மொத்தப் பக்கக்காட்சிகள்

சாம்கோ வித்தியாசமான வருமான வரி மியூச்சுவல் ஃபண்ட்: யாருக்கு ஏற்றது? ELSS


 

சாம்கோ  வித்தியாசமான வருமான வரி மியூச்சுவல் ஃபண்ட்: யாருக்கு ஏற்றது? ELSS

 

சாம்கோ மியூச்சுவல் ஃபண்டு அறிமுகம் செய்யும் ஒரு வித்தியாசமான இ.எல்.எஸ்.எஸ் (ELSS) டேக்ஸ் சேவர் ஃபண்டு: நடுத்தர மற்றும் சிறிய மூலதனமுள்ள நிறுவனங்களில் இந்த ஃபண்டு பிரதானமாக முதலீடு செய்யும் 

·        'சாம்கோ இ.எல்.எஸ்.எஸ் டேக்ஸ் சேவர் ஃபண்டு' அதிக வளர்ச்சி சாத்தியத்திறனைக் கொண்டு நீண்ட கால இடர்களை சமாளித்து, அதிக ஆதாயத்தை தரக்கூடிய உயர் தரமான நடுத்தர மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்களில் பிரதானமாக முதலீடு செய்யும்.  

·        இந்த ஃபண்டு ஒரு தனித்துவமான வேறுபடுத்தல் அம்சத்தைக் கொண்டிருக்கிறது.  எ.கா. ஆதிக்கம் செலுத்தும் சந்தைப் பங்கு, உயர் விலை நிர்ணயம் செய்யும் ஆற்றல், சிறந்த கார்ப்பரேட் ஆளுகை தரநிலைகள் மற்றும் உறுதியான பேலன்ஸ் ஷீட்களை வெளிப்படுத்தும் உயர்தர வளர்ச்சியை இலக்காக கொண்டு பயணிக்கின்ற நடுத்தர மற்றும் சிறிய அளவிலான பிசினஸ் நிறுவனங்களில் இந்த ஃபண்டு அதிக முதலீடுகளைச் செய்யும்.   

·        இந்த புதிய ஃபண்ட் வெளியீடு (NFO) 2022 நவம்பர் 15 அன்று தொடங்கி, 2022 டிசம்பர் 16 அன்று முடிவுக்கு வரும்.

 

சென்னை: நவம்பர் 4, 2022:  சாம்கோ இ.எல்.எஸ்.எஸ் டேக்ஸ் சேவர் ஃபண்டு என்பது, சொத்து உருவாக்கத்திற்கான ஒரு கிளாசிக் வழிமுறையான ஒரு இ.எல்.எஸ்.எஸ் -ல் மூன்று ஆண்டுகளுக்கு கட்டாயமான லாக்கிங் காலஅளவுடன் திறன்மிக்க நடுத்தர மூலதனம் மற்றும் சிறிய மூலதனம் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டமாகும். 

 


எதிர்காலத்தில் சொத்து உருவாக்குனர்களாக உருவாவதற்கு மிக அதிக சாத்தியத்திறனைக் கொண்டிருக்கின்ற, அடிப்படையில் வலுவான பிசினஸ் நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு உதவ, தொழில்நுட்பத்தால் முன்னெடுக்கப்படும் ஒரு பிரத்யேக செயல்உத்தியான ஹெக்ஸாஷீல்டு ஃபிரேம்ஒர்க் என்பதனை சாம்கோ இ.எல்.எஸ்.எஸ் டேக்ஸ் சேவர் ஃபண்டு பயன்படுத்துகிறது.  அதிக தரம் வாய்ந்த, திறன்மிக்க, முதலீடு செய்யத்தக்க பங்குகளை பல நிறுவனப் பங்குகளிலிருந்து பிரித்தெடுக்க இது உதவுகிறது.  முதலீடு செய்யத்தக்க இந்த உலகிலிருந்து நிறுவனங்களை, இந்த ஃபண்டு மேலாண்மைக் குழு பகுப்பாய்வு செய்து, செய்யப்படும் முதலீட்டின் மீது அதிக ஆதாயம் தரக்கூடிய வளர்ச்சியை இலக்காக கொண்டு பயணிக்கின்ற பிசினஸ் நிறுவனங்களின் தொகுப்பை கட்டமைக்கும். 

 

மூன்று ஆண்டுகள் சராசரி ரோலிங் ரிட்டன்ஸ் அடிப்படையில் நிஃப்டி மிட்ஸ்மால்கேப் 400 இன்டெக்ஸ், 2005-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து நிஃப்டி 500 இன்டெக்ஸ் உடன் 8% அதிக ரிட்டன்ஸை / ஆதாயத்தை தந்திருக்கிறது.  (பொறுப்புத்துறப்பு: கடந்தகால செயல்பாடு எதிர்காலத்திலும் நீடிக்கலாம் அல்லது நீடிக்காமலும் போகலாம்.  ஒரு அட்டவணையின் ஆதாயங்கள் இவை என்பதையும் மற்றும் எந்தவொரு குறிப்பிட்ட சேர்ந்தவை அல்ல என்பதையும் தயவுசெய்து கவனத்தில் கொள்க) நடுத்தர மூலதன மற்றும் சிறு மூலதன நிறுவனப் பங்குகளை கொண்டிருப்பதில் உள்ள ஏற்றஇறக்க நிலையும், ஒரு ஆண்டு வைத்திருக்கும் காலஅளவுடன் ஒப்பிடுகையில், மூன்று ஆண்டுகள் என்ற நீண்ட காலஅளவின்போது கணிசமாக சரிசெய்யப்பட்டுவிடும்.  ஆகவே, குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு கட்டாயமாக பங்கு முதலீட்டைக் கொண்டிருப்பதன் வழியாக நடுத்தர மற்றும் சிறிய மூலதன பிசினஸ் நிறுவனங்களில் முதலீடு செய்யும் இத்தகைய ஃபண்டில் முதலீடு செய்வதன் வழியாக இடரை சரிகட்டி, அதிகஅளவு ஆதாயத்தை ஒரு முதலீட்டாளரால் உருவாக்க முடியும். 

 

நடுத்தர மற்றும் சிறிய மூலதன நிறுவனங்கள் மோசமான தரத்திலான பிசினஸ்கள் என்ற தவறான கருத்து அவைகளின் அளவின் காரணமாக தொழில்துறையில் நிலவுகிறது.  யதார்த்தத்தில் இந்த கருத்துக்கு மாறான, இந்த பிசினஸ் நிறுவனங்களுள் சில அவைகள் இயங்கும் அந்தந்த வகையினங்களில் தலைமைத்துவம் வகிக்கின்றன ; சிறிய அளவில் அவைகள் இருந்தபோதிலும் கூட, வலுவான வருவாய் வளர்ச்சியையும், லாபத்தையும் மற்றும் உயர் விலை நிர்ணயம் செய்யும் சக்தியையும் கொண்டிருக்கின்றன.  ஒரு நடுத்தர மூலதன பங்கு அதன் வாழ்நாள் காலத்தில் இரு விளைவுகளை எதிர்கொள்ளக்கூடும் – அதாவது, ஒரு மிட்-கேப், ஸ்மால்-கேப்பாக மாறக்கூடும்.  எ.கா. சொத்தை குறைத்து அளிப்பதாக அல்லது ஒரு மிட்-கேப் பங்கு லார்ஜ் கேப் பங்காக அதாவது, சொத்து உருவாக்குனராக மாறக்கூடும். ஆகவே,  இந்த பிசினஸ்களின் போக்குகளை புரிந்துகொள்வது அத்தியாவசியமானது.  

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...