வெள்ளி,
தங்க விலை வீழ்ச்சி: இப்போது சிறு முதலீட்டாளர்கள்
என்ன செய்ய வேண்டும்?
–
சு. ஸ்ரீதரன், CEO, Wallet Wealth
சமீப காலமாக தங்கம்
மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் சரிவுகள், மீண்டும் ஒரு முறை சரக்கு
(Commodities) சந்தைகளை முதலீட்டாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளன.
மிகக் குறுகிய
காலத்தில், இந்த இரு மதிப்புமிக்க உலோகங்களும் கணிசமான விலை சரிவை சந்தித்துள்ளன. இதனால்
சில முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்; சிலருக்கு “இப்போது வாங்கலாமா?” என்ற ஆசையை
ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில்,
முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான நடத்தைப் பாடம் உள்ளது. அதுதான்
பொதுவாக கூறப்படும் “சூடான நீரில் தவளை” (Frog in Hot Water) என்ற கதையின் உவமை.
“சூடான
நீரில் தவளை” – முதலீட்டில் அதன் பொருள்
ஒரு தவளையை திடீரென
சூடான நீரில் போட்டால், அது உடனே வெளியே குதித்து தப்பிக்கும். ஆனால் அதே தவளையை மெதுவாக
வெப்பம் அதிகரிக்கும் நீரில் வைத்தால், ஆபத்தை உணராமல் இருந்து இறுதியில் பாதிக்கப்படும்.
சந்தைகளும் இதேபோல் தான்.
திடீர் அதிக ஏற்ற இறக்கங்கள் முதலீட்டாளர்களின் கவனத்தை உடனே ஈர்க்கும்.
ஆனால் மெதுவாக
உருவாகும் அதிக மதிப்பீடுகள் (Excess Valuations) அல்லது ரிஸ்க்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல்
போகும். பின்னர் அவை ஒரே சமயத்தில் வேகமாக கலைந்து, விலை வீழ்ச்சியாக வெளிப்படும்.
காலத்தை
கடந்து நிற்கும் முதலீட்டு விதிமுறை.:
இந்த நிலையில்,
முதலீட்டாளர்கள் மறக்கக் கூடாத ஒரு அடிப்படை உண்மை உள்ளது:
சொத்து
ஒதுக்கீடு (Asset Allocation) என்பது திடீர் முடிவாக இருக்கக் கூடாது.
தங்கம், வெள்ளி
அல்லது வேறு எந்த சொத்து வகையிலும் முதலீடு செய்வது, விலை சரிந்ததற்காகவோ, செய்தித்
தலைப்புகளுக்காகவோ, பயம் அல்லது முதலீட்டை வாய்ப்பை தவறவிட்டு விட்டோமே என்கிற (FOMO
- Fear of Missing Out) காரணமாகவோ எடுக்கப்படும் முடிவாக இருக்கக் கூடாது.
சொத்து
ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகள்:
ஒரு முதலீட்டாளர்
தன் முதலீட்டுக் கவலைவையில் (போர்ட்ஃபோலியோ) தங்கம் அல்லது வெள்ளிக்கு எவ்வளவு இடம்
கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும்போது, கீழ்கண்ட அம்சங்கள் முக்கியம்:
·
முதலீட்டு இலக்குகள் (Portfolio
Objectives)
பணி ஓய்வுக் காலம், குழந்தைகளின் கல்வி, மூலதன பாதுகாப்பு போன்ற நோக்கங்கள்.
·
ரிஸ்க்
சகிப்புத்தன்மை (Risk Tolerance)
விலை ஏற்ற இறக்கங்களை மனதளவில் மற்றும் நிதியளவில் எவ்வளவு தாங்க முடியும்?
·
கால அவகாசம் (Time Horizon)
குறுகிய காலமா, நடுத்தர காலமா? நீண்டகால முதலீடா?
·
போர்ட்ஃபோலியோ பல்வகைப்படுத்தல்
(Diversification)
பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் (நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி
ஃபண்ட்), கடன் சந்தை சார்ந்த முதலீடுகள் (ஃபிக்ஸட் டெபாசிட், கடன் சந்தை
மியூச்சுவல் ஃபண்டுகள்), தங்கம் / வெள்ளி போன்ற சொத்துகளின் கலவை.
சரக்கு
சந்தைகளின் இயல்பு
தங்கம் மற்றும்
வெள்ளி போன்ற சரக்கு சொத்துகள் இயல்பாகவே சுழற்சி தன்மை கொண்டவை (Cyclical).
ஒரு காலத்தில் சிறப்பான வருமானம் கொடுத்தவை, அடுத்த கட்டத்தில் இறக்கங்களை சந்திக்கலாம்.
அதேபோல், நீண்ட காலமாக செயலற்ற நிலையில் இருந்தவை, திடீரென கவனம் பெறவும் முடியும்.
இந்தச் சுழற்சிகளை
சரியாக “டைம்” செய்ய முயற்சிப்பது பெரும்பாலும் சராசரிக்கு கீழான (Suboptimal) முதலீட்டு
முடிவுகளையே தருகிறது.
சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்த நிலையில்,
முதலீட்டாளர்களுக்கு எங்கள் ஆலோசனை:
·
உங்கள்
நீண்டகால
சொத்து ஒதுக்கீட்டுடன் இணைந்தே செயல்படுங்கள், அதிக ஏற்ற இறக்கங்கள் உள்ள காலங்களில்
உணர்ச்சிப்
பூர்வமான முடிவுகளை தவிர்க்கவும்
·
போர்ட்ஃபோலியோவை
குறிப்பிட்ட இடைவெளியில் மதிப்பாய்வு செய்யுங்கள்; ஆனால் பதற்றத்துடன்
அல்ல
·
விலை
வீழ்ச்சி என்ற ஒரே காரணத்துக்காக முதலீட்டுத் திட்டத்தை மாற்ற வேண்டாம்
நிறைவாக, முதலீடு
என்பது ஒரு பயணம்
(Journey);
அது ஒரு உடனடி
எதிர்வினை (Reaction) அல்ல.
வேகம் அல்ல, ஒழுங்கும்
(Discipline) பொறுமையும் (Patience) தான் நீண்டகாலத்தில் உண்மையான செல்வதை
சேர்த்து தரும்.
எப்போதும் போல,
தற்போதைய சந்தை நிலைமைகள் உங்கள் மொத்த நிதி திட்டத்தில் எவ்வாறு பொருந்துகின்றன என்பதை
கவனிக்கவும். சரியான வழிகாட்டலை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
| சு. ஸ்ரீதரன் |
S. Sridharan
CEO
Wallet Wealth LLP,
2nd Floor, No 8A, 2nd
Main Road,
Nanganallur, Chennai 600
061
Ph : 99401 16967
Visit : www.walletwealth.co.in