மனிதம் காக்கும் மனிதர்களையும், மகத்தான சாதனை புரிந்த நிஜ உலக ஹீரோக்களையும் பாராட்டி கௌரவிக்கும் 9-வது அலர்ட் பியிங் விருதுகள் விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை : அலர்ட் தன்னார்வ தொண்டு அமைப்பு நாடு முழுவதும் விபத்து மற்றும் அவசர காலங்களில் உயிர் காத்த நல்ல உள்ளங்களை பாராட்டி கௌரவிக்கும் விதமாக கடந்த எட்டு ஆண்டுகளாக அலர்ட் பியிங் விருதுகளை வழங்கி வருகிறது. தற்போது அதன் 9-வது அலர்ட் பியிங் விருதுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது... விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 20டிசம்பர்,2025. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட இருக்கிறார்கள். விபத்து மற்றும் அவசர காலங்களில் சிக்கி தவித்தவர்களை கண்ணியத்துடன் காப்பாற்றிய அல்லது பாதுகாத்த அல்லது அதற்கு உதவியாக இருந்து செயல்பட்ட இந்தியா முழுவதும் உள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களை கௌரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.
இந்த மதிப்பு மிக்க விருதானது அவர்களின் தைரியம், இரக்கம், மற்றும் மனித குலத்திற்கு முன்மாதிரியான சேவை இவற்றை அங்கீகரித்து, அவசர காலங்களில் தன்னலம் இன்றி உயிரைக் காப்பாற்றிய நல்ல உள்ளங்களை கௌரவிக்கும் விதமாக வழங்கப்படுகிறது. அலர்ட் பியிங் விருதுக்கு தனிநபர், தொண்டு நிறுவனம், தனிநபர் - கடமைக்கு அப்பாற்பட்ட சேவை, அமைப்பு - சமூக மேம்பாடு என பல்வேறு பிரிவுகளின் கீழ் நடுவர் குழுவின் பரிந்துரையின் பெயரில் தேர்வு செய்யப்படுவார்கள். தங்கள் வாழ்நாள் முழுதும் மனித குலத்திற்கு சேவை செய்து வருபவர்கள் அல்லது நிறுவனத்திற்கு ஹைகான் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும் அலர்ட் வழங்குகிறது. இந்த ஆண்டும் அலர்ட் பியிங் விருதுகள் நாடு முழுவதும் விபத்து மற்றும் அவசர காலங்களில் உயிரை காப்பாற்றிய அல்லது பாதுகாத்த 10 நல்ல உள்ளங்களுக்கு வழங்கப்படுகிறது.
இவர்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவின் உறுப்பினர்களாக, ஓய்வு பெற்ற தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையர்.திரு. சகிலத்தர், லிமா தலைவர். டாக்டர். ஜே. எஸ். ராஜ்குமார், ஆற்காடு நவாப். திரு. நவாப் சதா முகமது ஆசிப் அலி, நேச்சுரல் சலூன் நிறுவனர். திருமதி. வீனா குமரவேல், மாற்றம் அறக்கட்டளை. நிறுவனர். திரு. சுஜித் குமார் மற்றும் தொழிலதிபர்.திரு.ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் நிஜ ஹீரோக்களை தேர்வு செய்வார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஆலோசகர்களாக ரேடியன்ட் மெடிக்கல் சர்வீசஸ் நிர்வாக இயக்குனர். டாக்டர். திருமதி. ரேணுகா டேவிட் மற்றும் நேச்சுரல்ஸ் சலூன்ஸ் & ஸ்பா தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர்.திரு. சி. கே. குமரவேல் ஆகியோர் உள்ளனர்.
அலர்ட் பியிங் விருதுகள் குறித்து அலர்ட் தொண்டு அமைப்பின் தலைவர் திரு.வி.எம்.முரளிதரன் கூறுகையில்,
அலர்ட் பியிங் விருதுகள் என்பது தனி நபர்களை அங்கீகரிப்பது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வு கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காகவும் வழங்கப்படுகிறது. ஒரு உயிரை காப்பாற்றும் ஒவ்வொரு செயலும் மனித குலத்தின் ஆற்றலுக்கும், பாதுகாப்பதற்கும் சான்றாக உள்ளது என்று தெரிவித்தார்.
விண்ணப்பிக்கும் விவரங்கள்
உயிர் காக்கும் செயல்கள் அல்லது முயற்சிகளில் ஈடுபட்ட இந்தியா முழுவதும் உள்ள தனி நபர்கள் மற்றும் அமைப்புகளை பரிந்துரை செய்யலாம்.
அடுத்த மாதம் 20ஆம் தேதி வரை www.aba.alert.ngo என்ற இந்த வலைத்தளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
