கோல்டு இ.டி.எப்., திட்டத்தில் ரூ.43,000 கோடி முதலீடு
கடந்த 2025ம் ஆண்டு இந்திய மியூச்சுவல் பண்டு வரலாற்றில், தங்கத்திற்கு ஒரு பொற்கா லமாக அமைந்தது.
பங்குச் சந்தையில் நிலவிய மந்தநிலை காரணமாக, 43,000 கோடி ரூபாயை இந்தியர்கள் கோல்டு இ.டி.எப்.,களில் முதலீடு செய்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 11,600 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்வாயிலாக, உலகளாவிய கோல்டு இ.டி.எப்., சந்தையில் இந்தியாவின் பங்கு 2.5 சத வீதமாக உயர்ந்துள்ளது.