Journey of 10 gms of Gold
1950 முதல் 2013 வரை தங்கம் கொடுத்த வருமானம் 9.18%
இந்தியாவின் நீண்டகால பணவீக்க விகிதம் 5 முதல் 6 சதவீதமாக இருக்கும் நிலையில் தங்கம் 9% அளவிற்கு வருமானம் கொடுத்திருப்பது மிக சிறந்த வருமானம் என்று தான் சொல்ல முடியும்.
தங்க நகையாக வாங்கி இருந்தால் இந்த வருமானம் உங்களுக்கு கிடைத்திருக்காது.
காரணம் செய்கூலி சேதாரம் இந்த வகையில் சுமார் 10, பன்னிரண்டு சதவீதம் போயிருக்கும்.
மேலும் ஜிஎஸ்டி வரி பழைய நகை என்கிற காரணத்தாலும் சுமார் ஐந்து சதவீதம் காணாமல் போயிருக்கும். அந்த வகையில் முதலீட்டு நோக்கில் பார்த்தால் தங்க நகை, தங்க நாணயம், தங்க கட்டி போன்றவை இழப்புதான்.
எனவே காகிதத் தங்கம் டிஜிட்டல் தங்கம் என்று சொல்லப்படுகிற கோல்டு ETF, கோல்ட் சேவிங்ஸ் பண்டு. மத்திய அரசின் கோல்ட் பாண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யும்போது இந்த இழப்புகள் இருக்காது.
தங்கத்தின் விலை ஏற்றம் முழுமையாக கிடைக்கும். கோல்ட் பாட்டில் முதலீடு செய்திருந்தால் ஆண்டுக்கு 2.5% வட்டி வருமானமும் கிடைத்திருக்கும்.