மொத்தப் பக்கக்காட்சிகள்

உலக காபி தினம் – அக்டோபர் Coffee Day

உலக காபி தினம் – அக்டோபர்  1
==============================

சூடாக இருப்பதே சுவை
*********************************

  எண்ணினால் 83 ஆண்டுகள் முடிந்தன என்று நினைக்கிறேன். 

ஒரு நாளைக்கு நான்கு காபி என்பது என் வாழ்வோடு கலந்து விட்டது.

கணக்குப் போட்டால் ஒரு இலட்சத்தை மிஞ்சும். 

ஆனால் இதுவரை ஒரு காபி என்று சொல்ல முடிகிறதே தவிர ஒரே காபி என்கிற தரத்தைக் காண முடியவில்லை. 

நான் அயல் நாடுகள் சென்றபோது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,அமெரிக்க நாடுகளில் உலகக் காபி உறிஞ்சகம் என்ற காபி மாடங்களில் நூற்றுக்கு மேற்பட்ட பலவித நறுமணம் கமழும் காபியைச் சுவைக்க முடிந்தது.

  எவரும் அதிகம் சென்றிராத எத்தியோப்பியா நாட்டில் விளைந்த பயிர்தான் காபிப் பெயர். 

இதை 9ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்டது என்பார்கள். 

 குளம்பு வடிவத்தில் இருந்த விதைகளின் சாறாக இருப்பதால் காபியைக் குளம்பி என்றே தமிழ்வாணர்கள் கூறினர்.

  உலகில் ஏறத்தாழ நாற்பது நாடுகளில் அமெரிக்கா தொடங்கித் தென்கிழக்காசிய நாடுகள் சேர்த்து ஆண்டில் ஒரு நாளான  அக்டோபார் 1ஆம் தேதி பன்னாட்டு காபி தினமாக கொண்டாடப்படுகிறது.

  2015 ஆம் ஆண்டிலிருந்து இந்நாளை தேசியக் காபித்திருநாள் என்றே பன்னாட்டு காபி நிறுவனம் கொண்டாடி வருகின்றது. 

 உலகத்தில் உள்ள நாற்பது விழுக்காடு காபியை அருந்தும் நாடாக பிரேசில் நாடு திகழ்கிறது.  

  இந்திய நாட்டில் கருநாடக மாநிலத்தில், சிக்மங்களூரு தான் "காபி நாடு" என்று அழைக்கப்படுகிறது. 

இன்னும் கூடக் காஷ்மீரத்தில் இருந்து தென்குமரி வரையில் பார்த்தால் வடமாநிலங்களில் தேநீர் தான் பெரிய செல்வாக்கு பெற்றது.

 ஆனால் அவர்கள் சென்னைக்கு வரும்போது விரும்பிக் கேட்பது வெந்நீரில் காபித்தூளைக் கலக்கிய பிறகு வடிந்து சொட்டும் காபியைப் பில்டர் காபி, டிகாசன் காபி என்று குறிப்பிட்டுக்  கண்டுபிடித்துத் தேடிப்பிடித்து அருந்துவார்கள்.

  ஒருமுறை இந்திரா காந்தி அம்மையார் சென்னை வந்து இறங்கியதும்  எனக்கு டிகாசன் காபி வேண்டும் என்று கேட்டதோடு, மாம்பலம் காபி என்று மற்றவர்கள் குறிப்பிடத் தலை அசைத்தார்கள்.

  தாங்க முடியாத கொதிப்போடு துணியால் சுற்றி இருகையால் மூதறிஞர் இராஜாஜி பருகுவார் என்பதைப் பலர் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

இப்போது நேர் மாறாகப் பனிக் காபியே வந்துவிட்டது.  

  இலயோலா கல்லூரியில் பணியாற்றிய பெரும் பேராசிரியரின் பெயர் பாலராவாயன். 

 இந்த திருப்பெயர் திருஞானசம்பந்தரைக் குறிக்கும். 

 அவர், காபி அருந்தும் பழக்கத்தைப் பார்த்து, மாணவ நண்பர்கள் காபியராவாயன் என்று மகிழ்ச்சியோடு குறிப்பிடுவார்கள்.

----- முனைவர் ஔவை நடராசன்
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...