இந்திய கணிதவியலாளர் நீலகண்ட பானுவின் பன்சு கணித மையம்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் திறப்பு
ஐதராபாத் / சென்னை, 27 நவ. 2025- உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் கணித
கற்றல் இணைய தளமான பன்சு, தனது நேரடி கணித கற்றல் மையத்தை அமெரிக்காவின் டெக்சாஸ்
மாகாணத்தில் உள்ள மெக்கின்னியில் திறந்துள்ளது.
உலகின் வேகமான மனித கால்குலேட்டர் என்று
அழைக்கப்படும் இந்திய கணிதவியலாளர் நீலகண்ட பானுவால் துவக்கப்பட்ட இந்த
இணையதளம், உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு கணிதத்தை மிகவும் ஈடுபாட்டுடன், எளிதாக
புரியக்கூடிய வகையிலும் அவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக கற்பித்து
வருகிறது. தற்போது இணையத்தை கடந்து அதன் நேரடி கற்றல் மையம் அமெரிக்காவில்
திறக்கப்பட்டுள்ளது.
பன்சு ஏற்கனவே அதன் ஆன்லைன் கற்றல்
திட்டங்கள் மூலம் அமெரிக்கா முழுவதும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அறிவியல்,
தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த கல்விக்கான தேவை டெக்சாஸ்
மாநிலத்தில் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், பெற்றோர்கள் மற்றும் பள்ளிகளிடையே
கணிதத் பாடத் திட்டங்கள் மீதான ஆர்வம் ஆகியவற்றின் காரணமாக நேரடி கற்றல் மையம்
இங்கு திறக்கப்பட்டு இருப்பதாக பன்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து பன்சு நிறுவனர் மற்றும்
தலைமை செயல் அதிகாரி நீலகண்ட பானு கூறுகையில், பன்சு மையம் முதல் முறையாக அமெரிக்காவில்
துவக்கப்பட்டு இருப்பது என்பது, உலக அளவிலான விரிவாக்கத்திற்கான முதல் படியாகும்.
கணித உலகிற்கு இந்தியா நீண்ட காலமாக தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. எங்கள்
முதல் அமெரிக்க கற்றல் மையம் மூலம் இந்தியாவில் இருந்து பன்சுவை உலக அளவில் கொண்டு
வருவது எங்களுக்கு ஒரு பெருமையான தருணம் ஆகும். கற்றல் மற்றும் ஈடுபாட்டின்
தனித்துவமான இந்த முறையை அமெரிக்க வகுப்பறைகளுக்குக் கொண்டு செல்வதோடு, இளம் தலைமுறையினரின் கணிதம் சார்ந்த
பல்வேறு சந்தேகங்களுக்கு சிறந்த தீர்வு அளிப்பதிலும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி
அடைகிறோம் என்று தெரிவித்தார்.
பன்சு இணை நிறுவனர் மற்றும் வணிக
மேம்பாட்டுத் தலைவர் பிரச்சோதன் கூறுகையில், உலக அளவில் கணிதம் மீதான பயத்தை
போக்குவதே எங்கள் நோக்கம் ஆகும். அமெரிக்காவில் எங்கள் முதல் மையம் திறப்பு என்பது
வெறும் விரிவாக்கம் மட்டுமல்ல, லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு கணிதம் மீதான
ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும். படைப்பாற்றல், தொழில்நுட்பம் மற்றும்
ஆழமான கற்பித்தல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு
கணிதம் மீதான ஆர்வத்தை மட்டுமல்லாமல், அதை சுவாரஸ்யமாக கற்றுக் கொடுக்க
இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
பன்சுவைப் பொறுத்தவரை வேகமான கணித
நுட்பங்கள், கதைசொல்லல், கேமிஃபிகேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை
ஒருங்கிணைத்து, கணிதம் மீதான ஈடுபாட்டை ஏற்படுத்துகிறது. இந்தியா உட்பட உலக அளவில்
16 நாடுகளில் 50
ஆயிரத்திற்கும் மாணவர்கள் பன்சுவை பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் 40
மில்லியனுக்கும் அதிகமான கணித கேள்விகளுக்கு தீர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதை
பயன்படுத்தும் மாணவர்கள் ஐந்து மாதங்களில் தங்கள் வேகத்தையும் துல்லியத்தையும் 4
மடங்கு மேம்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.