மக்களவையில்
திருத்தப்பட்ட வருமானவரி மசோதா நிறைவேறியது
வருமானவரி மசோதாவில் என்ன இருக்கிறது?
புதுடெல்லி, ஆக.12-மக்களவையில், திருத்தப் பட்ட வருமான வரி மசோதா, வரிவிதிப்பு சட் டங்கள் திருத்த மசோதா ஆகியவை நிறைவேற்றப் பட்டன.
தாக்கல்
தற்போது நடைமுறையில் உள்ள வருமானவரி சட்டம், 1961-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
வரி செலுத்துவோருக்கு எளிதாக புரியும் வகையில், வார்த்தைகளை எளிமைப்ப டுத்தி, தேவையற்ற வார்த்தை களை நீக்கி, புதிய வருமான வரி மசோதா, 2025 கொண் டுவரப்பட்டது. அந்த மசோ தாவை கடந்த பிப்ரவரி 13-ந் தேதி நாடாளுமன்ற மக்கள் வையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
வாபஸ்
மசோதாவை ஆய்வு செய்வ தற்காக பா.ஜனதா எம்.பி. பைஜெயந்த் பாண்டா தலை மையில் 31 எம்.பி.க்களை கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, மசோதாவில் ஏராளமான திருத்தங்களை செய்யுமாறு பரிந்துரைத்தது. ,2025 பிப்ரவரி 13-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை வாபஸ் பெறுமாறும் பரிந்துரைத்தது.
இதற்கிடையே, சமீபத்தில் மத்திய மந்திரிசபை கூட்டத்தில், புதிய வருமான வரி மசோதாவை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நடப்பு நாடாளு மன்ற மழைக்கால கூட்டத்தில் கடந்த வாரம் அந்த மசோதா வாபஸ் பெறப்பட்டது.
திருத்தப்பட்ட மசோதா
அதற்கு பதிலாக, தேர்வுக் குழு பரிந்துரைத்த திருத்தங்கள் சேர்க்கப்பட்ட புதிய வருமானவரி மசோதா (எண் 2) உருவாக்கப்பட் டது.
திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவை (எண் 2) மத்திய நிதி மந்திரி நிர்மலா திருத்தப்பட்ட வருமானவரி மசோதாவில், வார்த்தைகள், சொற்றொடர்கள் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்திய நேரடி வரி சட்டத்தில் முக்கியமான சீர்திருத்
தத்தை இம்மசோதா குறிக்கிறது.
குழப்பத்தை தவிர்க்கும் நோக்கம் கொண்டதாக மசோதா அமைந்துள்ளது.
1961-ம் ஆண்டின் வருமானவரி சட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கைதான் திருத்தப்பட்ட வருமானவரி மசோதா. வரவிருக்கும் ஆண்டுகளுக்கு இந்தியாவின் வருமானவரி முறையை மறு வடிவமைப்பு செய்துள்ளது.
சீதாராமன் நேற்று 2025 ஆகஸ்ட் 11ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார். வருமான வரி தொடர்பான சட்ட திருத்தியும் மசோதா உருவாக்க அவர் கூறினார்.
மசோதாவின் நோக்கம் குறித்த அறிக்கையில், தேர்வுக் குழு பரிந்துரைத்த ஏறத்தாழ அனைத்து திருத்தங்களும் புதிய மசோதாவில் சேர்க்கப் பட்டுள்ளன. அந்த மாற்றங்கள் தொடர்பான அனைத்து தரப்பினரின் யோசனைகளும் சேர்க்கப்பட்டுள்ளன" என்று கூறப்பட்டுள்ளது.
நிறைவேறியது
பின்னர், விவாதம் எதுவும் இன்றி திருத்தப்பட்ட வரு மானவரி மசோதா (எண் 2) குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், வருமானவரி சட் டம்-1961, நிதி சட்டம்-2025 ஆகியவற்றில் திருத்தம் செய்வ ட தற்கான வரிவிதிப்பு சட்டங்கள் திருத்த மசோதாவையும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட சந்தாதாரர்களுக்கு வரி விலக்கு அளிக்க அம்மசோதா வகை செய்கிறது. அந்த மசோதாவும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.