மொத்தப் பக்கக்காட்சிகள்

எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ்: ஜூன் 30, 2018 காலாண்டு நிகர லாபம் ரூ. 538 கோடி


எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ்: ஜூன் 30, 2018 உடன் முடிந்த காலாண்டின் நிதி நிலை செயல்பாடுகள்

         பங்கு மூலதனம் மீதான வருமானம், 2018-19 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 18.45% ஆக உள்ளது.


  2018-19 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் ரூ. 538 கோடியாக ஆக உள்ளது  .இது, 2017-18 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் ரூ. 314 கோடியுடன் ஒப்பிடும் போது 71% அதிகமாகும்.  


எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் (L&T Finance Holdings Ltd. – LTFH - எல்.டி.எஃப்.ஹெச்) இயக்குநர் குழு கூட்டம் மும்பையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் 2018-19 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான (Q1FY19) தணிக்கை செய்யப்படாத நிதி நிலை முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நிறுவன விவகார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், இந்திய கணக்கியல் தரநிலைகளை, (Indian Accounting Standards -IND AS)  2018, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.

2018-19 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான நிதி நிலை  முடிவுகள் இந்திய கணக்கியல் தரநிலை தேவைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டிருக்கிறது.
2017-18 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான நிதி நிலை  முடிவுகள், இந்திய கணக்கியல் தரநிலை தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய கணக்கியல் தரநிலை தேவைகளால் ஏற்பட்டிற்கும் முக்கிய மாற்றங்கள் வருமாறு:

1.    எதிர்பார்த்த கடன் இழப்புகள் (Expected Credit Losses -ECL): 
இந்திய கணக்கியல் தரநிலை முறையில்,  .சி.எல் முறை, முந்தைய கணக்கியல் முறையில் பின்பற்றப்பட்ட இழப்புகளுக்கு பதிலாக எதிர்பார்க்கப்படும் எதிர்கால இழப்புகளுக்கு வழங்குவதற்கான கொள்கை அடிப்படையில் அமைந்துள்ளது.

புள்ளிவிவர மாதிரியைப் பயன்படுத்தி தேவையான ஒதுக்கீடு மதிப்பீடு செய்யப்படுவதால், இ.சி.எல். முறையானது போர்ட்ஃபோலியோவின் சிறு பகுப்பாய்வுக்கு உதவுகிறது, இதன் மூலம் ஒரு போர்ட்ஃபோலியோவின் உண்மையான இடர்பாடுகளை மாற்றுகிறது.


முந்தைய கணக்கியல் முறையில், ஒரு சொத்து நிலையானதாக (வாராக் கடன் அல்ல) அல்லது துணை தர நிலையாக (வாராக் கடன்) வகைப்படுத்தப்பட்டது. புதிய கணக்கியல் முறையில், சொத்துகள், செயல்திறன் கொண்ட சொத்துகள் (Performing Assets - நிலை 1), செயல்படாத சொத்துகள் (Underperforming Assets -நிலை 2) அல்லது வாராக் கடன்கள் (Non-Performing Assets- நிலை 3) என வகைப்படுத்தப்படுகின்றன.

அதிகப்படியான வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான நிர்வாகம் போன்றவற்றவற்றால் எல்.டி.பி.ஹெச் அதன் நிலை 3 சொத்துகளை வாராக் கடன்கள் (90 நாள்களுக்கு மேல்), உள்கட்டமைப்பு சொத்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்பு (கடன் மறு சீரமைப்பு -SDR, எஸ்.4 ஏ (S4A) திட்டம் மற்றும்  5:25 திட்டம் முதலியன) மற்றும் பிற நிலையான சொத்துகள் ஆரம்பக்கட்ட அழுத்தத்தில் இருக்கின்றன. அதன் இன்ஃப்ரா போர்ட்ஃபோலியோவில், எல்.டி.எஃப்.ஹெச் முழுமையான எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்பை அதன் மரபு வலியுறுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோ (legacy stressed portfoli) மீது எடுத்துள்ளது. எல்.டி. எஃப்.ஹெச் –இன் மரபு வலியுறுத்தப்பட்ட இன்ஃப்ரா அழுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோ-க்கான ஒதுக்கீடு சுமார் ரூ. 3,000 கோடியாக உள்ளது. இதன் மொத்த போர்ட்ஃபோலியோ-ரூ.5,000 கோடியாக உள்ளது. 

2018 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியின்படி, எல்.டி.எஃப்.ஹெச் ஏற்கனவே சுமார் ரூ. 1,200 கோடியை முந்தைய கணக்கியல் முறையில் ஒதுக்கீடு செய்துள்ளது. மீதமுள்ள ரூ. 1,800 கோடி, இந்திய கணக்கியல் தரநிலைக்கு மாற்றாக கைஇருப்புகளை திறக்க சரிசெய்யப்பட்டுள்ளது

எல்.டி.எஃப்.ஹெச், கடந்த இரண்டு ஆண்டுகளில் இன்ஃப்ரா சொத்துகளை சீரமைத்து வருகிறது. இந்த போர்ட்ஃபோலியோவில் ஒதுக்கீடு செய்வதற்கான தேவை தற்போது முழுமையாக முடிந்துள்ளது. எல்.டி.எஃப்.ஹெச் - இன் சிறு கடன்கள் பிரிவில் , அதாவது, கிராமப்புறம் மற்றும் வீட்டுவசதி கடன்களுக்கான ஒதுக்கீடு, புள்ளி விவரங்கள்  ரீதியாக அதன் கடந்த கால செயல்திறனை மாதிரியாக கொண்டு மதிப்பிட்டுள்ளது.

2.   முன்னுரிமை பங்குகள் (Preference Shares): 

முந்தைய கணக்கியல் முறையின் கீழ், முன்னுரிமை பங்குகள் நிகர சொத்து உடன் சேர்க்கப்பட்டன. லாபங்களில் இருந்து இந்த பங்குகளுக்கு டிவிடெண்ட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போதைய இந்திய கணக்கியல் தரநிலை முறையில், முன்னுரிமை பங்குகள் நிதி பொறுப்புகள் (financial liabilities) என வகைப்படுத்தப்படுகின்றன மற்றும் டிவிடெண்ட் வழங்குசது நிதிச் செலவு (finance cost.) ஆகும்.

முந்தைய கணக்கியல் முறையின் கீழ் கூட, எல்.டி.எஃப்.ஹெச்-ன் முன்னுரிமை பங்குகள் மற்றும் டிவிடெண்ட் ஆகியவற்றைத் தவிர்த்து, பங்கு மூலதனம் மீதான வருமானம் (Return on Equity-RoE) குறித்த அறிக்கை வெளியிட்டப்பட்டது. இதனால், புதிய தரநிலை காரணமாக இதன்  பங்கு மூலதனம் மீதான வருமானத்தில் எந்தத் தாக்கமும் இல்லை.

3.    முதலீடுகளின் நியாயமான மதிப்பு மற்றும் இசாப்கள் (Fair Value of Investments and ESOPs): 

அனைத்து முதலீடுகளும் ஐந்தொகையின் (balance sheet)  ஆரம்பத்தின் அடிப்படையில் நியாயமான மதிப்பிற்கு மறுசீரமைக்கப்பட்டுள்ளன மற்றும் நியாய விலையில் எந்த மாற்றமும் லாபம் மற்றும் இழப்பு அறிக்கையின் (P&L statement) மூலம் எடுக்கப்படுகிறது. பணியாளர்களுக்கு  ஒதுக்கப்பட்ட பங்குகளின் (ESOPs –இசாப்கள்) நியாயமான சந்தை மதிப்பு, பிளாக் ஸ்கோல்ஸ் முறையைப் (Black Scholes method) பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது மற்றும் இதனால், பணியாளர் செலவு (manpower cost) சிறிது அதிகரிக்கிறது.

4.    மாறும் கட்டணங்கள் (Amortization of Fees): 

இந்திய கணக்கியல் முறை தேவைக்கேற்ப, எல்.டி.எஃப்.ஹெச் பரிசீலனை கட்டணத்தை (processing fees) அடிப்படையாகக் கொண்ட கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றியமைக்கிறது
எல்.டி.எஃப்.ஹெச் ஏற்கனவே இந்த நடைமுறையை அதன் போர்ட்ஃபோலியோவின் கணிசமான பகுதியில், முந்தைய கணக்கியல் முறையில்  கொண்டிருப்பதால், தாக்கம் குறைவாக உள்ளது.

5.  வரி விதிப்பு (Taxation): 
முந்தைய கணக்கீட்டு முறையில் ஒத்திவைக்கப்பட்ட வரி கணக்கீடு (computation of deferred taxes) லாபம் மற்றும் இழப்பு முறையில் மேற்கொள்ளப்பட்டது. 

இந்திய கணக்கியல் முறையில் இது ஐந்தொகையை கணக்கிடுவது அவசியமாகும். இதன் விளைவாக, ஆரம்ப இருப்பு தேதி மாற்றப்படுகிறது. இதனால், எல்.டி.எஃப்.ஹெச்-ன் வரி பொறுப்பு சிறிது அதிகரிக்கிறது.

நிதி நிலை முடிவுகள்:

       வணிகத்தில் வளர்ச்சி (Growth in businesses): 

கிராமப்புற நிதி உதவி, வீட்டு வசதிக் கடன்  மற்றும் மொத்த விற்பனை கடன் உதவி போன்ற வணிகத்தில், எல்.டி.எஃப்.ஹெச் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்த வணிகத்தின் மூலமான சொத்து. 2018-19 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சாதனை அளவாக27 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த நிறுவனம், அதன் மொத்த விற்பனைக் கடன்களை வணிக உத்தியாக பயன்படுத்துகிறது.

2018-19 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு இறுதியில், கிராமப்புற நிதி உதவி, வீட்டு வசதிக் கடன்கள், அதன் மொத்தக் கடன் போர்ட்ஃபோலியோவில் 46% ஆக உள்ளது. இது, 2017-18 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு இறுதியில் 35% ஆக இருந்தது.

வளர்ச்சி


கவனம் செலுத்தும் வணிகங்கள்
Q1FY19
Q1FY18

Q1FY19 vs

Q1FY18கிராமப்புற நிதி உதவி
19,079
10,824
76%


வீட்டு வசதிக் கடன்
20,356
13,743
48%


மொத்த விற்பனைக் கடன்
45,945
42,760
7%


மொத்தம்
85,380
67,327
27%


எல்.டி.எஃப்.ஹெச், அதன் முதலீட்டு மேலாண்மை மற்றும் செல்வ மேலாண்மை (Investment Management & Wealth Management) வணிகங்களில்  வலுவான வளர்ச்சியை வழங்கி உள்ளது. முதலீட்டு மேலாண்மை வணிகப் பிரிவில் மேலாண்மை செய்யும் சராசரி சொத்துகள் (Average Assets under Management - AAUM), 2018-19 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.71,118 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 2017-18 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.. 44,484 கோடியாக இருந்தது. இது 60% வளர்ச்சியாகும்.  


முதலீட்டு மேலாண்மை வணிகத்தில் சேவைகள் பிரிவின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 2018-19 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 18,866 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 2017-18 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.. 17,120 கோடியாக இருந்தது. இது 10% வளர்ச்சியாகும்.  

  சொத்து தரம் மேம்படுத்துதல் (Improving asset quality)
எல்.டி.எஃப்.ஹெச், அதன்நிலை 3 சொத்துகளில்முழுமையான மற்றும்சதவிகித அடிப்படையில்கணிசமான முன்னேற்றம்காட்டியுள்ளது. இதுஆரம்ப எச்சரிக்கைகளை தீவிரமாக கண்காணித்தது மூலம் நிறைவேறி இருக்கிறது. 

எல்.டி.எஃப்.ஹெச்-ன் ஒதுக்கீட்டு விகிதம் இந்தக் காலக் கட்டத்தில் அதிகரித்திருப்பது, அதன் போர்ட்ஃபோலியோவின் வலிமையை சுட்டிக்காட்டுகிறது.

(ரூ. கோடி )
Q1FY19
Q1FY18மொத்த நிலை  3
6,480
7,577நிகர நிலை 3
2,463
3,732மொத்த நிலை 3 (%)
7.93%
11.70%நிகர நிலை 3 (%)
3.17%
6.13%ஒதுக்கீட்டு விகிதம் (%)
61.99%
50.74%

    செலவுக்கும் வருமானத்துக்குமான விகிதம் மேம்பாடு (Improving Cost to income ratio): 

எல்.டி.எஃப்.ஹெச் ன் செலவுக்கும் வருமானத்துக்குமான விகிதம், இது, 2018-19 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்  23.40% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

இது, 2017-18 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 24.07% ஆக இருந்தது. டிஜிட்டல் மற்றும் தரவு பகுப்பாய்வு (digital & data analytics), கிளை உள்கட்டமைப்பு மற்றும் மனித வளத்துறை ஆகியவற்றில் கணிசமான முதலீடு செய்த போதிலும் இது சாத்தியமாகி இருக்கிறது.

 எல்.டி.எஃப்.ஹெச் நிர்வாகத்தின் கருத்து
(Management Commentary):

2018-19 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவுகள் மற்றும் நிதி நிலை செயல்பாடுகள் குறித்து எல்.டி.எஃப்.ஹெச் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. தினாநாத் துபாஷி (Mr. Dinanath Dubhashi, Managing Director & CEO, LTFH) கருத்து கூறும் போது, போட்டி நிலை, வலுவான நிகர வட்டி வரம்புகள் (NIMs) மற்றும் கட்டணங்கள்செலவு கட்டுப்பாடுகள் மற்றும் சொத்து தரத்தை மேம்படுத்துவதன் மூலம் தொடர்ச்சியாக எங்களின் பங்கு மூலதனம் மூலமான வருமானத்தை மேம்படுத்தும் பயணத்தில் இருக்கிறோம். டிஜிட்டல் மற்றும் தரவு பகுப்பாய்வு பயன்பாடு எங்களின் முக்கிய வணிக உத்தியாக உள்ளது. இப்போது அழுத்தத்தில் உள்ள இன்ஃப்ரா சொத்துகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். 

2018-19 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பங்கு மூலதனம் மூலமான வருமானத்தை நிலையாக, சாதனை அளவாக 18.45% அதிகரித்துள்ளோம். நிலையான பங்கு மூலதனம் மூலமான வருமானத்தை எட்டிய பின்னர், எங்கள் நோக்கம் பொறுப்பான வளர்ச்சியின் மூலம் அதை பராமரிப்பதுடன், சிக்மாவை குறைத்துக்கொள்வதன் மூலம் அனைத்து இடர்பாட்டுகளையும் சரியாக நிர்வகித்து வருகிறோம்.


எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் பற்றி (About L&T Finance Holdings):

எல்.டி.எஃப்.ஹெச், பல்வேறு நிதித் திட்டங்கள் மற்றும் நிதிச் சேவைகளை அளிக்கும் இந்தியாவின் மிகப் பெரிய  நிதி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இது கிராமப்புற நிதி உதவி, வீட்டு வசதிக் கடன்  மற்றும் மொத்த விற்பனை கடன் உதவி போன்ற வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது.

மேலும், பரஸ்பர நிதி திட்டங்கள் (mutual fund products) மற்றும் செல்வ மேலாண்மை சேவைகள் (wealth management services) போன்றவற்றை அதன் முழுமையான துணை நிறுவனங்களான எல் அண்ட் டி ஃபைனான்ஸ் லிமிடெட், எல் அண்ட் டி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட், எல் அண்ட் டி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட், எல் அண்ட் டி இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் மற்றும் எல் அண்ட் டி கேப்பிட்டல் மார்கெட்ஸ் லிமிடெட் (L&T Finance Ltd., L&T Housing Finance Ltd., L&T Infrastructure Finance Company Ltd., L&T Investment Management Ltd. and L&T Capital Markets Ltd.) மூலம் மேற்கொண்டு வருகிறது. எல்.டி.எஃப்.ஹெச், ரிசர்வ் வங்கியில் முக்கிய முதலீட்டு நிறுவனமாக (CIC-ND-SI) பதிவு செய்யப்பட்டுள்ளது.

எல்.டி.எஃப்.ஹெச்-ன் நிறுவனர், இந்தியாவின் முன்னணி பொறியியல், கட்டுமானம், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் சேவைகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதிச் சேவைகளில் ஈடுபட்டு வரும்,   லார்சன் & டூப்ரோ லிமிடெட் (எல் & டி) {Larsen & Toubro Ltd. (L&T)} ஆகும். 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...