ஆன்லைன் நிதி பகுப்பாய்வு சான்றிதழ் படிப்பு அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் NSE
அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாக படிப்புகள் துறை சார்பில், முதுநிலை நிதி பகுப்பாய்வு சான்றிதழ் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாக படிப்புகள் துறை சார்பில், 'நேஷ னல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் எனும் தேசிய பங்குச் சந்தையின் NSE பங்களிப்புடன், முதுநிலை நிதி பகுப்பாய்வு சான்றிதழ் படிப்பு அறிமுகம் செய்யப்பட் டுள்ளது.
வங்கி முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட், காப்பீடு, இடர் மேலாண்மை ஆகியவற்றில், தங்களின் திறன்களை வளர்த்துக் கொள்ள, இந்த சான் றிதழ் படிப்பு உதவும் என, அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
முதுநிலை நிதி பகுப்பாய்வு சான்றிதழ் படிப்பின் கால அளவு 11 மாதங்கள். வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்படும்.
இதற்கான வகுப்புகள், 2028 மார்ச் மாதம் துவங்குகின்றன. இந்த சான்றிதழ் படிப்புக்கு, www.nseacademy.com என்ற இணையதளத்தில் 2026 ஜனவரி 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Anna University - Online PG Certification Programme in Financial Analytics
| Total Duration | Certification Validity | Course type |
|---|---|---|
11 months (Weekend Program) | PG Certification jointly awarded by Anna University and NSE Academy. | Live Online Sessions (Weekend) |
For more information:
Gokulnath : +91 8879918720
Email: gokulnathr@nse.co.in
