வீ-கார்டு தனது ஸ்டைலான லக்ஸ்கியூப் வாட்டர் ஹீட்டர் சீரியலைத் துவக்கி வைத்து ஸ்மார்டாக வாழ்வதன் தரத்தை உயர்த்துகிறது.
கொச்சி, ஜூன் XX, 2025: நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிகல் சாதனங்களில் இந்தியாவின்
முன்னிலை பிராண்டான வீ-கார்டு
இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தனது பிரீமியம் லக்ஸ்கியூப்
வாட்டர் ஹீட்டர் சீரியலைத் துவக்கி வைப்பதன் மூலம் ஸ்மார்டாக வாழ்வதன் தரத்தை
உயர்த்தி உள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தை அற்புதமான வடிவமைப்போடு இணைக்கும் இந்தப்
புதிய சீரியலில் மூன்று தனித்தன்மை வாய்ந்த மாடல்கள் உள்ளன: லக்ஸ்கியூப், லக்ஸ்கியூப் DG, மற்றும் லக்ஸ்கியூப் ஸ்மார்ட்.
குளியல் அறைகளின்
உட்புறம் மேம்பட்டதாகவும், யோசித்து வடிவமைக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்று
நுகர்வோர் விரும்புவதால், வீ-கார்டு நிறுவனம்
நீரை சூடாக்குவதில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது. இந்த லக்ஸ்கியூப் சீரியலில்
புத்தம் புதிய வடிவும் புத்திசாலித்தனமான செயல்பாடும் கை கோர்த்திருப்பதால், அன்றாட
குளியலானது ஓர் அருமையான, சுவாரஸ்யமான அனுபவமாக மேம்படுகிறது.
சிக்கிமில் உள்ள
வீ-கார்டின் அதிநவீன வசதியில் தயாரிக்கப்படும் இந்த லக்ஸ்கியூப் சீரியல் மேம்பட்ட
தெர்மோகிளைன் தொழில்நுட்பத்தை உபயோகிக்கிறது. இது, அதிக திறம்பட்ட கலவைத்
தொழில்நுட்பமாகும், இதில் உள்ளே வரும் குளிர்ந்த நீர் ஏற்கெனவே அங்கிருக்கும் சூடு
நீரை பாதிக்காது. மிகவும் துல்லியமான தெர்மோகிளைன் சூடு நீருக்கும் குளிர்ந்த
நீருக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைக் காப்பதால், விரும்புகிற வெப்பநிலையில் 38%* அதிக சூடு நீர் உபயோகத்திற்குக் கிடைக்கிறது. இதன் விளைவாக, மேம்பட்ட ஆற்றல்
திறனுடன் நீண்ட நேரம், அதிக திருப்தியோடு குளியலை அனுபவிக்க முடிகிறது. இந்தப்
பிரத்யேக தெர்மோகிளைன் தொழில்நுட்பம் தயாரிப்பு கண்டுபிடிப்பில் குறிப்பிடத்தக்க
மேம்பாட்டைக் குறிப்பதால் வீ-கார்டு அதற்கான காப்புரிமையைப் பெற விண்ணப்பித்துள்ளது.
லக்ஸ்கியூப்
ஸ்மார்ட் இந்த சீரியலின் முன்னிலையில் இருந்து இந்தத்
தொழில்நுட்ப சகாப்தத்திற்காகவே தயாரிக்கப்பட்ட வாட்டர் ஹீட்டர் ஆகும். இதில் IoT ஸ்மார்ட் இணைப்பு வசதி இருப்பதால், வீ-கார்டு
ஸ்மார்ட் ஆப் மூலம் நுகர்வோர் இதைத் தூரத்திலிருந்தே கட்டுப்படுத்தி, கண்காணிக்க
முடியும். இந்த ஆப் iOS மற்றும் ஆண்ட்ராயிட் தளங்களில் கிடைக்கிறது. அதோடு, இது அமேசான் அலெக்ஸா மற்றும் கூகுள்
ஹோம் உடன் சுலபமாக இணைவதால், வீ-கார்டு
மொபைல் ஆப் மூலம் எளிய குரல் கட்டளைகளாலும் இதைத் தூரத்திலிருந்தே இயக்க முடியும்.
லக்ஸ் க்ளோ ப்ரோ
அறிகுறி அமைப்பு இந்த அனுபவத்தை இன்னும் மேம்படுத்துகிறது, இது நீர் சூடாவதையும் தயாராக
இருப்பதையும் தெளிவாகக் காட்டும் சமிக்ஞை விளக்குகளுடன் கூடிய நேர்த்தியான, சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் LED வரிசை ஆகும். இந்த
வீ-கார்டு ஸ்மார்ட்
ஆப்பில் ப்ரீ லோட் செய்யப்பட்ட அனிமேஷன் விருப்பங்களும் இருப்பதால் நுகர்வோர் விருப்பத்திற்கு
ஏற்ப நேர்த்தியான மற்றும் மாறும் லைட்டிங் நிறங்களை மாற்ற முடியும். இதனால் உங்கள்
அன்றாட குளியலை சுவாரஸ்யமான ஒன்றாக மாற்றுகிறது.
லக்ஸ்கியூப்
ஸ்மார்டில் வசதி, பாதுகாப்பு மற்றும் திறனுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஏராளமான
மேம்பட்ட அம்சங்களும் உள்ளன. இவற்றில் விருப்பத்திற்கு ஏற்ப மாற்ற முடிந்த
அட்டவணைகள், நிகழ்நேர ஆற்றல் கண்காணிப்பு, விடுமுறை சமயத்தில் மின்சாரத்தைச் சேமிக்க விடுமுறை காலம் மற்றும்
பாதுகாப்பிற்காக சைல்டு லாக் ஆகியவை அடங்கும். அதன் தானாகவே கண்டறியும் லக்ஸ்
சென்ஸ் அமைப்பு நம்பகமான செயல்பாட்டை உறுதி செய்வதோடு, ஒரு டிஜிட்டல் தோற்றம் நிகழ்நேர புதுப்பிப்புகளை வழங்குகிறது.
இந்த லக்ஸ்கியூப் DG மற்றும் லக்ஸ்கியூப்பில், ஏற்கத்தக்க விலையில் அழகான, திறமையாக செயல்படும்
வேறு மாடல்களும் உள்ளன. இதனால் ஒவ்வொரு நுகர்வோருக்கும் ஏற்ற ஒரு மாடல் கிடைக்கிறது.
இந்த முழு சீரியலும்
நீடித்து உழைப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டதால் 0.8 MPa வரை நீர் அழுத்தத்தைத் தாங்குகிறது, அதனால் மிக உயர்ந்த அடுக்குமாடி
குடியிருப்புகளுக்கும் ஏற்றதாகும். பிரீமியம் துருப்பிடிக்காத ABS பாடி, சிறந்த அரிப்பு எதிர்ப்பிற்காக டைட்டானியம் இணைக்கப்பட்ட விட்ரியஸ் எனாமல் பூசிய
டாங்கு மற்றும் நீண்ட கால ஆயுள் மற்றும் செயல்திறனுக்காக நிக்கல்-செறிவூட்டப்பட்ட
இன்கோலாய் 800 ஹீட்டிங் எலிமெண்ட் ஆகியவை இதில் உள்ளன.
இதன் துவக்கத்தில்
பேசிய வீ-கார்டு இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனரான திரு. மித்துன் சிட்டிலபிள்ளி இவ்வாறு கூறினார்: “லக்ஸ்கியூபைத் துவங்குவதன் மூலம் வீ-கார்டு வெறும் ஒரு தயாரிப்பை அல்ல நவீனகால வாழ்க்கை முறையை
மேம்படுத்துகிறது. லக்ஸ்கியூப் ஸ்மார்டில் நேர்த்தி, புத்திசாலித்தனம் மற்றும் செயல்திறன் லாவகமாகக் கை கோர்த்திருப்பதால் நுகர்வோர்
வீட்டில் சூடு நீரை உபயோகிக்கும் விதத்தையே மாற்றுகிறது. வீ-கார்டு எப்போதுமே புதுமைக்கும் வாடிக்கையாளர் விரும்பும் வடிவமைப்பை
உருவாக்குவதற்கும் முக்கியத்துவம் கொடுப்பதை இந்தப் புதிய சீரியல் உறுதி செய்கிறது.
இவ்வாறு புத்திசாலித்தனமான, வசதியான எதிர்காலத்தை உருவாக்குகிறது.”
வீ-கார்டு இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் இயக்குனரும், COO-வுமான திரு. வீ. ராமசந்திரன் இவ்வாறு கூறினார்: “லக்ஸ்கியூப் வாட்டர் ஹீட்டர் சீரியல் என்ற எங்கள் புத்தம்புதிய கண்டுபிடிப்பை
வரப்போகிற பருவத்திற்கு முன்பாக தென்னிந்திய சந்தையில் அறிமுகப்படுத்த மகிழ்ச்சி
அடைகிறோம். தென்னிந்தியாவில் விரைவில் மழைக்காலம் தொடங்கவிருப்பதால், நீரைச்
சூடாக்கும் பிரீமியம் தீர்வுகளுக்காகத் தேடும் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய இந்தப்
புதிய சீரியல் உதவும். இந்த லக்ஸ்கியூப் சீரியல் நவீன இந்திய வாடிக்கையாளரின்
வளர்ந்து வரும் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்திசெய்யும் வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது, இது எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின்
பேராதரவைப் பெறும் என்று நம்புகிறோம்.”
இந்த லக்ஸ்கியூப் சீரியல் 5-நட்சத்திர BEE திறன் ரேட்டிங்கைப் பெற்றுள்ளது, இது இந்தியாவின் எரிசக்தி செயல்திறனுக்கான
மிக உயர்ந்த சான்றிதழ் ஆகும். அதோடு, இந்தத் தயாரிப்பிற்கு 3 வருட உத்தரவாதம், ஹீட்டிங்
எலிமெண்டிற்கு 4 வருட உத்தரவாதம், மற்றும் டாங்கிற்கு 10 வருட உத்தரவாதம்
கிடைப்பதால் வாங்கிய பிறகும் நீண்ட காலத்திற்கு மன அமைதியை அளிக்கிறது.
இந்த லக்ஸ்கியூப் சீரியல் தென்னிந்தியா முழுவதிலும் உள்ள வீ-கார்டின்
அங்கீகாரம் பெற்ற டீலர்கள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்களில் இப்போது கிடைக்கிறது.
* கொள்ளளவு மற்றும் சோதனை நிலைமைகளைப் பொறுத்து இந்தச்
சதவிகிதம் மாறும்
About V-Guard Industries
Ltd.
V-Guard Industries Limited
is India’s leading consumer electrical and electronics major based in Kochi. A
publicly listed entity, the company recorded revenues of Rs 5577.82 crores in
FY 2025 and is present across the country with 35 branches and over 1,00,000
channel partners. Founded in 1977 by Mr Kochouseph Chittilappilly to
manufacture and market Voltage stabilizers, it has now become a force to reckon
with in the Indian electric and electronic goods panorama. The company, in the
last 48 years, has established a strong brand name and aggressively diversified
into a multi-product company with a portfolio including Voltage stabilizers,
Inverter & Inverter Batteries, Electric Water Heaters, Solar Water Heaters,
Pumps & Motors, Domestic Switchgears, Wires & Cables, Fans, Modular
Switches, Air Coolers and Kitchen Appliances. V-Guard not only exhibits market
leadership in India in several categories but also product leadership through
launching several ‘industry-first’ smart products such as Intelligent &
Smart Water Heaters, Smart Inverters, Smart fans with LED lights and several
other innovative and aesthetically superior designs in various product categories.