கான்டென்ட் இந்தியா
2026 உச்சி மாநாடுக்கான முன்பதிவுகள் ஆரம்பம்
US$6 பில்லியன் டாலர்
வாய்ப்பைப் பயன்படுத்த புதிய கூட்டாண்மைகளை
உருவாக்குவது இதன் நோக்கமாகும்
சென்னை, ஆகஸ்ட் 12, 2025: ஏப்ரல் 2025-ல்
நடைபெற்ற கான்டென்ட் இந்தியா உச்சிமாநாட்டின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, அதன் முதல் மூன்று
நாள் பதிப்பிற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளன. இம்மாநாடு, 2026, மார்ச் 16–18,
தேதிகளில் மும்பையில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.
கான்டென்ட் இந்தியா 2026, இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையை சர்வதேச கூட்டாளர்களுடன் இணைத்து, பயன்படுத்தப்படாத பில்லியன் அளவிலான மதிப்பை வெளிக்கொணர்வதே இதன் நோக்கமாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிடைத்த உத்வேகத்தின் அடிப்படையில், கான்டென்ட் இந்தியா 2026, உள்ளடக்கத் துறையில் (கான்டென்ட் ஸ்பேஸ்) எல்லை தாண்டிய கூட்டாண்மைகளுக்கான ஒரு ஆற்றல்மிக்க தளமாக அமையும். இந்த மூன்று நாள் நிகழ்வில் குழு விவாதங்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச உள்ளடக்கங்களுக்கான சந்தை அமைவிடம், சிறப்புத் திரையிடல்கள், நெட்வொர்க்கிங் அமர்வுகள் மற்றும் பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
இது, 'இந்திய
பொழுதுபோக்கு வணிகத்தின் எதிர்காலம்' (The Future of the Indian Entertainment
Business) என்ற அறிக்கையின் கருத்துகளுடன் இணக்கமானதாக இந்த
நிகழ்வு இருக்கிறது. ஒத்துழைப்புக்கான இந்த புதிய யுகத்தில் உள்ளடக்க விற்பனை,
கையகப்படுத்தல், இணைத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் பெரும் வளர்ச்சி
வாய்ப்புகள் உள்ளதை அந்த அறிக்கை தெளிவாக முன்னிலைப்படுத்துகிறது.
இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே சமீபத்தில் கையெழுத்தான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம், 2040-ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை ஆண்டுக்கு கூடுதலாக £25.5 பில்லியன் பவுண்டுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த அறிவிப்பு ஒரு முக்கியமான தருணத்தில் வெளியாகியுள்ளது.
இது, முக்கியமான சர்வதேச ஒத்துழைப்பு
மூலம் இந்தியாவை உலகளவில் உள்ளடக்க செயல்பாடுகளுக்கான முதன்மை மையமாக வலுப்படுத்த
இது வழிவகுக்கும். கான்டென்ட் இந்தியா
2026 உச்சி மாநாட்டின் பரந்த லட்சியம் இதற்கு
மேலும் வலு சேர்க்கும்.
கான்டென்ட் இந்தியா 2026, இந்தியாவின் பொழுதுபோக்கு (எண்டர்டெய்ன்மென்ட்) பொருளாதாரத்தை மேம்படுத்தி மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட பன்னிரண்டு முக்கிய இலக்குகளை மையமாகக் கொண்டுள்ளது. உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கலப்பின உள்ளடக்கத்தை உருவாக்குதல், சர்வதேச தயாரிப்புகளை ஈர்ப்பது, மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தயாரிப்பிற்கு பிந்தைய பணிகளில் இந்தியாவின் திறன்களை வெளிப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
இந்நிகழ்வு, படைப்பாளி பொருளாதாரத்தை பாரம்பரிய
ஊடகங்களுடன் இணைக்கும் மற்றும் வென்ச்சர் கேப்பிட்டல் போன்ற நிதியளிப்பிற்கான
புதிய மாடல்களை ஆராயும். மேலும்,
நம்பகமான கூட்டாளர் நெட்வொர்க் மூலம் இணைத் தயாரிப்புகளை செயல்படுத்துவதும்,
வடிவமைப்பு (ஃபார்மேட்) ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை ஊக்குவிப்பதும், பிராண்டு கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதும் மற்றும்
உலகளவிலான உள்ளடக்கப் போக்குகளை முன்னிலைப்படுத்துவதும் இந்த உச்சி மாநாட்டு
நிகழ்வின் நோக்கமாக இருக்கிறது.
சர்வதேச ஒத்துழைப்பு மற்றும்
ஒருங்கிணைந்த படைப்பு செயல்பாட்டின் ஆற்றல் மீது ஒரு முக்கியப் பரிசீலனையையும்,
கவனத்தையும் கொண்டிருப்பதன் மூலம், கான்டென்ட் இந்தியா 2026, இந்தியாவின்
உள்ளடக்கப் பொருளாதாரத்தில் அடுத்தகட்ட வளர்ச்சி மற்றும் புத்தாக்க அலையின் ஒரு
பகுதியாக இருக்க விரும்பும் பங்குதாரர்களுக்கு ஒரு முக்கிய தொழில்துறை நிகழ்வாக
இருக்கும்.
இந்த உச்சி மாநாட்டின் தேதிகளை அறிவித்து, C21-ன் தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. டேவிட் ஜென்கின்சன் கூறியதாவது: "ஏப்ரல் 2025-ல் நடைபெற்ற கான்டென்ட் இந்தியா உச்சிமாநாடு, இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு புதிய கூட்டாண்மைகளை ஒரு புதுமையான முறையில் உருவாக்க நிஜத்தில் வாய்ப்பு உள்ளது என்ற உண்மையை உறுதிப்படுத்தியது.
கான்டென்ட் இந்தியா
2026, அனைவருக்கும் பயனளிக்கும் வெற்றிகரமான உள்ளடக்கக் கூட்டாண்மைகளை எவ்வாறு
உருவாக்குவது என்பதில் கவனம் செலுத்தும்; மேலும் உள்நாட்டில் வெற்றி பெறுவதுடன்,
உலக அரங்கிலும் வெற்றிபெறக்கூடிய புதிய உள்ளடக்க வடிவங்களுக்கு இம்மாநாடு
வழிவகுக்கும். வெற்றி காண்பதற்கும், இத்துறையில் சாதனைகள் படைப்பதற்கும் சரியான
நேரம் இதுவே.”
டிஷ் டிவி இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. மனோஜ் தோபால் மேலும் கூறியதாவது: " உள்ளடக்கம் என்பது பொழுதுபோக்கு / கேளிக்கை என்பதற்கும் அப்பாற்பட்டது. அது செல்வாக்கு, அடையாளம் மற்றும் பொருளாதார வலிமையைப் பிரதிபலிக்கும் அம்சமாகும் என்பதால், இந்தியா ஒரு முக்கியமான கட்டத்தில் தற்போது நுழைந்திருக்கிறது. கான்டென்ட் இந்தியா உச்சிமாநாடு 2025, தொழில்துறையின் வளர்ந்து வரும் விருப்பங்கள் குறித்த ஆழமான பார்வையை வழங்கியதுடன், உலகளாவிய உள்ளடக்கப் புத்தாக்கத்தின் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு இந்தியா தலைமை தாங்கத் தயாராக இருக்கிறது என்ற உண்மையை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
கான்டென்ட் இந்தியா 2026 மூலம், தைரியமான கதைசொல்லலை ஆதரிக்கும், வளர்ந்து வரும் திறமையாளர்களை உண்மையான வாய்ப்புகளுடன் இணைக்கும், மற்றும் இலட்சியத்தை தாக்கமாக மாற்றும் ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தளத்தை உருவாக்குவது எமது இலக்காகும். அனுபவமிக்க தொழில் வல்லுநர்கள் மற்றும் அடுத்த தலைமுறை படைப்பாளிகள் ஆகிய இருதரப்பினருக்கும் திறனதிகாரம் அளிப்பதும் எமது குறிக்கோளாகும். அனைவரையும் உள்ளடக்கிய, உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த ஒரு சூழல் அமைப்பை வளர்ப்பது எங்கள் குறிக்கோளாகும்.
இதற்கான
வாய்ப்புகளும், சாத்தியமும் மகத்தானவை; மேலும்
அர்த்தமுள்ள ஒத்துழைப்பின் மூலம் இந்த தளம் வெற்றிக்கான சாத்தியத்தை வெளிக்கொணர
உதவும். இந்தியாவின் பொழுதுபோக்கு, கேளிக்கை தளத்தின் எதிர்காலம் குறித்த
இந்தக் கண்ணோட்டத்தைப் பகிர்ந்துகொள்ளும் அனைவரையும் எங்களுடன் இணைய நாங்கள் வரவேற்கிறோம்.”
இம்மாநாட்டில் ஒரு பிரதிநிதியாக பங்கேற்க
பதிவுசெய்யவும் 33% EARLYBIRD
சலுகையைப் பெறவும் இங்கே கிளிக் (CLICK HERE) செய்யவும். பல்வேறு வகையான கண்காட்சி (exhibition), திரையிடல்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் பேக்கேஜ்களும்
கிடைக்கின்றன. மேலும் தகவலுக்கு, இங்கே கிளிக் (click here) செய்யவும்.
மேலும் தகவலுக்கு, salesteam@contentindia.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு
கொள்ளவும்.