கங்க்ளோமரேட்ஸ் ஃபண்டு (Conglomerates
Fund) பெருமையுடன் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்த புதிய ஃபண்டு வெளியீடு (NFO) செப்டம்பர் 2, 2025 அன்று சந்தா (சப்ஸ்கிரிப்ஷன்) செலுத்துவதற்காகத் தொடங்கி, செப்டம்பர் 15, 2025 அன்று முடிவடைகிறது. சீரான முதலீட்டுத் திட்டம் (SIP) மூலம்
மாதத்திற்கு ரூ. 500 போன்ற குறைந்தபட்ச
தொகையில் முதலீட்டாளர்கள் இந்தியாவின் மிக முக்கியமான வர்த்தகக் குழுமங்களில்
முதலீடுகளின் வழியாக பங்கேற்கலாம்; அதே நேரத்தில், முதலீட்டிற்கு உகந்த நிறுவனங்களைத்
தேர்ந்தெடுக்கும் பணியை தொழில்முறை நிதி மேலாளர்கள் மற்றும் நிபுணர்களிடம்
ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம்.
"எங்கள் பரோடா பிஎன்பி பரிபாஸ் பிசினஸ் கங்க்ளோமரேட்ஸ் ஃபண்டு - ன் புதிய வெளியீடு (NFO), இந்தியாவில் பட்டியலிடப்பட்ட தொழில் – வணிக நிறுவனங்களைக் கொண்ட பல தலைமுறைகளாக இயங்கி வரும் புகழ்பெற்ற வர்த்தகக் குழுமங்களில் ஒரு பங்கினை சொந்தமாக்கிக்கொள்ள எங்கள் முதலீட்டாளர்களுக்கு வழிவகுக்கும்.
பொதுவாக, வர்த்தகக்
குழுமங்கள் பன்முகப்படுத்தப்பட்ட வருவாய் ஆதாரங்கள், மூலதனத்தை எளிதில் அணுகும்
வசதி, வலுவான பிராண்ட் மதிப்பு மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை ஆகியவற்றால்
பயனடைகின்றன. இவை, அவர்கள் தொடங்கும் எந்தவொரு புதிய தொழில் - வணிகத்திற்கும்
ஆரம்பத்திலேயே சிறப்பாக களத்தில் இறங்கி போட்டியிடுகின்ற சாதகமான வாய்ப்பை
வழங்குகிறது" என்றார் பரோடா பிஎன்பி பரிபாஸ் அசெட் மேனேஜ்மென்ட்
இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் பங்குகளுக்கான தலைமை முதலீட்டு அதிகாரி
திரு. சஞ்சய் சாவ்லா.
தொழில் – வர்த்தக பெருநிறுவனக் குழுமங்கள், இந்திய பொருளாதாரத்தின்
முதுகெலும்பாக விளங்குகின்றன; மேலும் நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும்
மதிப்புமிக்க நிறுவனங்களில் சில, இந்த பெருநிறுவனக் குழுமங்களைச் சேர்ந்தவை.
இந்தத் திட்டம் பிஎஸ்இ (மும்பை
பங்குச் சந்தையின்) செலக்ட் பிசினஸ் குரூப்ஸ் இன்டெக்ஸை (BSE Index) அளவுகோலாகக் கொள்ளும் மற்றும் குறைந்தது
நான்கு பெருநிறுவனக் குழுமங்களில் முதலீடு செய்யும். ஒவ்வொரு குழுமத்தின் மீதான
முதலீட்டு வரம்பு நிகர சொத்துக்களில் 25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூத்த நிதி
மேலாளர் திரு. ஜிதேந்திர
ஸ்ரீராம் மற்றும் நிதி மேலாளர்
மற்றும் ஆராய்ச்சி நிபுணர் திரு. குஷாந்த் அரோரா ஆகியோரால் இந்த ஃபண்டு திறம்பட
நிர்வகிக்கப்படும்.
"உலகளாவிய மறுசீரமைப்பு அல்லது குடும்பப் பிரிவினைகள் அல்லது
தலைமுறைகளுக்கு இடையிலான மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக, நிறுவனங்களை குழுமத்திலிருந்து
பிரித்தல் போன்ற கார்ப்பரேட்
நடவடிக்கைகள் மூலம் அவைகளின் மதிப்பை
வெளிக்கொணர்வதன் வழியாகவும் தொழில் – வர்த்தகப் பெருநிறுவனக் குழுமங்கள்
பயனடைகின்றன. இவை அனைத்தும் அத்தகைய தொழில் நிறுவனங்கள் மீது முதலீடு செய்வதற்கான
வாய்ப்பை மேலும் மேம்படுத்துகின்றன," என்றார் இத்திட்டத்தின் நிதி மேலாளர் திரு. ஜிதேந்திர ஸ்ரீராம்.#
இந்த வெளியீட்டின் மூலம், பரோடா பிஎன்பி பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்டு, முதலீட்டாளர்கள்
இந்தியாவின் புகழ்பெற்ற தொழில் – வணிகப் பெருநிறுவனக் குழுமங்களைச் சேர்ந்த நிறுவனங்களில்
முதலீடு செய்யும் சிறந்த வாய்ப்பிற்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் செல்வ உருவாக்கம்
என்பது எளிதில் அணுகக்கூடியதாகவும், கட்டமைக்கப்பட்டதாகவும் மற்றும் தொழில்
ரீதியான நிபுணத்துவத்துடன் நிர்வகிக்கப்படும்
செயல்பாடாக மாறுகிறது.
#இத்திட்டம் குறித்த
விரிவான தகவல்களுக்கு, எங்கள் திட்டத் தகவல் ஆவணத்தைப் (Scheme Information
Document) காணவும்.
SIP – சீரான
முதலீட்டுத் திட்டம்