பங்குச்சந்தை திட்டங்களில் 13 சதவீத வருவாய் ஈட்டும் தேசிய ஓய்வூதிய அமைப்பு
இந்திய தேசிய ஓய்வூதிய அமைப்பு (என்.பி.எஸ்.) தினத்தை யொட்டி நடந்த மாநாட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, 'என்.பி.எஸ்.ன் கிழ் உள்ள திட்டங்கள் மூலம் கவர்ச்சிகரமான வருவாய் கிடைத்து வருகிறது. குறிப்பாக பங்குச்சந்தை திட்டங்கள் மூலம் சராசரியாக 13 சதவீ தத்துக்கு மேல் ஆண்டு வருவாய் கிடைக்கிறது.
அத்துடன் பெரு நிறுவனக் கடன் மற்றும் அரசுப் பத்திரத் திட்டங்கள் மூலம் சராசரியாக 9 சதவீத வருவாய் கிடைக்கிறது' என்றார்.