ஊனமுற்ற சாதனையாளர்களை
கௌரவிக்கும் 24வது கவின்கேர் எபிலிட்டி விருதுகளுக்கான விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன
“நாடு முழுவதும் உள்ள ஊனமுற்ற
சாதனையாளர்கள் கவின்கேர் எபிலிட்டி விருதுகளுக்கான
விண்ணப்பங்களை வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2025-க்கு
முன்பாக விண்ணப்பிக்கலாம்! “
சென்னை, அக்டோபர் 22, 2025: ஊனமுற்ற சாதனையாளர்களின் விடாமுயற்சிகளை அங்கீகரிக்கும்
வகையில், கவின்கேர் (CavinKare) மற்றும் எபிலிட்டி ஃபவுண்டேஷன்
(Ability Foundation) ஒருங்கிணைந்து நடத்தும் 24 வது கவின்கேர் எபிலிட்டி விருதுகள்
(CAVINKARE ABILITY AWARDS) 2026 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2003ஆம் ஆண்டு முதல், தன்னம்பிக்கை, திறமை மற்றும்
விடாமுயற்சியின் மூலம் சமூக மனப்போக்குகளை மாற்றிய 101 சாதனையாளர்களை
இவ்விருது கௌரவித்துள்ளது.விருதுக்கு பரிந்துரை செய்வதற்கான
கடைசி தேதி – வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2025 ஆகும். ஆன்லைன்
மூலம் பரிந்துரைக்க www.abilityfoundation.org அல்லது www.cavinkare.com
இணையத்தளங்களை அணுகலாம். . அல்லது +91
98400 55848ஐ அழைக்கவும் .
நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊனமுற்ற சாதனையாளர்களை கௌரவிக்கும்
கவின்கேர் எபிலிட்டி விருதுகள் இரண்டு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன:
1.
கவின்கேர் எபிலிட்டி எமினன்ஸ் விருது – ஊனமுற்ற நிலையிலும்
சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு அமைப்பின் நிறுவுனராக செயல்பட்ட
திறனாளியை கௌரவிக்கும் விருது.
2.
கவின்கேர் எபிலிட்டி மாஸ்டரி விருதுகள் – ஊனமுற்ற நிலையிலும்
தங்கள் துறையில் சிறப்பான சாதனைகளை நிகழ்த்தி முன்னிலை பெற்ற திறனாளிகளை கௌரவிக்கும்
விருதுகள்
விருது பெறும் சாதனையாளர்களுக்கு பரிசுத் தொகை, கோப்பை, அவர்களின் சாதனைகளைப்
பாராட்டி வாழ்த்து சான்றிதழ், வழங்கப்படுகிறது. இது
அவர்களின் விடாமுயற்சிக்கும் சமூகத்திற்கான பங்களிப்புக்கும் வழங்கப்படும் அங்கீகாரச்
சின்னமாகும். இந்த முயற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஏற்பாட்டாளர்கள், இந்த
விருதுகள் தனிப்பட்ட சாதனைகளை மட்டுமல்லாது, ஊனமுற்ற நபர்களைகுறித்த சமூகக்
கண்ணோட்டத்தையும் மாற்றி, அனைத்து நிலைகளிலும் உள்ளடக்கத்தையும் அதிகாரமளிப்பையும்
ஊக்குவிக்கின்றன என்றனர்.
ஊனமுற்ற நபர்களுக்கான உரிமைகள் சட்டம், 2016 இன் படி தான் தேர்ந்தெடுத்த துறையில்
சாதனை படைத்த இந்திய நாட்டை
சேர்ந்த எந்த ஒரு ஊனமுற்றவர்களு ம். , கௌரவமிக்க இவ்விருதிற்கு தன்னை பரிந்துரைக்கலாம்.
சுய விண்ணப்பமாகவோ, வேறு ஒருவர் தங்களுக்காகவோ விண்ணப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பங்களிலிருந்து தகுதியுள்ள நபர்களை, நேர்காணல்கள் மற்றும் நேர்முக
விஜயங்கள் வழியாக குறும்பட்டியலுக்கு தேர்வுசெய்யப்படுவார்கள். அதன்பிறகு, அக்குறும்பட்டியலிலிருந்து,
நிபுணத்துவமும், அனுபவமுமிக்க நடுவர்கள் குழுவால் விருது பெறும் ஊனமுற்ற சாதனையாளர்கள்
தேர்வுசெய்யப்படுகின்றனர்.
மேலும் தகவலை அறிய எங்கள் வலைதளங்களை காணவும்: www.abilityfoundation.org அல்லது www.cavinkare.com. அல்லது +91
98400 55848ஐ அழைக்கலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய
கடைசி நாள்: வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2025.
கவின்கேர் பிரைவேட் லிமிடெட் குறித்து: கவின்கேர் பிரைவேட் லிமிடெட்,
தனிநபர் பராமரிப்பு, தொழில்முறை பராமரிப்பு, பால்பொருட்கள், ஸ்நாக்ஸ், உணவுகள்,
பானங்கள், மற்றும் சலூன்கள் ஆகிய தொழிற்பிரிவுகளைக்கொண்டு, இயங்கி வரும் பன்முக
செயல்பாடுள்ள ஒரு எஃப்எம்சிஜி பெருநிறுவனமாகும். இதன் பிராண்டுகள் தொகுப்பில்
ஷாம்புகள் (சிக், மீரா, கார்த்திகா மற்றும் நைல்), ஹேர் வாஷ் பவுடர்கள் (மீரா
மற்றும் கார்த்திகா), தேங்காய் எண்ணெய் (மீரா), ஸ்கின் கிரீம்கள் (ஃபேர் எவர்,
ஸ்பின்ஸ்), டியோடரண்ட் மற்றும் டால்க் (ஸ்பின்ஸ்), ஊறுகாய்கள் மற்றும்
நொறுக்குத்தீனிகள் (ருச்சி, சின்னிஸ் & கார்டன்), ஹேர் கலர்ஸ் (இன்டிகா),
ரீடெய்ல் சலூன் தயாரிப்புகள் (ராகா புரொஃபஷனல்), பானங்கள் (மா), பால் பொருட்கள்
(கவின்ஸ்), மற்றும் பியூட்டி சலூன்கள் (கிரீன் டிரென்ட்ஸ் & லைம்லைட்) மற்றும்
விலங்குகளுக்கான மருத்துவமனை (சஞ்சு)ஆகியவை உள்ளடங்கும். இதன் பெரும்பாலான
பிராண்டுகள் அவைகளுக்குரிய தயாரிப்பு வகையினங்களில் முதலிடத்தை தக்கவைத்துக்
கொண்டிருக்கிற பிராண்டுகளாகும். நவீன சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப திறன்கொண்ட ஒரு
பிரத்யேக ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் மையமானது, இந்த பல்வேறு துறைகள்
முன்னேற்றம் காண்பதற்கு தொடர்ந்து பெரிதும் உதவி வருகிறது. மிகப்பெரிய அளவில்
சந்தையாக்கல் செய்வதற்கான யுக்திகளையும், அம்சங்களையும் மிகச்சரியாக
புரிந்துகொண்டிருக்கும் இந்நிறுவனம்,
தேசிய அளவிலான சந்தையில் மிக வலுவாக காலூன்றி இருக்கிறது. “பேரார்வமும்,
பெருமகிழ்ச்சியும் கொண்ட பணியாளர்கள் வழியாக புத்தாக்கத்தை ஊக்குவித்து மக்களால்
பெரிதும் விரும்பப்படும் பிராண்டுகளை உருவாக்குவதன் மூலம், தொழில்துறையின்
வளர்ச்சியை விட கணிசமான அளவு இன்னும் சிறப்பாக நாங்கள் வளர்ச்சி காண்போம்” என்ற
தனது கார்ப்பரேட் செயல்நோக்கம் மற்றும் திட்டத்தின் மீது வலுவான அடித்தளத்தை
அமைத்திருப்பதே கவின்கேரின் வெற்றிக்கு காரணமாகும்.
எபிலிட்டி ஃபவுண்டேஷன் குறித்து: 1995 – ம் ஆண்டு தொடங்கப்பட்ட எபிலிட்டி
ஃபவுண்டேஷன், தேசிய அளவில் ஊனமுற்றோர்கள் நலனுக்காக இயங்கி வரும் ஒரு அமைப்பாகும். சென்னையில்
தலைமையகத்தைக் கொண்டு செயலாற்றி வரும் இந்த அமைப்பு, ஊனமுற்றோர்களின் உரிமைகள்,
திறனதிகாரம் மற்றும் சமஅளவிலான உள்ளடக்கத்திற்காக தீவிரமாக உழைத்து வருகிறது. சமத்துவம்
நிலவும் ஒரு குடிமை சமூகம் என்ற குறிக்கோளை அடைய
பிரசுரித்தல், பணி வாய்ப்பு வழங்கல், ஊடகம், கலாச்சாரம், கொள்கை அமலாக்கம், சட்டம்
இயற்றல் மற்றும் மனித உரிமைகள் என பல துறைகளில் எபிலிட்டி ஃபவுண்டேஷன் ஈடுபட்டு
வருகிறது. அனைத்து தரப்பினரையும் சமஅளவில் உள்ளடக்கிய சிறந்த சமுதாயம் என்ற இலக்கை
நோக்கிய எபிலிட்டி ஃபவுண்டேஷனின் பணியில் ஆண்டு 2024, இருபத்து ஒன்பதாவது
ஆண்டாகும். ஊனமுற்ற
நபர்கள் பற்றி மக்கள் மத்தியல் நிலவி வரும் தவறான எண்ணங்களை நீக்கவும், பொதுவான
கண்ணோட்டங்களை மாற்றவும் வேண்டுமென்ற குறிக்கோளோடு, பல நிகழ்வுகளையும் மற்றும்
எண்ணற்ற செயல்திட்டங்களையும் எபிலிட்டி ஃபவுண்டேஷன் ஏற்பாடு செய்து
நடத்தியிருக்கிறது. ஊனமுற்றோர்கள் மற்றும் ஊனமற்ற நபர்களுக்கிடையே நிலவும்
இடைவெளியை நிரப்புவதும் இதன் செயல்திட்டங்களின் நோக்கமாகும்.