10 ஆண்டு
வெற்றிப் பயணத்தை உணர்வுபூர்வ பரிசுகளுடன் கொண்டாடிய அஜிலிசியம்
----
நிறுவனத்தின்
வளர்ச்சிக்கே அடித்தளமாக இருந்த 25 முதற்கால
ஊழியர்களுக்கு ஹூண்டாய் கார்கள் வழங்கி, நம்பிக்கைக்கும்
அர்ப்பணிப்புக்கும் நன்றியைப் பதிவு செய்த பாராட்டுக் விழா
சென்னை, 12 ஜூன் 2025: உயிரியல் அறிவியல் (லைஃப் சயின்ஸஸ்) துறையின் முன்னணி ஏஜென்டிக் ஏ.ஐ. (Agentic
AI) பார்ட்னராக திகழும் அஜிலிசியம் நிறுவனம், அந்நிறுவனத்தின் ஆரம்ப நாட்கள் முதல் இன்று வரை நீண்டகாலமாக பணியாற்றி வரும் 25 ஊழியர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் அனைவருக்கும் ஹூண்டாய் கிரெட்டா (SUV) கார்களை பரிசளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நிறுவனத்தின் 10 வது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, சென்னை உலக வர்த்தக மையத்தில்
அமைந்துள்ள அஜிலிசியம் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள்
கலந்து கொண்டு உணர்வுபூர்வ தருணங்களை பகிர்ந்துகொண்டனர். ஊழியர்களின்
நம்பிக்கையையும் உறுதியையும் கௌரவிக்கும் இந்த பாராட்டு நிகழ்வு, அஜிலிசியம் கடைபிடித்து வரும்
மனிதர் மையக் கலாசாரத்தின் ஓர் அனுபவமூட்டும் சான்றாக அமைந்தது.
அழகாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த
நிகழ்வில், பணியாளர்கள் அவர்களது குடும்பத்தினருடன்
கலந்து கொண்டனர், எவரும் எதிர்பாரா விதமாக வரிசைமைத்து நிறுத்தப்பட்ட புத்தம்
புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி-க்கள், வழக்கமான கார்ப்பரேட் கொண்டாட்டம் என்று நினைத்து வந்த
பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி, கொண்டாட்டத்தை மறக்க முடியாத
உணர்ச்சிகரமான தருணமாக இது மாற்றியது. மேலும் தொழில்துறையில் சவால்கள் நிறைந்த சூழ்நிலையில் கூட, தனது மனிதர் மையக் கொள்கையை கடைபிடித்த அஜிலிசியம், அனைத்து நிலைகளிலும்
பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வையும் அறிவித்து, தனது ஊழியர்களின் அர்ப்பணிப்பை மறுவாரியாக மதித்து அதன்
ஆழமான வேரூன்றிய உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டியது.
இந்த நிகழ்வில்
பேசிய அஜிலிசியம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக
அதிகாரி திரு. ராஜ் பாபு, "தொழில்துறை முழுவதும் எச்சரிக்கையுடன் நகரும்
இவ்வாண்டிலும் நாங்கள் எங்கள் ஊழியர்களின் உழைப்பையும் உறுதியையும், நிலைத்த
நம்பிக்கையையும் மதித்து, உரிய ஊதிய உயர்வும் அங்கீகாரமும் வழங்க முடிவு
செய்தோம். இந்த கார்கள் வெறும் பரிசுகளல்ல; நீண்ட காலமாக நிறுவனத்துடன் பயணித்து, அதன்
வளர்ச்சிக்கு உறுதுணையாயிருந்த ஊழியர்களின் விசுவாசத்தையும் ஒற்றுமையையும்
கொண்டாடும் நன்றியின் ஒரு சிறிய வெளிப்பாடு. நிறுவனத்தின் ஆரம்ப காலத்திலேயே
எங்களை நம்பி எங்கள் கனவுகளுடன் பயணித்தவர்கள் இவர்கள். அவர்களின் ஆதரவால் இன்று
அஜிலிசியம் உலகளாவிய உயிரியல் அறிவியல் ஏ.ஐ. முன்னணி நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
தொடர்ந்த வளர்ச்சிக்கு ஊழியர்களின் விசுவாசமும் அர்ப்பணிப்பும் தான் தூணாக
இருக்கும் என்பதை நாங்கள் இந்த செயல் மூலம் வலியுறுத்த விரும்புகிறோம். நிறுவனம்
ஒரு கனவாக இருந்தபோது நம்பிக்கையுடன் களத்தில் நின்றவர்கள் இவர்கள். அவர்களின்
உறுதிகொடுத்த பங்களிப்பால், இன்று அஜிலிசியம்உலகளாவிய உயிரியல் அறிவியல் ஏ.ஐ.
துறையில் முன்னணி இடத்தைப் பிடித்திருக்கிறது. எங்கள் தொடர்ச்சியான வளர்ச்சிக்குப்
பின்னால் இருக்கும் ஊழியர்களின் நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் தான் எங்கள்
மிகப்பெரிய பலம் என்பதை இந்த செய்கை மூலம் நாங்கள் வலியுறுத்துகிறோம்.”
நிகழ்வின் போது, நிறுவனம் தனது எதிர்கால
திட்டத்தையும், தனித்தியங்கும் செயற்கை
நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப்’ பயன்படுத்தி புதுப்பிக்கப்பட்ட 'அஜிலிசியம் 3.0' தொலைநோக்குப் பார்வையின் கீழ் வெளியிட்டது. இந்த புதுப்பிக்கப்பட்ட பார்வை, லைஃப் சயின்சஸ் நிறுவனங்கள்
கண்டுபிடிப்புகளை இயக்கவும், நோயாளிகளின் விளைவுகளை மேம்படுத்தவும் மற்றும் வணிக
மாற்றத்தை பெரிய அளவில் திறக்கவும் உதவுவதில் கவனம் செலுத்துகிறது. இத்துறையில் ஜாம்பவான்
நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகப் பெற்றிருப்பதுடன் அமெரிக்கா, ஐரோப்பா,
இந்தியாவில் வலுவான அடித்தளத்தைக் கொண்டிருக்கிறது. அஜிலிசியம் அடுத்த கண்டுபிடிப்பு சகாப்தத்தை வழிநடத்த தயாராக
உள்ளது.
திரு.ராஜ் பாபு மேலும்
பேசுகையில், “அளவிடக்கூடிய வணிக தாக்கத்தை
உருவாக்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்புடன், அஜிலிசியம் வெறும் பிரச்சனைகளை தீர்ப்பது மட்டுமல்லாமல், செயற்கை நுண்ணறிவின் மூலம் லைஃப் சயின்ஸ் நிறுவனங்கள்
எவ்வாறு புதுமைகளை உருவாக்குகின்றன, நோயாளிகளுக்கு சேவை செய்கின்றன மற்றும் நிலையான முறையில்
வளர்ச்சியடைகின்றன என்பதை மறுபரிசீலனை செய்ய உதவுகிறது. உலகளவில் வலுவாக கால் பதித்திருக்கும் நாங்கள், வலுவான வணிகக் கூட்டுறவைப்
பெற்று, தொழில்துறையில் அடுத்த
மாற்றத்தின் சகாப்தத்தை வழிநடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.” என்று கூறினார்.
அஜிலிசியம் குறித்து: உயிரி அறிவியல் தொழில்துறைக்கு ஒரே முன்னணி சுயாதீன கூட்டாளியாக
அஜிலிசியம் இயங்கி வருகிறது. ஜென்ஏஐ,
சுயாதீன முகவாண்மை சார்ந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு
ஆகியவற்றின் மீது வலுவான செயல்தள நிபுணத்துவத்தை ஒருங்கிணைப்பதன் வழியாக தாக்கம்
ஏற்படுத்தும் மாற்றத்தை முன்னெடுக்க உதவும் சிறப்பான தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி
வருகிறது. மதிப்பு சங்கிலி நெடுகிலும் தரவு அடிப்படையிலான உள்நோக்கு நுண்ணறிவையும்,
புத்தாக்க தீர்வுகளையும் மற்றும் செயற்பணிக்கு மிக முக்கியமான பிசினஸ்
செயல்முறைகளின் கூடுதல் தானியக்கத்தை வழங்குவதற்கு முன்னணி மருந்து தயாரிப்பு
மற்றும் உயிரி-தொழில்நுட்ப நிறுவனங்களுடன் அஜிலிசியம் ஒத்துழைப்போடு
செயல்படுகிறது; மருந்துகளை கண்டுபிடித்தல், நோயாளியின் சிகிச்சை பராமரிப்பை
மேம்படுத்தல், வர்த்தக ரீதியிலான வெற்றியை அடைதல், பிராடக்ட் வழங்கலை
நெறிப்படுத்தல் மற்றும் ஒத்துழைப்பை பேணி வளர்த்தல் ஆகிய செயல் நடவடிக்கைகளில்
அஜிலிசியம் தனது வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது. தளர்ச்சியற்ற சிறப்பான செயலாக்கம்
மற்றும் தொடர்ச்சியான புத்தாக்கம் ஆகியவற்றின் மீது இந்நிறுவனம் கொண்டிருக்கும்
அர்ப்பணிப்பும், பொறுப்புறுதி மிக்க நடவடிக்கைகளுமே, உயிரி அறிவியல்
தொழில்துறையின் எதிர்காலத்தை வடிவமைக்க இந்நிறுவனத்தை திறனுள்ளதாக
ஆக்கியிருக்கிறது.