கட்டுமான நடைமுறைகளுக்கான சிறப்பு மையம் சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியுடன் சென்னை
கிரெடாய் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை, நவ. 21- மாணவர்கள் தாங்கள் படிப்பதற்கும் நேரடி அனுபவத்திற்கான இடைவெளியை குறைக்க, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையின் நடைமுறைத் தேவைகளை பூர்த்தி
செய்யும் வகையில் ஒரு முன்னோடி முயற்சியாக சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல்
பாலிடெக்னிக் கல்லூரியுடன் இணைந்து ‘கட்டுமான நடைமுறைகளுக்கான சிறப்பு மையத்தை’
துவக்க சென்னை கிரெடாய் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த மையம் ஆய்வக உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கட்டுமான தொழில்துறை சார்ந்த
பயிற்சி தொகுதிகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் திறமையான கட்டுமான
மேற்பார்வையாளர்களை உருவாக்குதல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்த இருக்கிறது. மேலும்
இந்த மையத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு கிரெடாய் அமைப்பில் உறுப்பினராக உள்ள கட்டுமான
நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் நேரடியாக ஆறு மாத
பயிற்சியும், மேற்பார்வை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது. இதன்
காரணமாக அவர்கள் அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொள்வதோடு திறன்களையும்
வளர்த்துக் கொள்ள முடியும்.
தொழில் - கல்வி கூட்டாண்மைகளை வலுப்படுத்தும் வகையில்
இந்த பயிற்சியானது திறன் மேம்பாட்டுக் குழு தலைவர் ஆர். ஜெயக்குமார் தலைமையில், கிரெடாய் சென்னை செயற்குழு உறுப்பினர் அருள், சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தரணிபதி மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின்
மூத்த ஆலோசகர் பேராசிரியர் துர்கானந்த் பால்சவர் ஆகியோரால் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து கிரெடாய் சென்னை தலைவர் முகமது அலி
கூறுகையில், இந்த மையத்தின் மூலம் மாணவர்கள் கற்றலுடன் நேரடி பணி
அனுபவத்தையும் பெற முடியும். மேலும் கட்டுமானப் பணிகளுக்கான தொழில்நுட்ப திறன்கள்
மற்றும் நடைமுறை வெளிப்பாடுகளுடன் கூடிய தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய
கட்டுமான மேற்பார்வையாளர்களை நாங்கள் உருவாக்க இருக்கிறோம். இதன் காரணமாக
மாணவர்களின் திறமை மேம்படுவதோடு, இது தமிழக கட்டுமானத் துறையில்
புதியதொரு எழுச்சியை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.
----------------------------------------------------------------------------------------------------------------
