மொத்தப் பக்கக்காட்சிகள்

இ.டி.எஃப் முதலீட்டின் முக்கிய நன்மைகள்

இ.டி.எஃப் (ETF) என்றால் என்ன (பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் நிதிகள்) (Exchange traded funds) –  இ.டி.எஃப்-க்கள், நிறுவனப் பங்குகள் போல் வர்த்தகமாகும் மியூச்சுவல் ஃபண்ட்கள் ஆகும். அவை முதலீடு செய்ய எளிதான மற்றும் செலவு குறைந்த வழியாகும். இ.டி.எஃப்-ன் நோக்கம், எஸ்&பி பி.எஸ்.இ சென்செக்ஸ் இண்டெக்ஸ் (S&P BSE SENSEX Index) போன்ற, ஒரு குறிப்பிட்ட குறியீட்டின் செயல்திறனை பின்பற்றுவதாகும்.(track the performance of a specified index). மற்றும் முதலீட்டாளர்களுக்கு அந்த குறியீட்டைப் போன்ற குறைவான இடர்பாடு - வருமானத்தை குறைந்த கட்டணங்களுடன்  வழங்குவதாகும்.

இ.டி.எஃப்களின் முக்கிய நன்மைகள்: முதலீட்டு பரவலாக்கம், குறைவான கட்டணம், வெளிப்படைத்தன்மை, எளிதான அணுகுமுறை  மற்றும் எளிதில் பணமாக்குதல் போன்றவை அடங்கும்.
எஸ் அண்டு பி பி.எஸ்.இ இண்டைசீஸ் நிறுவனத்தின் இந்திய பிசினஸ் தலைவர்  கோயல் கோஷ் (Head, South Asia, S&P Dow Jones Indices & Business Head- Asia Index Pvt. Ltd, SPDJI-BSE JV) இ.டி.எஃப் பற்றி இப்படிச் சொல்கிறார்.

 கோயல் கோஷ்


'' உலகளவில், குறியீடு அடிப்படையிலான முதலீடு (passive investing) —  குறியீடுகளின் வருமானத்தை அப்படியே பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது -- முதலீட்டாளர்களுக்கு குறைவானக் கட்டணம், வெளிப்படையான முதலீட்டுத் திட்டமாக  உள்ளது. சிறந்த காரணம் - இந்தியா உட்பட உலகளவில். நிலையான அடிப்படையில் பங்குச் சந்தை குறியீட்டின் வருமானத்தை நிதி மேலாளர்கள் நிர்வகிக்கும் மியூச்சுவல் ஃபண்ட்கள்  விஞ்சுவது கடினமாகி வருவதாக ஸ்பிவா (SPIVA - S&P Indices Versus Active funds) புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

சமீபத்திய ஸ்பிவா இந்தியா ஸ்கோர்கார்டு (SPIVA India Scorecard)  92%  லார்ஜ் கேப் ஈக்விட்டி  ஃபண்ட்கள் (large-cap equity funds)  முந்தைய காலண்டர் ஆண்டில் அந்தந்த முக்கிய ஒப்பீட்டு குறியீடுகளை (benchmark indices)  விட குறைவாக வருமானம் கொடுத்துள்ளன.  பங்குச் சந்தை ஒரு பூஜ்ஜிய தொகை விளையாட்டு (zero sum game) என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்; ஒருவர் வருமானம் ஈட்டும் நிலையில் இன்னொருவர் இழப்பை சந்திக்க கூடும். கூடுதலாக, நிதி மேலாளர்கள் மூலம் வருமானத்தை சம்பாதிக்க முயற்சிப்பது சில நேரங்களில் ஓப்பிட்டளவில் குறியீடு அடிப்படையிலான முதலீட்டை விட அதிக செலவு வைப்பதாக இருக்கும். .


இந்தியாவில், மொத்த வருவாய் குறியீடுகள் (TRI - total return indices) அடிப்படையிலான வருமான செயல்திறன் ஒப்பீடு,  மியூச்சுவல் ஃபண்ட் வகைப்படுத்தல் போன்ற செபி (SEBI) அமைப்பின்  சமீபத்திய ஒழுங்குமுறை மாற்றங்கள்,  துரிதமாக செயல்படும் நிதி மேலாளர்களின்  வேலையை இன்னும் கடுமையானதாக உருவாக்கும் (active fund manager even tougher) என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் ஃபண்ட்கள் (இ.டி.எஃப்கள்) மூலம் நிர்வகிக்கப்படும் தொகை இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. 2013 டிசம்பர் முதல் 2018 டிசம்பர் வரையிலான காலத்தில் நிர்வகிக்கப்படும் தொகை ரூ. 8,010 கோடியிலிருந்து ரூ.1,12,381 கோடியாக அதிகரித்துள்ளது.  ஆண்டுக்கு சராசரி வளர்ச்சி விகிதம் 69.6%  ஆகும். இதே கால கட்டத்தில் ஈக்விட்டி இ.டி.எஃப் முதலீடு 141 மடங்குகள் அதிகரித்து அதாவது ரூ. 745 கோடியிலிருந்து ரூ. 1,05,282 கோடியாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், கோல்டு இ.டிஎஃப். முதலீடு குறைந்துள்ளது. 2019, ஜூன் 28 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் இ.டி.எஃப்கள் மூலம் நிர்வகிக்கப்படும் தொகை ரூ.1,46,193 கோடிகளாக உள்ளது. இது, 30%. அதிகரிப்பாகும்.  

ஈக்விட்டி இ.டி.எஃப்களின் கணிசமான வளர்ச்சியின் முக்கிய இயக்கி, மத்திய அரசாங்கத்தின் முன்முயற்சிகளாகும். அவற்றில் ஒன்று இ.டி.எஃப்களின் மூலம் இந்திய அரசு, அதன் பங்கு மூலதனத்தை குறைத்து வருவதாகும். 2019, ஜூன் 28 ஆம் தேதி நிலவரப்படி, எஸ்&பி பி.எஸ்.இ பாரத் 22 குறியீட்டை (S&P BSE Bharat 22 index) பின்பற்றும், பாரத் 22 இ.டி.எஃப் (Bharat 22 ETF) மூலம் நிர்வகிக்கப்படும் தொகை ரூ. 8,422  கோடிகளாக உள்ளது. 2015 ஆம் ஆண்டில், இ.பி.எஃப்.ஓ  என்கிற பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO - Employee Provident Fund Organization)  எஸ்&பி பி.எஸ்.இ சென்செக்ஸ் (S&P BSE SENSEX) –ஐ பின்பற்றும் இ.டி.எஃப்களில் முதலீடு செய்ய  முடிவு செய்தது.  இது இ.டி.எஃப்களின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணியாக இருந்தது. இ.பி.எஃப்.ஓ –ன் மத்திய அறங்காவலர் குழு (Central Board of Trustees) சமீபத்தில் செய்த திருத்தத்தின் மூலம், இ.பி.எஃப்.ஒ இப்போது அதன் நிதியில் 50%- ஐ எஸ்&பி பி.எஸ்.இ சென்செக்ஸ்-ல் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் 2019 ஜனவரியில், முதலீட்டுக் கலவையில் (portfolio) இடர்ப்பாட்டை (risk) நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட விதிமுறைகளை,  பங்கு வர்த்தக நிதிகள் மற்றும் குறியீட்டு நிதிகளுக்கு  (equity traded funds and index funds)  செபி அறிமுகப்படுத்தியது.

காரணி முதலீடு  (factor investing) மற்றும் .எஸ்.ஜி (சுற்றுச்சூழல், சமூக மற்றும் வெளிப்படையான நிர்வாகம்ESG - Environment, Social and Governance) போன்ற புதிய கருப்பொருள்கள் (New themes)  உலக அளவிலும் இந்தியாவிலும் அதிக கவனம் பெறுகின்றன. ஒரு முதலீட்டுக் கலவையின் இடர்ப்பாடு / வருவாய் பண்புகளின் மூலத்தை விளக்க உதவும் ஓர் உறுப்பு என்று ஒரு காரணி (A factor) கருதப்படுகிறது. பரவலாக அங்கீகரிக்கப்பட்ட காரணிகள் , அளவு, டிவிடெண்ட், ஏற்ற - இறக்கம், உத்வேகம், தரம் மற்றும் மதிப்பு போன்றவையாகும். எஸ்&பி பி.எஸ்.இ  இன்கேன்ஸ்ட் வேல்யூ, எஸ்&பி  பி.பி.எஸ்.இ டிவிடெண்ட் யீல்டு, எஸ்&பி பி.எஸ்.இ  வாலடைலிட்டி, எஸ்&பி பி.எஸ்.இ மொமென்டம், எஸ்&பி பி.எஸ்.இ குவாலிட்டி (S&P BSE Enhanced Value, S&P BSE Dividend Yield, S&P BSE Low Volatility, S&P BSE Momentum, S&P BSE Quality) போன்ற குறியீடுகள் தொடர்புடைய காரணியின் செயல்பாட்டை அளவிட வடிவமைக்கப்பட்டவையாகும்.

இதேபோல், காலநிலை மாற்றம், சமூக அமைதியின்மை மற்றும் மோசமான நிர்வாகம், சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாக அம்சங்கள் (environment, social, and governance) முறைப்படி  ஆய்வு செய்யப்பட்டு முதலீட்டு பகுப்பாய்விற்கு காரணியாகின்றன. எஸ் & பி பி.எஸ்.இ 100 இ.எஸ்.ஜி குறியீடு (S&P BSE 100 ESG index), இந்த வகை அளவீடுகளில் ஒப்பீட்டளவில் அதிக  புள்ளிகள் பெறும் நிறுவனங்களின் செயல்திறனை அளவிடும் இ.எஸ்.ஜி குறியீட்டிற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

இப்போது, புதிய முதலீட்டு கருப்பொருள்கள் வடிவம் பெறத் தொடங்கி இருக்கின்றன.  உதாரணமாக, ரோபா செயல்பாடுகள்,  தானியங்கி மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் விரைவான முன்னேற்றங்கள், தீவிரமான இணைப்பு மற்றும் அதிவேக செயலாக்க சக்தி கிடைப்பது ஆகியவற்றால், நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும்   மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

நான்காவது தொழில் புரட்சி (Fourth Industrial Revolution) என்று குறிப்பிடப்படுவதை நாம் உள்ளீடு செய்யும்போது, எஸ்&பி கென்ஷோ  நியூ எக்கனாமிக் இண்டிசஸ்: 21 ஆம் நூற்றாண்டு துறைகள்(S&P Kensho New Economy Indices: 21st Century Sectors℠)  புரட்சியைத் தூண்டும் நிறுவனங்களை கைப்பற்றும் வகையில் இருக்கின்றன. கென்ஷோ  நியூ எக்கனாமிக் இண்டிசஸ், முற்றிலும் முறையான, விதிமுறைகள் சார்ந்த முறையைப் பயன்படுத்தி கட்டமைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு புதிய பொருளாதாரத்திலும் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை அடையாளம் காண, கென்ஷோவின் தனியுரிம இயற்கை மொழி செயலாக்கம் (proprietary natural language processing -NLP)  தளத்தை மேம்படுத்துதல், மில்லியன் கணக்கான பக்கங்கள் ஒழுங்குமுறை தாக்கல் மற்றும் பிற பொது தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. இதில் அடங்கும் சில குறியீடுகள் - எஸ்&பி கென்ஷோ நியூ எக்கனாமிக்ஸ் காம்போசைட் இண்டெக்ஸ், எஸ்&பி கென்ஷோ கிளின் பவர் இண்டெக்ஸ், எஸ்&பி கென்ஷோ ஸ்பேஸ் இண்டெக்ஸ், ட்ரோன் இண்டெக்ஸ் மற்றும் எஸ்&பி கென்ஷோ  எலெக்ட்ரிக் வெகிள்ஸ் இண்டெக்ஸ் (S&P Kensho New Economies Composite℠ Index, S&P Kensho Clean Power Index, S&P Kensho Space Index, Drone Index, and the S&P Kensho Electric Vehicles index) ஆகும்."

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...