வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு, RBI யின் நற்செய்தி.
இனிமேல், உங்களது ஒப்புதல் இல்லாமல், வீட்டுக்கடன் காலத்தையோ, EMI யோ வங்கிகள் மாற்ற முடியாது. நீங்களும் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்த முடியாது.
வீட்டுக்கடன் வட்டி ஏறினால், அவர்களாகவே EMI செலுத்தும் காலத்தை ஏற்றிவிட்டு உங்களை அதற்கு உடன் படச் சொல்ல முடியாது. உங்களது முடிவிற்கு (EMI காலம் அதிகரிப்பு / EMI அதிகரிப்பு / வட்டி விகித மாற்றம் என்பன போன்ற சில) அவர்கள் இனி கட்டுப்பட வேண்டும்.