மொத்தப் பக்கக்காட்சிகள்

ரெலிகேர் புரோக்கிங் – ன் ‘ப்ரீ அப்ளை எல்ஐசி ஐபிஓ’ செயலி அறிமுகம்!

 ரெலிகேர் புரோக்கிங் – ன் ‘ப்ரீ அப்ளை எல்ஐசி ஐபிஓ’ செயலி அறிமுகம்!

பொது பங்கு வெளியீடு நிகழ்வுகளுக்காக டிமேட் கணக்கைத் தொடங்கவும், பதிவு செய்யவும் இது உதவும் 

ரெலிகேர் – ப்ரீ அப்ளை ஐபிஓ செயலி: முதலீட்டிற்கான ஒற்றை நிறுத்த செயலி! 

சென்னை, 24.03.22: ஒரு டிமேட் கணக்கைத் தொடங்கவும், எல்ஐசி ஐபிஓவிற்கு முன் விண்ணப்பிப்பு செய்வதற்கான எண்ணத்தைப் பகிரவும் ரெலிகேர் – ப்ரீ அப்ளை ஐபிஓ செயலி என்ற ஒரு ஒற்றை நிறுத்த செயலி அறிமுகம் செய்யப்படுவதை ரெலிகேர் புரோக்கிங் லிமிடெட்  அறிவித்திருக்கிறது.  எல்ஐசி பொதுப்பங்கு வெளியீட்டின் பொது அறிவிப்பு வெளிவருவதற்கு முன்னதாகவே அதன் மீதான தங்களது ஆர்வத்தை முதலீட்டாளர்கள் பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் பொது சப்ஸ்கிரிப்ஷன் தொடங்கப்பட்ட உடனேயே மொபைலில் அறிவிக்கை, எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் தகவலை இதன்மூலம் பெறலாம். 



எல்ஐசி பாலிதாரர்களாக ஏற்கனவே இருந்துவரும் நபர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்கள் உட்பட, அனைத்து வகை முதலீட்டாளர்களும், அவர்களது பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை பூர்த்தி செய்வதன் மூலம் எல்ஐசி ஐபிஓவிற்கான அவர்களது ஆர்வத்தைப் பதிவிடலாம்.  ரெலிகேர் ப்ரீ அப்ளை எல்ஐசி செயலி வழியாக லாகின் செய்து டிமேட் கணக்கைத் தொடங்கும் அனைவரும் மொபைல் செயலி வலைதளம் அல்லது புரௌசரிலிருந்து அவர்களது கணக்கை அணுகிப் பயன்படுத்த இயலும்.  அத்துடன், முதல் 30 நாட்களுக்கு இலவச புரோக்கரேஜ், அனைத்துப் பிரிவுகளிலும் ஒரு பைசா புரோக்கரேஜ், ரீடெய்ல் பார்ட்னர் வலைதளங்களிலிருந்து ரூ.10,000 தள்ளுபடி வவுச்சர்கள், ஆய்வு யோசனைகள் மற்றும் அறிக்கைகள் போன்ற முழு சேவை புரோக்கிங் பலன்களோடு இலவச ஏஎம்சி போன்ற பிரத்யேக அறிமுக – வரவேற்பு ஆதாயங்களைப் பெற்று மகிழலாம்.  ப்ரீமியம் புரோக்கிங் சேவைகளுக்காக எலீட் திட்டத்தையும் வாடிக்கையாளர் தேர்வு செய்ய இயலும்.  

ரெலிகேர் புரோக்கிங்கின் தலைமை செயல் அலுவலர் திரு. நிதின் அகர்வால் இதுபற்றி கூறியதாவது: “டிஜிட்டல்மயமாக்கல், நிதிசார் சேவைகளின் கீழ்வரும் ஒவ்வொரு துறையையுமே புரட்சிகரமாக, அதிரடியாக மாற்றியிருக்கிறது.  ஸ்டாக் புரோக்கிங் செயல்பாடும் இதில் உள்ளடங்கும்.  நிறுவனங்களது பொது பங்கு வெளியீடு விண்ணப்பங்களுக்காக பிரத்யேக செயலியை அறிமுகம் செய்திருப்பதன் வழியாக, முதலீட்டு சந்தைகளில் முதல்முறை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்பதை மிக எளிதானதாக ரெலிகேர் புரோக்கிங் ஆக்கியிருக்கிறது.  எல்ஐசி பங்குகளில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு, ஆனால், எப்படி இதைத் தொடங்குவது என்று தெரியாத நபர்களுக்கு ஒரு ஒற்றை – முனை முதலீடு செயலியாக இது செயல்படும். டிமேட் கணக்கைத் தொடங்க இச்செயலியில் இருக்கும் ஒரு ஒற்றை சாளர வசதி மற்றும் எல்ஐவி ஐபிஓ – ல் முதலீடு செய்வதற்கான விருப்பத்தேர்வு, முதலீட்டாளர்களது ஸ்மார்ட் போனிலேயே இதற்கான அறிவிக்கைகளைப் பெறவும் மற்றும் பங்குகளுக்கு முன்விண்ணப்பத்தை தயாராகவும் உதவும்.” 

ரெலிகேர் புரோக்கிங்கின் முதன்மை இயக்க அதிகாரி திரு. குர்ப்ரீத் சிதானா இது குறித்து கூறியவதாவது: “ரெலிகேர் புரோக்கிங், அதன் முதலீட்டாளர்களுக்கு பங்குகளில் வர்த்தகத்திற்கான தீர்வுகளை எளிமைப்படுத்தி வழங்குவதில் நம்பிக்கை கொண்டிருக்கிறது.  விரைவில் தொடங்கவிருக்கும் ஐபிஓ – ல் முதலீட்டாளர்கள் சிரமமின்றி முதலீடு செய்ய உதவுவதற்கான ரெலிகேர் ப்ரீ – அப்ளை எல்ஐசி ஐபிஓ செயலியை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.  புத்தாக்கமும், வாடிக்கையாளர் திருப்தியும்தான் எமது முதன்மை முன்னுரிமையாக இருக்கிறது.  வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு இதுபோன்ற தீர்வுகளை உருவாக்குவதை நாங்கள் தொடர்ந்து செய்வோம்.  ஐபிஓ முன் – விண்ணப்பத்திற்கு தங்களது எண்ணத்தைப் பதிவு செய்வதற்கு ஒரு – க்ளிக்  வசதியை வழங்குவதன் மூலம் இச்செயலி பயனாளிகளது அனுபவத்தை நேர்த்தியாக மேம்படுத்தும்.” 

ரெலிகேர் ப்ரீ – அப்ளை எல்ஐசி ஐபிஓ செயலியின் வழியாக நீங்கள் என்ன செய்யலாம்? 

வெறும் 10 நிமிடங்களுக்குள் ரெலிகேர் புரோக்கிங் டிமேட் கணக்கை இலவச புரோக்கரேஜ் சலுகையோடு நீங்கள் தொடங்கலாம் மற்றும் வரவிருக்கும் ஐபிஓவுக்கு முன்விண்ணப்பம் செய்ய தயாராகலாம். 

ஐபிஓ நிறுவனத்தின் பெயர், ஐபிஓ வெளியீடு தேதிகள், ஐபிஓ ஆஃபர் விலை, ஐபிஓ விவரங்கள், ஐபிஓவின் வெளியீட்டு அளவு, ஐபிஓவை பட்டியலிடும் பங்குச்சந்தை, ஐபிஓ சந்தை தொகுப்பு போன்ற புதிய பொது பங்கு வெளியீடு தொடர்பான தகவல் அனைத்தையும் நீங்கள் பெறலாம். 

எல்ஐசி ஐபிஓ உட்பட, ஐபிஓக்களுக்கு முன் – விண்ணப்பம் செய்ய உங்களால் இயலும்.  மற்றவர்களை விட ஒரு அடி நீங்கள் முன்னால் இருப்பதை இது உறுதிசெய்யும். 

எல்ஐசி ஐபிஓவில் பங்கேற்பதற்கான வாய்ப்பை தவறவிட நீங்கள் விரும்பமாட்டீர்கள்.  இது தொடங்கப்படும் தேதி, விலை மற்றும் அதன் அளவு மற்றும் இன்னும் அதிக தகவல்கள் போன்ற எல்ஐசி ஐபிஓ வெளியீடு விவரங்களை இச்செயலி உங்களோடு பகிர்ந்து கொள்ளும்.  

ஆண்ட்ராய்டு பிளேஸ்டோரிலிருந்து ரெலிகேர் ப்ரீ – அப்ளை எல்ஐசி ஐபிஓ செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மற்றும் ரெலிகேர் புரோக்கிங் உடன் 10 நிமிடங்களில் ஒரு டிமேட் கணக்கை நீங்கள் தொடங்கலாம். 

ரெலிகேர் புரோக்கிங் என்பது, பங்குச் சந்தைகள் மற்றும் பிற முதலீட்டு திட்டங்களில் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்டு முழு சேவையை வழங்கும் ஒரு புரோக்கிங் நிறுவனமாகும்.  நாடெங்கிலும் 400-க்கும் அதிகமான நகரங்களில் 1100+ கிளைகள் மற்றும் பிசினஸ் பார்ட்னர்களை உள்ளடக்கிய வலையமைப்பினைக் கொண்டு ஒரு மில்லியனுக்கும் கூடுதலான டிமேட் கணக்குதாரர்களுக்கு ரெலிகேர் புரோக்கிங் தற்போது சேவையாற்றி வருகிறது.  ரெலிகேர் புரோக்கிங் வழியாக, சமப்பங்குகள், கரன்சி, கமாடிடிட்டி, பரஸ்பர நிதிகள், காப்பீடு, என்பிஎஸ் போன்ற பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யலாம். 

About Religare Broking Ltd. (RBL):

Religare Broking Ltd. (RBL) is one of the leading securities firms in India serving over 10 lakh clients across both Online and Offline platforms. With an extensive footprint that extends all over the country; Religare Broking offers services in Equity, Currency, Commodity, Mutual Funds, Insurance, NPS and Depository services. Religare Dynami, is one of the most advanced mobile trading applications in the market today, with guest login facility for new investors.  The company has also been certified as the Great Place to Work Organization recently which in itself is an evidence of excellent work culture and employee inclusion policies of the organization. A member of the NSE/ BSE and a depository participant with NSDL and CDSL, Religare Broking also offers TIN facilitation & PAN facility at selected branches – a unique service to help an individual with PAN, TAN and TDS/TCS return related requirements.

For further information, please contact:

Concept PR

Archana Ramesh / Bhavika Jain

+91 7710032525/ +91 9969840328

archana.r@conceptpr.com/bhavika@conceptpr.com  


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...