IPO ஐ.பி.ஓ முதலீட்டில் சிறு முதலீட்டாளர்கள் ஆர்வம்..!
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில், 'பிரைமரி மார்க்கெட்' எனப்படும் ஐ.பி.ஓ.,க்களில், சிறு முதலீட்டாளர்கள் இதுவரை இல்லாத அதிக அளவாக 34,840 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
இதற்கு முந்தைய நிதி யாண்டு முழுதும், 34,336 கோடி ரூபாய் முதலீடு - செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் எட்டு மாதங்களிலேயே அதைவிட அதிகமான தொகை ஐ.பி.ஓ.,க்களில் முதலீடு செய்யப்பட் டுள்ளது.
அதேநேரம், 'செகண் டரி மார்க்கெட்' எனப் படும், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு நடைபெற்ற வர்த்தகத்தில்
சிறுமுதலீட்டாளர்களின் முதலீடுகளில், 13,000 கோடி ரூபாய் வெளியேறி உள்ளது.
சந்தையில் நிலவும் மந்தமான சூழலிலும், சிறு முதலீட்டாளர்கள் புதிய பங்கு வெளியீட்டில் ஆர்வம் காட்டுவதையே இது சுட்டிக்காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிறு முதலீட்டாளர்கள் ஐ.பி.ஓ., முதலீடு
2021-22 ரூ. 19,539 கோடி
2022-23 ரூ.13,448 கோடி
2023-24 ரூ.18,057 கோடி
2024-25 ரூ.34,336 கோடி
2025-26. ரூ.34,840 கோடி
(ஆதாரம்: தேசிய பங்கு சந்தை)