மொத்தப் பக்கக்காட்சிகள்

வயதான காலத்தில் ஒரு தகப்பனின் , அனுபவ அறிவுரை Lifestyle



*வயதான காலத்தில் மிகவும் நொந்து போன ஒரு தகப்பனின் ,  தன் அனுபவ அறிவுரை*

*மூத்தோர்களின் கனிவான கவனத்திற்கு !!*

*1. வீட்டில் யாரிடமும்* நொய் நொய் என்று இருக்கக் கூடாது...

*2. தேவை யில்லாமல்*
குடும்பத்தினரிடம் பேசாதீர்கள்.

*3.மகனோ, மகளோ*
 அறிவுரை சொல்லாதீர்கள், *அவர்கள் வரவு செலவு கேட்காதீர்கள்*...  பணத்தின் அருமை தெரியவில்லை என்று திட்டாதீர்கள்.

*4. கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்*, உத்தரவு போடாதீர்கள், மரியாதையை எதிர் பார்க்காதீர்கள்.

*5. அந்தக் காலத்தில் அப்படி இருந்தோம்* -- ஒரு ரூபாய்க்கு படி அரிசி  வாங்கினோம்  என்று பெருமைப்பட்டுக் கொள்ளாதீர்கள்.

*6. உன்னை எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன்...* திருமணம் செய்தேன் என்று... டயலாக்கை திரும்பத் திரும்ப சொல்லாதீர்கள்.. *விரும்ப மாட்டார்கள்..*

*7. பேரன் பேத்தி மேல் அதிகம் அன்பு காட்டாதீர்கள்*,
பேரன், பேத்திகள் வளர்ந்த வுடன் தாத்தா பாட்டியை டீலில் விட்டு விடுவார்கள்.

*8. என் பேரன் என் பேத்தி - ரத்த சம்மந்தம்* இப்படி எல்லாம் பீலா விட்டு கற்பனை செய்யாதீர்கள், 
ஒரு வெங்காயமும் கிடையாது... *நீங்கள் வளர்க்கும் நாயை அன்போடு* தலையைத் தடவினால் அது வாலை ஆட்டும், அது போலத்தான் எல்லாம்... எப்போதும்.

*9. என் பேரன் என் பேத்தி நான் இல்லாமல்* தூங்க மாட்டான் என்று கப்சா விடாதீர்கள், 
அதே வாய் தான் பக்கத்து வீட்டுக்காரரிடம் "அய்யோ.. என் பேரன் இப்படி பாடா படுத்துறான் " என்று சொல்லும்.

*10. திருமணம் ஆனவுடன்* தனிக் குடித்தனம் வைத்து விட வேண்டும், *அவரவர் குழந்தை குட்டிகளை* அவரவர் வளர்க்க வேண்டும், அப்போது தான் அதன் அருமை தெரியும், *சொந்தக் காலில் நிற்கும் போது தான் பொறுப்பு வரும்* -  வளரும்.  

*11. அப்பா அம்மா என் கூடவே இருக்க வேண்டும் என்று சொல்வது வேலைக்காரிக்கு கொடுக்கும் பணம் மிச்சம்* என்பதற்காகவும் இருக்கலாம்.

12. *முக்கியமான ஒன்று, உங்கள் வருமானத்தைச்  சேர்த்து வையுங்கள் .... கடைசி வரை உங்கள் சேமிப்பை நம்பி இருங்கள், யாரிடமும் எதையும் எதிர் பார்க்காதீர்கள்,* 

*13. வீடு வாசல் சொத்து இருந்தால் - எனக்குப் பிறகு என் மனைவிக்கும்*, அதன் பிறகு இப்படி பிரித்துக் கொள்ளுங்கள்  என்று *உயில் எழுதி வையுங்கள்*.

*14. மகனையோ மகளையோ* குற்றம் குறை சொல்லாதீர்கள்.. *அவரவருக்கு தெரிந்தபடி வாழட்டும்,,*,     
*பாட்டி வைத்தியம் எல்லாம் சொல்லாதீர்கள்,* விரும்ப மாட்டார்கள்,,, *குழந்தைக்கு காய்ச்சல் என்றால் பிரபல டாக்டரிடம் போய்* ரூபாய் 5000/- செலவு செய்தால்தான் அவர்களுக்கு நிம்மதி.....

*15. இருப்பதை சாப்பிடுங்கள்..* வருவதை ஏற்றுக் கொள்ளுங்கள்,,, வலிகளை தாங்கிக் கொள்ளுங்கள், பேச்சைக் குறையுங்கள்... சிரிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

*16.மிக முக்கியமான ஒன்று:* என்னை ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறாய் இறைவா! *சீக்கிரம் அழைத்து கொள்* என்று புலம்பாதீர்கள்..

*நீங்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் விதி முடிந்தால் போக வேண்டியதுதான்..*.!!

*வாழும்வரை வாழ வழிகளா இல்லை !!*
*வாழ்க்கையை வாழ்ந்து காட்டுங்கள்!!*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

காப்பீடு - செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பாடு..! AI

காப்பீடு - செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பாடு..! செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் காகிதமில்லாத (paperless) மற்றும் 100% ரொக்கமில்லா (Cashles...