மொத்தப் பக்கக்காட்சிகள்

நடுத்தர மற்றும் சிறிய மூலதன பங்குகளில் பிரதானமாக முதலீடு செய்யும் சாம்கோ இ.எல்.எஸ்.எஸ் ELSS டேக்ஸ் சேவர் ஃபண்ட்..!

நடுத்தர மற்றும் சிறிய மூலதன பங்குகளில் பிரதானமாக முதலீடு செய்யும் சாம்கோ இ.எல்.எஸ்.எஸ் ELSS  டேக்ஸ் சேவர் ஃபண்ட்..!

இந்தியாவில் பெரும்பாலான ELSS ஃபண்டுகள், பெரிய மூலதன நிறுவனப் பங்குகளில் பெரும்பான்மையாக முதலீடு செய்கின்றன மற்றும் அந்நிறுவனங்களது முதன்மையான தொகுப்பில் வழக்கமாகவே வெகுசில நிறுவனப் பங்குகளே அமைந்திருக்கின்றன.  இதன் காரணமாக, ஒரு ஃபண்டிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திப் பார்ப்பது ஒரு முதலீட்டாளருக்கு மிகச்சிரமமானதாக இருக்கக்கூடும்.

 

அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள பங்குகளைக் கொண்ட நடுத்தர மற்றும் சிறு மூலதன பங்குகளில் அதிக முதலீடு செய்வதன் காரணமாக, சாம்கோ டேக்ஸ் சேவர் ஃபண்டு தனித்துவமானது; அதிக ஆதாயப்பலனை வழங்கும் சாத்தியத்திறனைக் கொண்டிருப்பதோடு, மூன்று ஆண்டுகள் என்ற கட்டாய லாக் இன் காலஅளவின் காரணமாக அதிகமான ஏற்ற, இறக்க பிரச்சனையும் சரிசெய்யப்பட்டு விடும். 

 


சாம்கோ மியூச்சுவல் ஃபண்டு, அதன் ELSS டேக்ஸ் சேவர் ஃபண்டின் அன்றாட பங்கு அளவை அதன் வலைதளத்தில் ஒவ்வொரு நாளும் வெளியிடும்.

சாம்கோ அசெட் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் -ன் தலைமை முதலீட்டு அதிகாரி திரு. உமேஷ்குமார் மேத்தா இதுபற்றி கூறியதாவது: "இன்று நீங்கள் முதலீடு செய்யும் லார்ஜ்-கேப் பங்குகள், கடந்தகாலத்தில் ஒரு நேரத்தில் மிட்-கேப்ஸ்களாக இருந்தவை.  நடுத்தர அளவிலிருந்து பெரிய மூலதன பங்காக மாறும் உருமாற்றமானது, ஒரு முதலீட்டாளருக்கு மிகப்பெரிய அளவில் சொத்தை உருவாக்கியிருக்கும்.  சாம்கோ ELSS டேக்ஸ் சேவர் ஃபண்டின் மூலம் பிரிவு 80C -ன் கீழ் வருமான வரி சேமிப்பின் பலனை ஒரு முதலீட்டாளர் பெறுமாறு நாங்கள் ஏதுவாக்குகிறோம்; அதே நேரத்தில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் காலஅளவிற்கு திறம்பட வளர்ந்து வரும் நடுத்தர மற்றும் சிறிய மூலதன நிறுவனங்களில் முதலீட்டை செய்கிறோம்.  அந்தந்த துறைகளில் தலைமைவகிக்கும் நடுத்தர மற்றும் சிறிய மூலதன நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடுகளின் வழியாக இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றின் ஒரு அங்கமாக, ஒரு முதலீட்டாளர் உருவெடுக்க ஏதுவாக்குவதே இத்திட்டத்தின் பின்புல நோக்கமாகும்.  ஏனெனில், இந்த நடுத்தர – சிறிய நிறுவனங்கள், நமது நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்கும் திறனுள்ளவையாக மாறக்கூடும்."

"வரலாற்று ரீதியாக, 3 ஆண்டுகள் சராசரி ரோலிங் ரிட்டன் அடிப்படையில் நிஃப்டி 500 TRI உடன் ஒப்பிடுகையில், நிஃப்டி மிட்ஸ்மால்கேப் 400 TRI ~8% என்ற ஆதாயலப்பலனை உருவாக்கியிருக்கிறது.  3 ஆண்டுகள் லாக்-இன் என்ற அம்சத்துடன் நடுத்தர மற்றும் சிறிய மூலதன நிறுவனங்களில் செய்யப்படும் பங்கு முதலீடு, இடரை சரிகட்டி, அதிக ஆதாயத்தை உருவாக்குகின்ற ஒரு வலுவான கலவை செயல்பாடாக இருக்கும்," என்று திரு. உமேஷ் மேலும் விளக்கமளித்தார்.

சாம்கோ குழுமத்தின் தென் மண்டல தலைவர் திரு. எஸ். அனந்தராமன் கூறியதாவது: "சில்லரை முதலீட்டாளர்கள் திறனதிகாரம் பெறுவதற்கு சாம்கோ மியூச்சுவல் ஃபண்டு, தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.  அவர்களது முதலீட்டுப் பயணத்தில் விவேகமான முடிவுகளை செய்ய வகை செய்யும் வகையில் சிறப்பான தீர்வுகளை வழங்கி வருகிறது.  நன்கு செயல்படக்கூடிய புத்தாக்கமான திட்டங்களை உருவாக்கி வழங்குவது என்ற சாம்கோவின் குறிக்கோளுக்கு இணக்கமான ELSS ஃபண்டு, அதிக சாத்தியத்திறன் திறன் கொண்ட நடுத்தர மற்றும் சிறிய மூலதன நிறுவனங்களில் பிரதானமாக முதலீட்டை மேற்கொள்ளும்."

https://www.samcomf.com/dir-investor/setsf-gs-ad?gclid=Cj0KCQjwk5ibBhDqARIsACzmgLTyQny4cSR7Y9sFC69fsEi8VCEcrn26y-FQQIq6SyaIgKzXj1rBMloaApHzEALw_wcB


பொறுப்புத்துறப்பு:  MUTUAL FUND INVESTMENTS ARE SUBJECT TO MARKET RISKS, READ ALL SCHEME RELATED DOCUMENTS CAREFULLY.

பொறுப்புத்துறப்பு: கடந்தகால செயல்பாடு எதிர்காலத்திலும் தொடர்ந்து நீடிக்கலாம் அல்லது நீடிக்காமல் போகலாம் 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...