சென்னையில் IFLMEA
தோல் பொருள்கள் பேஷன் ஷோ…!
இந்தியாவின் உயர்தர
தோல் பொருள்கள் தொழிலை உலகளவில் அறிமுகப்படுத்தும் வகையில், நடப்பு 2026 ம் ஆண்டுக்கான
தோல் ஃபேஷன் ஷோ மற்றும் பிராண்ட் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியை
இந்திய உயர்தர தோல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (Indian
Finished Leather Manufacturers & Exporters Association - IFLMEA) ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியின்
முக்கிய ஸ்பான்ஸர்களாக கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL), சபா குழுமம்
மற்றும் மைக்ரோபாக் ஆகியவை இருக்கின்றன.
![]() |
| Dr.ரஃபிக் அகமது |
KICL தலைவர் Dr.ரஃபிக் அகமது:
2026 பிப்ரவரி
1 -ஆம் தேதி, சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் இந்த தோல் ஃபேஷன் ஷோ நடைபெறுகிறது.
இதில் இந்தியா முழுவதிலுமிருந்து 14-க்கும் மேற்பட்ட முன்னணி தோல் உற்பத்தியாளர்கள்
பங்கேற்கின்றனர். உயர்தர காலணிகள், தோல் ஆடைகள், கைப்பைகள் மற்றும் தோல் துணைப் பொருட்கள்
இதில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. 70-க்கும் மேற்பட்ட மாடல்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி
குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கான நிகழ்ச்சி சென்னை தாஜ் கன்னிமாராவில் ஜனவரி 30,
2026 -ல் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில்
KICL தலைவர் Dr.ரஃபிக் அகமது, KICL CEO மற்றும் இயக்குநர் Dr.N.முத்து மோகன்,
IFLMEA தலைவர்அதீகுர் ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
![]() |
| அதீகுர் ரஹ்மான் |
IFLMEA தலைவர் அதீகுர் ரஹ்மான்:
இந்த நிகழ்ச்சியில்
பேசிய IFLMEA தலைவர் அதீகுர் ரஹ்மான், “இந்த ஃபேஷன் ஷோ இந்திய தோல் பொருட்களின் தரம்
மற்றும் புதிய வடிவமைப்புகளை, உலகளாவிய சந்தைக்கு எடுத்துச் செல்லும் முக்கிய வாய்ப்பாக
இருக்கும். இதன் மூலம் சர்வதேச வணிக தொடர்புகள் உருவாகும்” என்றும் தெரிவித்தார்.
நுகர்வோரிடம் நல்ல வரவேற்பு..!
இந்தியாவில் தோல்
பொருட்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக குளிர்காலத்திற்கு
ஏற்ற தோல் ஆடைகள் மற்றும் வசதியான தோல் காலணிகள் நுகர்வோரிடம் நல்ல வரவேற்பைப் பெறுவதாகவும்
அதீகுர் கூறினார்.
இந்த ஃபேஷன் ஷோவை
பாஸ்கரன் சந்திர சேகர் இயக்குகிறார். ஜூட் பெலிக்ஸ் நடன அமைப்பு செய்கிறார். இதன் தொடர்ச்சியாக,
பிப்ரவரி 2, 2026 அன்று பிராண்ட் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இதில் தோல் உற்பத்தியாளர்கள்
மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் கலந்து கொண்டு, சந்தைப் மற்றும் கூட்டமைப்பு வாய்ப்புகள்
குறித்து விவாதிக்க உள்ளனர்.
சமீப கால சவால்களுக்கு
பிறகு, தோல் பொருட்கள் தொழில் மீண்டும் வளர்ச்சி பாதையில் இருப்பதாக IFLMEA தெரிவித்துள்ளது.
உள்நாடு மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் சேர்ந்து ஆண்டுக்கு ஆண்டு சுமார் 15% வளர்ச்சி
காணும் என கணிக்கப்பட்டுள்ளது.


