மொத்தப் பக்கக்காட்சிகள்

லஷ்மி விலாஸ் பேங்க் - 2018, ஜூன் 30 காலாண்டு - வங்கியின் மொத்த வணிகம் ரூ. 58,600 கோடி

லஷ்மி விலாஸ் பேங்க் - 2018ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டுக்கான  நிதி நிலை 


முக்கிய நிதி நிலை முடிவுகள் :
ü   வங்கியின் மொத்த வணிகம் ரூ.5,888 கோடி அதிகரித்துள்ளது. அதாவது ரூ. 52,712  கோடியிலிருந்து ரூ.58,600 கோடியாக அதிகரித்துள்ளது.  இது 11.17% அதிகரிப்பு.
ü  காசா ரூ. 1,256  கோடி அதிகரித்துள்ளது. அதாவது ரூ. 5,708   கோடியிலிருந்து ரூ.6,964 கோடியாக அதிகரித்துள்ளது . 2018 ஜூன் 30 நிலவரப்படி காசா 21.45% ஆக உள்ளது. இது, 2017 ஜூன் 30 நிலவரப்படி, 19.36% ஆக இருந்தது.
ü  நிகர வட்டி வருமானம் (NII), ரூ. 120 கோடியிலிருந்து   ரூ. 130 கோடியாக அதிகரித்துள்ளது.
ü  வங்கியின் நிகர வட்டி வரம்பு (Net Interest Margin - NIM)), 2018 ஜூன்   30 ஆம் தேதி நிலவரப்படி 1.48% ஆக உள்ளது. இது 2017  ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி 1.34% ஆக இருந்தது
ü  செயல்பாட்டு லாபம் ரூ. 6.76 கோடி. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ..69.25 கோடி இழப்பாக இருந்தது.
ü  மூலதன தன்னிறைவு விகிதம் (பேசல் III), 2018 ஜூன் 30  உடன் முடிந்த காலாண்டில் 9.45% ஆக உள்ளது.  இது, 2017 ஜூன் 30  உடன் முடிந்த காலாண்டில் 9.81% ஆக இருந்தது.
தனியார் துறையை லஷ்மி விலாஸ் பேங்க்  (Lakshmi Vilas Bank - LVB), 2018-19 ஆம் நிதி ஆண்டு முதல் (ஜூன்) காலாண்டு நிதி நிலை முடிவுகளை அறிவித்துள்ளது

முக்கிய நிதி நிலை முடிவுகள் ::
± வங்கியின் மொத்த வணிகம் 2018 ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 58,600.39  கோடியாக உள்ளது. இது 11.17%  உயர்வு
± வழங்கப்பட்ட மொத்தக் கடன் ரூ. 23,236.19 கோடியிலிருந்து  ரூ. 26,127.13 கோடியாக அதிகரித்துள்ளது. இது  12.44% அதிகரிப்பு.
± திரட்டப்பட்ட மொத்த டெபாசிட் 2017  ஜூன்  30 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 29,475.53 கோடியாக இருந்தது. இது 2018, ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 32,473.26  கோடியாக உயர்ந்துள்ளது. இது 10.17% உயரவு,
± காசா ரூ. 5,707.69 கோடியிலிருந்து ரூ.6,963.93 கோடியாக உயர்ந்துள்ளதுஇது, 22.01% அதிகரிப்பாகும்.
± மொத்த டெபாசிட்டில் காசாவின் பங்களிப்பு 19.36%% லிருந்து 21.45% ஆக அதிகரித்துள்ளது .
± நிகர வட்டி வருமானம் (Net Interest Income -NII), 2017-18 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 217.73 கோடியாக இருந்தது. இது, 2018-19 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 130.20 கோடியாக உள்ளது. இது, 2017-18 கடைசி காலாண்டின் ரூ. 120.47 கோடியை விட அதிகமாகும். 
± வங்கியின் நிகர வட்டி வரம்பு (Net Interest Margin - NIM)), 2018  ஜூன்  30 ஆம் தேதி நிலவரப்படி 1.48% ஆக உள்ளது. இது 2017, ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி 2.74% ஆக இருந்தது.
± வங்கியின் செலவு மற்றும் வருமானத்துக்கான விகிதம் ( Cost to Income ratio) 96.46% ஆக உள்ளது. (முந்தைய ஆண்டு 46.90%).  இது இது, 2017-18 -ன் கடைசி காலாண்டில் 143.62 ஆக இருந்தது.
± 2018, ஜூன்   30 ஆம் தேதி உடன் முடிந்த  காலாண்டில் வங்கியின் நிகர இழப்பு  ரூ. 123.87 கோடியாக உள்ளது. முந்தைய 2017 ஜூன்  30 ஆம் தேதி உடன் முடிந்த காலாண்டில்  ஆண்டில்  வங்கியின்  நிகர  லாபம்  ரூ. 66.12 கோடியாக இருந்தது. அதேநேரத்தில், இது, 2017-18 கடைசி காலாண்டின் நிகர இழப்பான ரூ.622.25 கோடியிலிருந்து மேம்பட்டுள்ளது.  
மூலதன தன்னிறைவு விகிதம் (Capital Adequacy):
வங்கியின் மொத்த மூலதன தன்னிறைவு விகிதம் (Capital Adequacy Ratio-CAR), பேசல் III விதிமுறைகளின் படி (Basel III guidelines) 2018  ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி 9.45ஆக உள்ளது. இது 2017  ஜூன்  30 ஆம் தேதி நிலவரப்படி 11.67ஆக இருந்தது.

 வாராக் கடன் (NPA)
மொத்த வாராக் கன் (Gross NPA), 2018 ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி,10.73% ஆக உள்ளது. இது, 2017 ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி 3.78%  ஆக இருந்தது. 2018 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி 9.98% ஆக இருந்தது.
நிகர வாராக் கடன் (Net NPA) 5.96% ஆக உள்ளதுமுந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 2.84% ஆக இருந்தது. 2018 மார்ச் மாதத்தில் இது 5.66% ஆக இருந்தது.  வாராக் கடன் ஒதுக்கீடு கவரேஜ் விகிதம்  55.80 %  (51.32%/55.07%) ஆக உள்ளது.

புதிய முயற்சிகள் (New Inititatives)

a.       கிழக்கு இந்தியாவில் வங்கியின் முதல் பிசி செயல்பாடுகள் (BC operations) தொடங்கி உள்ளன. கிழக்கு இந்தியாவில் வங்கியின் செயல்பாடுகளை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
b.       வேளாண் சார்ந்த தங்க நகை வட்டி மானியக் கடன் திட்டம் (Agri based Gold Loan subvention scheme) இந்த வங்கியால் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வட்டி மானியம் பெற முடிகிறது.
c.        டைனமிக் ஃபிளக்ஸி கரன்ட் (Dynamic Flexi Current) கணக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது.  
d.       அனைத்து ஏடிஎம் மையங்களும் தொலைபேசி எண் அடிப்படையிலான ஐஎம்பிஎஸ் (IMPS) பரிவர்த்தனை வசதியுடன் இயங்குகின்றன.

வங்கி கிளைகள் (Network)

2018  ஜூன் 30 நிலவரப்படி வங்கிக்கு  18 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் 561 கிளைகள், 5  விரிவாக்க மையங்கள், 1031 ஏடிஎம் மையங்கள் உள்ளன. 
லஷ்மி விலாஸ் பேங்க்-ன் இயக்குநர் குழு, 2018 ஜூன் 30 ஆம் தேதி உடன் முடிந்த காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகளுக்கு சென்னையில் 2018 ஜூலை 26 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி உள்ளது.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...