குரோ
செயலியில் ‘குரோ பிரைம்’ – புதிய வசதி..! Croww APP
•பங்கு தரகு சேவை வழங்கும் ‘குரோ’ நிறுவனம், மியூச்சுவல் பண்டு போர்ட்ஃபோலியோ நிர்வகிப்பதற்காக பிரத்யேகமாக ‘குரோ பிரைம்’ Groww Prime என்ற புதிய வசதியை சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
• இந்த
வசதி மூலம், பயனர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோ தொடர்பான தரவுகளை ஆழமாக (in-depth)
அணுக முடியும்.
•
வாரத்தின் 7 நாட்களும், எப்போது வேண்டுமானாலும் போர்ட்ஃபோலியோ தொடர்பான தகவல்களை
பெறும் வசதி இதில் வழங்கப்படுகிறது.
•
பயனர்களுக்கு தனிப்பட்ட வழிகாட்டுதல்கள் (personalized guidance) கிடைக்கும் என
குரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
• குரோ செயலி, முதலீட்டாளர்கள் நேரடியாக மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யும் தளமாக செயல்பட்டு வருகிறது
.
• கடந்த
சில ஆண்டுகளாகவே, வாடிக்கையாளர்கள் பலர் மியூச்சுவல் பண்டு திட்டங்களை சிறப்பாக
நிர்வகிக்க உதவும் வசதிகளை கோரியிருந்தனர்.
•
குறிப்பாக, திட்டங்களை ஆராய்ந்து (research), சரியான வழிகாட்டுதலுடன் முக்கிய
முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவும் அம்சங்களை வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து
வந்தனர்.
![]() |
| Groww’s co-founder Harsh Jain |
• இந்த
தேவைகளுக்கான தீர்வாகவே ‘குரோ பிரைம்’ உருவாக்கப்பட்டுள்ளது என்று நிறுவனத்தின்
இணை நிறுவனர் ஹர்ஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
• ‘குரோ
பிரைம்’ என்பது வழக்கமான மியூச்சுவல் பண்டு வசதிகளுடன் கூடுதலாக கிடைக்கும் ஒரு
‘விருப்பத் தேர்வு’ (optional feature) அம்சமாகும்.
•
முதலீட்டாளர்களுக்கு மேம்பட்ட அனுபவம், தெளிவான தகவல்கள் மற்றும் சிறந்த
முடிவெடுப்பு திறன் ஆகியவற்றை வழங்குவதே இந்த புதிய வசதியின் முக்கிய நோக்கமாகும்.
