மொத்தப் பக்கக்காட்சிகள்

தனிநபர் வருமான வரி அடிப்படை வரி விகிதம் குறைகிறது..!

தனிநபர் வருமான வரி அடிப்படை வரி விகிதம் குறைகிறது..!


இந்தியாவில் தற்போதுள்ள வருமான வரி சட்டம், கடந்த 58 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் வருமான வரி சட்டத்தை மாற்றி அமைக்கவும், வருமான வரி சட்ட பிரிவுகளை எளிமையாக்கவும், வரி வசூலை அதிகரிக்கவும் மத்திய அரசு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.

தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு

இந்தக் குழுவுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சி.பி.டி.டி.) உறுப்பினர் திரு. அகிலேஷ் ரஞ்சன் தலைவர் ஆவார்.
இந்தக் குழு தனது பரிந்துரை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் மந்திரி திருமதி. நிர்மலா சீதாராமனிடம் அளித்து உள்ளது.

அதில் தற்போது தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சம் என்று இருப்பதை மாற்றி அமைக்க பரிந்துரைக்கவில்லை.
மேலும் ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான 5% வரி விதிப்பை மாற்றவும் சிபாரிசு செய்யவில்லை.

ஐந்து அடுக்கு வரி முறை

அதேநேரத்தில் 5%, 10%, 20%, 30% மற்றும் 35% என  ஐந்து அடுக்கு வரி முறையை கொண்டு வர சிபாரிசு செய்து உள்ளது.

தற்போது 5 சதவீதம், 20 சதவீதம், 30 சதவீதம் என 3 அடுக்கு வரி முறைதான் அமலில் இருந்து வருகிறது.

இதன்படி, தற்போது ரூ.2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.2.5 லட்சத்துக்கு மேல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5%, ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20%, ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உடையவர்களுக்கு 30% வரி விதிக்கப் படுகிறது. இதில் கூடுதல் வரி (சர்சார்ஜ்), கல்வி வரி மற்றும் ஆரோக்கிய வரி சேர்க்கப்படவில்லை.

வரி விதிப்பு விகிதாசாரங்கள்
இந்த வரி விதிப்பு விகிதாசாரங்களை கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்க நிபுணர் குழு பரிந்துரைத்து உள்ளது.

 
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5% வரி விதிக்கலாம். (இவர்களுக்கு ரூ.12,500 வரிக்கழிவு கிடைக்கும்)

 
ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10% வரி விதிக்கலாம்.

 
ரூ.10 லட்சத்துக்கு மேல் ரூ.20 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20% வரி விதிக்கலாம்.

ரூ.20 லட்சத்துக்கு மேல் ரூ.2 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு 30% வரி விதிக்கலாம்

 
ரூ.2 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 35% வரி விதிக்கலாம்; இவர்களுக்கான கூடுதல்வரி ரத்து செய்து விடலாம்.

இப்படி வருமான வரி அடுக்குகளை மாற்றி அமைக் கிற போது, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தனிநபருக்கு வருமான வரி கட்டுவது சுமையாக தெரியாது.

குறிப்பாக ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 20% வரி செலுத்தி வந்த நிலையில் அது 10% ஆக குறையும்.

இதேபோன்று, ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 30% வரி செலுத்தி வந்த நிலையில், இப்போது ரூ.20 லட்சம் வரையில் வருமானம் உள்ளவர்கள் 20% வரி செலுத்தினால் போதும் என்று வந்தால் அந்த தரப்பினரும் பலன் அடைவார்கள்.

இந்த வரி குறைப்பு, வரி செலுத்துவோரின் வாங்கும் திறனை அதிகரிக்கும். இதன் காரணமாக அரசுக்கு ஜி.எஸ்.டி. வருவாய் பெருகும். உற்பத்தியும் பெருகும். வேலை வாய்ப்பு அதிகரிக்கும். சங்கிலித்தொடர் போல நடக்கிற மாற்றங்கள் காரணமாக பொருளாதாரம் வலிமை பெறக்கூடும்.

நிபுணர் குழுவின் பரிந்துரை அறிக்கை தற்போது நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமனின் பரிசீலனையில் உள்ளது. அவர் பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் ஆலோசனை செய்து இது தொடர்பான உத்தரவு விரைவில் வெளிவரக்கூடும்.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...