90 மதிப்பெண் எடுப்பவர் இன்னும் அதிகபட்சம் 10 மதிப்பெண் மட்டுமே எடுக்க முடியும் 100 தொட.
ஆனால் 40 மதிப்பெண் எடுப்பவர் முயன்றால் இன்னும் 60 மதிப்பெண் எடுக்கலாம்! 100 தொட!
அதனால்தான் Small Cap நிறுவனப் பங்குகளைப் பலர் வாங்குகிறார்கள்! காரணம் அதிக ஏற்றம் அடைய வாய்ப்பு உண்டு என்பதால்!
அதே நேரம் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்தால் Small Cap நிறுவனங்கள் அப்படியே சரிந்துவிடவும் வாய்ப்பு உண்டு. மீண்டும் 40 மதிப்பெண் நோக்கி வந்துவிடும். அதற்குக் கீழும் போக வாய்ப்பு உண்டு.
அதே பெரிய நிறுவனங்கள் 90 மதிப்பெண் வரும் இன்னும் கீழே விழுந்தால் 75 வரை வாய்ப்பு உண்டு.
அதனால்தான் புதியவர்கள் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்க வாய்ப்பு உள்ள சிறிய நிறுவனத்தில் முதலீடு செய்வதைத் தவிருங்கள் என்று சொல்கிறார்கள்.
*இவை குறித்து முதலீடு ஆலோசகர் ராமலிங்கம் உடன் ஓர் நேர்காணல்*