மல்டி கமாடிட்டி சந்தையில் வெள்ளி விலை இரண்டு நாளில் 30% சரிவு
மல்டி கமாடிட்டி சந்தை (MCX)யில் கடந்த இரண்டு நாட்களில் வெள்ளி விலை சுமார் 30 சதவீதம் வரை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
2026 ஜனவரி 29ம் தேதி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.4.20 லட்சமாக உயர்ந்து உச்சத்தை எட்டியது. ஆனால் அதன் பின்னர் விலை வேகமாக இறங்குமுகம் கண்டது. ஜனவரி 30ம் தேதி வர்த்தக முடிவில் வெள்ளி விலை ரூ.2.91 லட்சமாக குறைந்து நிறைவடைந்தது.
பங்குகள் அல்லது கமாடிட்டி பொருட்களின் விலை குறிப்பிட்ட சதவீதத்துக்கும் மேல் ஒரே நாளில் கீழே சரியாமல் தடுப்பதற்காக ‘லோயர் சர்கியூட்’ நடைமுறை பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, ஜனவரி 30ம் தேதி வெள்ளி வர்த்தகத்தின் போது லோயர் சர்கியூட் அமல்படுத்தப்பட்டது.
இரண்டு நாட்களுக்குள் ஒரு கிலோ வெள்ளி விலை சுமார் ரூ.1.30 லட்சம் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது. முதலீட்டாளர்கள் பெருமளவில் லாபத்தை பதிவு செய்ததுதான் இந்த திடீர் விலை வீழ்ச்சிக்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இதற்கு மேலாக, அமெரிக்க டாலர் மதிப்பு சமீபத்தில் வலுப்பெற்றதும் வெள்ளி விலை குறைவுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்ததாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.