அபார்ட்மென்ட் உரிமையாளர் சங்கங்களின் பதிவு, 'ஆன்லைன்' முறைக்கு மாற்றம்
சென்னை, ஜன. 27- 2026
அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கங்களின் பதிவு மற்றும் புதுப்பித்தல் போன்ற பணிகள், முழுமையாக, 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் அடுக்குமாடி வீடு உரிமையாளர்கள் சட்டம், 2022ல் நிறைவேற்றப்பட்டது.
இந்த புதிய சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே, அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கங்களை பதிவு செய்ய வேண்டும் என, அரசு உத்தர விட்டது.
இதற்கான பொறுப்பு அலுவலர்களாக,
பதிவுத்துறையின் மாவட்ட பதிவாளர்கள் செயல்படுவர் என்றும் அரசு அறிவித்தது.
ஆனால், மாவட்ட பதிவாளர்கள், பழைய தமிழக சங்கங்கள் பதிவு சட்டத்தின் அடிப்படையிலேயே, அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்களை பதிவு செய்து வந்தனர்.
இதை தவிர்க்க, பதிவுத் துறை இணையதளத்தில், அடுக்குமாடி குடியிருப்பு சங்கப்பதிவு மற்றும் புதுப்பித்தலுக்கான புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதை ஒட்டி ஏற்கனவே பதிவு செய்து செயல்படும் சங்கங்களை, புதிய சட்டத்துக்கு மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன
3.0' என்ற புதிய மென்பொ ருள் அமலுக்கு வந்துள்ளது. அதில் ஒரு பகுதியாக, வழக்கமான சங்கங்கள் பதிவு, அடுக்குமாடி குடியிருப்பு சங்கப்பதிவு, தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சங்கங்கள் பதிவு பணிகளை, புதுப்பித்தல் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு செல்லாமலேயே, 'ஆன் லைன்' முறையில் மட்டும் மேற்கொள்ளலாம்.
ஏற்கனவே பதிவு செய்து செயல்படும் சங்கங்களை, புதிய சட்டத்துக்கு மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாக பணிகளில் குழப்பங்கள் தவிர்க்கப்படும். சங்கப் பதிவு பணிகள் எளிதாகும்.