இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய (EU) சுதந்திர வர்த்தக ஒப்பந்த காலகட்டத்தில், வடிவமைப்பு மற்றும் புதுமை திறன்களை வலுப்படுத்த IUAD கல்வி நிறுவனத்துடன் KICL கூட்டமைப்பு,
சென்னை | 29 ஜனவரி 2026
கோத்தாரி இன்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL) ஜனவரி 30, 2026 அன்று, இத்தாலியின் புகழ்பெற்ற ஃபேஷன் மற்றும் டிசைன் கல்வி நிறுவனமான அக்கடெமியா IUAD உடன் ஒரு முக்கியமான தொழில்–கல்வி (Industry–Academia) கூட்டமைப்பை அறிவித்துள்ளது.
வடிவமைப்பு, படைப்பாற்றல் மற்றும் புதுமை திறன்கள்..!
இத்தாலி கல்வி அமைச்சகத்தின் அங்கீகாரம்
பெற்ற IUAD உடன் இணைந்து, வடிவமைப்பு, படைப்பாற்றல் மற்றும் புதுமை திறன்களில் உலகத்
தரத்திலான மனித வளத்தை உருவாக்குவதே இந்த கூட்டமைப்பின் நோக்கம்.
இந்தியா–ஐரோப்பிய
ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) சமீபத்தில்
கையெழுத்தானது. அதன்படி, இந்த கூட்டமைப்பு இந்தியாவின் உற்பத்தி மற்றும் படைப்பாற்றல்
தொழில்துறைகளை நேரடியாக ஆதரித்து, உலகளாவிய சந்தைகளில் இந்தியாவின் பங்களிப்பை புதிய
கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
16வது
INDIA–EU உச்சி மாநாட்டில் இறுதி செய்யப்பட்ட இந்த INDIA-EU FTA, “அனைத்து ஒப்பந்தங்களின்
தாய்” எனப் பரவலாக குறிப்பிடப்படுகிறது. இது பெரும்பாலான பொருட்களுக்கான சுங்கத் தடைகளை
நீக்கி அல்லது குறைத்து, 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளில், இந்திய
ஏற்றுமதியாளர்களுக்கு கதவுகளை திறக்கிறது. இது உலகின் மிகப்பெரிய பொருளாதார கூட்டமைப்பில்
ஒன்று.
இந்திய
தொழில்துறைகள் உலகளாவிய அளவில் போட்டியிடவும், கூட்டாக செயல்படவும் தயாராகும் இந்த
காலகட்டத்தில், உயர்தர திறன் கொண்ட வடிவமைப்பாளர்கள் மற்றும் புதுமையாளர்களின் தேவை
இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்த கூட்டமைப்பின் மூலம், தொழில்துறைக்கு
ஏற்ற கல்வி மற்றும் பயிற்சி திட்டங்களை,
KICL மற்றும் IUAD இணைந்து உருவாக்கவுள்ளன. IUAD-ன் படைப்பாற்றல் மரபும், நடைமுறை
அடிப்படையிலான கற்றலும், KICL-ன் ஆழமான தொழில்துறை அனுபவத்துடன் இணைக்கப்படும்.
இந்த
திட்டங்கள், மாணவர்களுக்கு ஃபேஷன், காலணி (Footwear) மற்றும் வாழ்க்கைமுறை
(Lifestyle) வடிவமைப்பு ஆகிய துறைகளில் நவீன திறன்களை வழங்கி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும்
பிற உலக சந்தைகளில் இந்தியாவின் படைப்பாற்றல், ஏற்றுமதிகளின் போட்டித்திறனை உயர்த்த
உதவும்.
![]() |
| Dr. Rafique Ahmed, Chairman of KICL; Dr. N. Muthu Mohan, CEO and Director of KICL |
இந்த
கூட்டமைப்பு வழங்கும் முக்கிய அம்சங்கள்:
✔ உலகளாவிய தொழில்துறை பங்களிப்புடன் பாடத்திட்ட
இணை வடிவமைப்பு
✔ நடைமுறை சார்ந்த திட்டங்கள் மற்றும் உண்மை தொழில்துறை
அனுபவம்
✔ சர்வதேச நிபுணர்களின் மாஸ்டர் கிளாஸ்கள் மற்றும்
வழிகாட்டுதல்
✔ உலகளாவிய வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை நகர்வுக்கான
பாதைகள்
வடிவமைப்பு சிந்தனை, தொழில்நுட்ப சிறப்பு மற்றும் புதுமையான சிந்தனைகளில் தேர்ச்சி பெற்ற புதிய தலைமுறை மனித வளத்தை உருவாக்குவதன் மூலம், INDIA-EU FTA வழங்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த இந்த கூட்டமைப்பு இந்தியாவின் லட்சியத்திற்கு கைகொடுக்கிறது.
இது இந்தியாவின் உற்பத்தித் துறையை வலுப்படுத்தி, உயர்மதிப்புள்ள
வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வடிவமைப்பு சார்ந்த தொழில்துறை வளர்ச்சிக்கான முன்னணி மையமாக
இந்தியாவை நிலைநிறுத்தும் தேசிய இலக்குகளுடன் ஒன்றிணைந்து செயல்படுகிறது.
