மொத்தப் பக்கக்காட்சிகள்

யூ.டி.ஐ. எம்.எஃப் - ஈக்விட்டி யாத்ரா: மியூச்சுவல் ஃபண்ட் நிதி மேலாளர்கள் என்ன செய்கிறார்கள்?


யூ.டி.. எம்.எஃப் -  ஈக்விட்டி யாத்ரா

யூ.டி.. எம்.எஃப் -  ஈக்விட்டி யாத்ரா (UTI MF – Equity Yatra) என்பது இந்தியாவின் மிகப் பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் ஒன்றான யூ.டி.. மியூச்சுவல் ஃபண்டின் ஒரு முன்முயற்சி ஆகும். இதன் மூலம்,  இந்தியா முழுக்க 51-க்கும் மேற்பட்ட நகரங்களில் சுமார் 15 பங்குச் சந்தை சார்ந்த நிபுணர்கள் (equity experts), 10,000-க்கும் மேற்பட்ட நிதி முகவர்களை (financial intermediaries) இரண்டு வாரத்துக்கும் குறைவான காலத்தில் சந்தித்து ஆலோசிப்பதாகும்.    

யூ.டி.. எம்.எஃப் -  ஈக்விட்டி யாத்ரா என்பது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிதி மேலாளர்கள் (Fund Managers) என்ன செய்கிறார்கள்?, செல்வம் உருவாக்குவதில் (wealth creation) அவர்களின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை விளக்கி சொல்வதாக இருக்கிறது. மேலும், அவர்களின் முதலீட்டு முறை எப்படி வெளிப்படை தன்மையுடன் இருக்கிறது என்பதையும் விளக்குகிறது. இந்தப் பயணம், நிதி முகவர்களுடனான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் உறவை மேலும் மேம்படுத்துவதாக இருக்கிறது. அதன் முக்கிய அம்சங்களை கீழே விளக்கி இருக்கிறோம்:

முதலீட்டு தத்துவம்:

யூ.டி.ஐ.-ன் முதலீட்டு தத்துவம் என்பது  சுருக்கமாக இரண்டு அணுகுமுறைகளை உள்ளடக்கியது. () சுய சார்புடன் வளர்ச்சி காணும் நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவற்றின் பங்குகளில் முதலீடு செய்து அதிக வருமானம் பெறுவது, வழக்கமாக இவை வளர்ச்சி நிறுவனங்கள் (growth companies)  எனப்படும் மற்றும் () தற்போது பங்கு விலை இறக்கத்தில் இருக்கும் அதேநேரத்தில் எதிர்காலத்தில் வளர்ச்சி காணும் நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவற்றின் பங்குகளை கவர்ச்சிகரமான  விலையில் வாங்கி முதலீடு செய்து அதிக வருமானம் பெறுவது. வழக்கமாக, இவை மதிப்பு நிறுவனங்கள் (value companies)  எனப்படும்.

ஆராய்ச்சி செயல்முறை:

யூ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், தகுதி வாய்ந்த ஆராய்ச்சி பகுப்பாய்வாளர்கள் (research analysts) குழுவை கொண்டிருக்கிறது. இந்தக் குழு, நன்கு வரையறுக்கப்பட்ட முறையில் சரியான நிறுவனப் பங்குகளை தேர்வு செய்யும். இரண்டு வரைறுக்கப்பட்ட முக்கிய அம்சங்களான செயல்பாட்டு ரொக்க வரவு (Operating Cash Flow - OCF) & மூலதனம் மூலமான வருமானம் (Return on capital employed - RoCE) / பங்கு மூலதனம் மீதான வருவாய் (Return on Equity - RoE) அடிப்படையில் முதலீட்டுகான நிறுவனப் பங்குகள் தேர்வு செய்யப்படும். இந்த இரு அம்சங்களின் அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் மற்றும் கருத்துகள் பரிமாறப்பட்டு முதலீட்டுக்கான பங்குகள் தேர்வு செய்யப்படுகின்றன.

முதலீட்டு கலவை உருவாக்கம் (Portfolio Construction):

யூ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில், குறிப்பிட்ட திட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், பங்குகள் மற்றும் துறைகளின் மதிப்பீடு, பங்குகளின் சந்தை மதிப்பீடு வரம்பு, முதலீடுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பங்குகளை கண்காணித்தல்,  தனிப்பட்ட முதலீட்டு அணுகுமுறை போன்றவற்றின் அடிப்படையில் நிதி மேலாளர் முதலீட்டு கலவையை  (portfolio) உருவாக்குவார். 

முதலீட்டு பாணி (Style Discipline):

முதலீட்டுக் கலவைக்கு தேவையான சரியான நிறுவனப் பங்குகளை தேர்வு செய்வதில் முதலீட்டு பாணி (style discipline) முக்கியமானதாக இருக்கிறது. ஒவ்வொரு நிதி மேலாளரும் தனித்துவமான முதலீட்டு உத்தியை கொண்டிருப்பார். மேலும், அனைத்து சந்தை நிலைகளிலும் பி/இ, பி/பி, ஆர்ஓஇ (P/E, P/B, RoE)  போன்ற விகிதங்கள், பங்கின் சராசரி சந்தை மதிப்பு போன்றவற்றை கண்காணித்தல் போன்றவற்றை மேற்கொள்வார்கள். பங்குச் சந்தை சாந்த ஃபண்ட்கள் (Equity Funds) யூ.டி.ஐ மூன்றின் சக்தி  (UTI Power of Three) மூலம் விளக்கப்படும்.
இந்தப் பிரிவில் முக்கியத்துவம் அளிக்கப்படும் ஃபண்ட்களில்  இவை அடங்கும்.

) யூ.டி.ஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம்  (UTI Mastershare Unit Scheme), எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் மற்றும் எப்போது வேண்டுமானாலும் யூனிட்களை விற்று பணமாக்கும் ஓப்பன் எண்டட் (open ended) பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் ஆகும் இதில், பெரும் பகுதி தொகை பெரிய நிறுவனங்களின் (Large Cap) பங்குகளில் முதலீடு செய்யப்படும். இதில், நியாயமான விலையில் வளர்ச்சி (Growth at Reasonable Price - GARP) என்கிற முதலீட்டு பாணியில் நிறுவனப் பங்குகள் முதலீட்டுக்கு தேர்வு செய்யப்படுகிறது.

) யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட் (UTI Equity Fund), ஓப்பன் எண்டட்  பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் ஆகும். இதில், முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதி,   பெரிய நிறுவனப் பங்குகள், நடுத்தர நிறுவனப் பங்குகள், சிறிய நிறுவனப் பங்குகளில் (Large Cap, Mid Cap, Small Cap Stocks) கலந்து முதலீடு செய்யப்படுகிறது.

இந்த ஃபண்ட் தரம், வளர்ச்சி & மதிப்பு (Quality, Growth & Valuation.) என்கிற 3 தூண்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். ‘’தரம்”  என்பது முதலீட்டுக்கு தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களின் வணிக வளர்ச்சி திறனை குறிப்பிடுவதாக இருக்கும். இந்த நிறுவனங்களில் ஆர்.ஓ.சி.ஒ / ஆர்.ஓ.இ அதிகமாக இருக்கும். வளர்ச்சி என்பது நீண்ட காலத்தில் நிறுவனத்தின் வணிக வளர்ச்சியை குறிக்கிறது.  மதிப்புஎன்பது நிறுவனத்தின் பண வரத்தை குறிக்கும். இந்த ஃபண்ட், வளர்ச்சி உத்தியை பின்பற்றும். முதலீட்டுக்காக பங்குகள் 'பாட்டம் அப்' (bottom up) முறையில் தேர்வு செய்யப்படும்.மேலும், இந்தப் பங்குகளின் சந்தை மதிப்பு (market capitalization) பல்வேறுபட்டதாக இருக்கும்.  

) யூ.டி.ஐ. வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்  (UTI Value Opportunities Fund), மதிப்பு அடிப்படையிலான முதலீட்டு பாணியில் பலவேறு சந்தை மதிப்பு கொண்ட பங்குகளில் முதலீடு செய்யும் மல்டி கேப் திட்டம் (multi cap scheme) ஆகும். இந்த ஃபண்ட், பார்பல் அணுகுமுறையில் (barbell approach) முதலீட்டுக்கான பங்குகளை தேர்வு செய்கிறது. அதாவது, வளர்ச்சி அல்லது சுழற்சி (Growth or Cyclicality) காரணமாக சந்தையில் குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனப் பங்குகள் முதலீட்டுக்கு தேர்வு செய்யப்படும்.  மதிப்பீட்டின் அடிப்படையில் துறை மற்றும் பங்குகளின் சந்தை மதிப்பு முடிவு செய்யப்படும்.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...