யெஸ் பேங்க் 2018, ஜூன் 30, உடன் முடிந்த காலாண்டு நிகர லாபம் ரூ.1,260.4 கோடி


யெஸ் பேங்க் (YES BANK), 2018, ஜூன் 30, உடன் முடிந்த காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகள் 

1.   2018-19  ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முக்கிய நிதி நிலை முடிவுகள்

·      நிகர லாபம் ரூ.1,260.4 கோடிகள் , நிகர வட்டி வருமானம் (NII ) மற்றும் இதர வருமான அதிகரிப்பால் நிகர லாபம் 30.5% உயர்வு.
·      செலவு – வருமான விகிதம் 2017-18 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்42.1% ஆக இருந்தது. இது 37.3% ஆக மேம்பட்டுள்ளது.
ü  பங்கு மூலதனம் மீதான வருமானம் (RoEs) 19.4% ஆக உயர்வு. இது, 2017-18 முதல் காலாண்டில் 17.4% ஆக இருந்தது.
ü  வழங்கப்பட்ட கடன் அதிகரிப்பு:
·      வழங்கப்பட்ட கடன் 53.4% வளர்ச்சி  கண்டுள்ளது. இந்த வளர்ச்சி உள்நாட்டு பெரு நிறுவனங்கள், எம்.எஸ்.எம்.இ, மைய வங்கி பிரிவு  மற்றும் சிறு வணிகம் மூலம் நடந்துள்ளது.
·      மைய வங்கி பிரிவு  சொத்துகள் US$ 3 Bn  தாண்டியது. இது 219%  வளர்ச்சி
·      சில்லறை வங்கி கடன்கள் 105.2% வளர்ச்சி கண்டுள்ளது. இது மொத்தக் கடனில்  14.0% ஆகும். முதல் காலாண்டின் கடன் வளர்ச்சியின் இதன் பங்களிப்பு 47% ஆகும்.
ü  ஆரோக்கியமான சொத்து தர வினியோகம்: மொத்த அழுத்த சொத்துகள்  நிலையான வீழ்ச்சி
·      மொத்த வாராக் கடன்  1.31%  நிகர வாராக் கடன் 0.59%
·         ஒதுக்கீட்டு கவரேஜ் விகிதம்(PCR) 55.3% ஆக உயர்வு  . இதற்கு முன் 50.0%  ஆக இருந்தது. ஒதுக்கீடுகள் ரூ. 625.7  கோடிகள்
·      செயல்பாட்டு லாபம்  44.0% வளர்ச்சி கண்டு ரூ.  2,454.7 கோடியாக உள்ளது.

2.      ஐந்தொகை (BALANCE SHEET):  

·         மொத்த சொத்துகள் 49.7% அதிகரித்து ரூ. 3,32,549.3 கோடியாக உள்ளது.
·         திரட்டப்பட்ட டெபாசிட்கள் 42.0%  அதிகரித்து ரூ. 2,13,394.5 கோடி
·         காசா விகிதம் 35.1%, ஆக உள்ளது. இதில் சேமிப்பு கணக்கு வளர்ச்சி 35.7% ஆக உள்ளது. சேமிப்பு கணக்கு ரூ. 46,597.5 கோடி, மற்றும் நடப்பு கணக்கு ரூ. 28,332.5 கோடி. காசா மற்றும் சில்லரை ஃபிக்ஸட் டெபாசிட் சேர்ந்து, மொத்த டெபாசிட்டில் 56.7% என்கிற அளவில் அதிகமாக உள்ளது.
·         மொத்த மூலதன தன்னிரைவு விகிதம்  17.3% ஆக மொத்த மூலதன நிதி  ரூ. 46,983.7 கோடியாக உள்ளது.
·         2018, ஜூன் 30 நிலவரப்படி, பணியாளர் எண்ணிக்கை 19,597 ஆக உள்ளது. ஜூன் காலாண்டில் 1,359 பணியாளர்கள் அதிகரித்துள்ளார்கள்.
·         2018, ஜூன் 30 நிலவரப்படி, வங்கியின் கிளைகள் எண்ணிக்கை 1,105 ஆக உள்ளது. ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கை 1,741 ஆகும்.
·         கேர் ரேடிங்ஸ், யெஸ் பேங்க் –ன் தரக் குறியீட்டை AA+-லிருந்து மிகவும் உயர்ந்த AAA (நிலையான வளர்ச்சி எதிர்பார்ப்பு)-க்கு உயர்ததி உள்ளது.  

Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.