மொத்தப் பக்கக்காட்சிகள்

மாபெரும் சாதனைகளை நிகழ்த்திய ஊனமுற்ற இந்தியர்களை கௌரவிக்கும் 20-வது கவின்கேர் எபிலிட்டி விருதுகள்

மாபெரும் சாதனைகளை நிகழ்த்திய ஊனமுற்ற இந்தியர்களை

கௌரவிக்கும் 20-வது கவின்கேர் எபிலிட்டி விருதுகள் 

சென்னை, 26 மார்ச் 2022: ஊனங்களை பொருட்படுத்தாது, அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் சாதனையாளர்களை பலரும் அறிய வேண்டுமென்ற நோக்கத்துடன் கவின்கேர் மற்றும் எபிலிட்டி ஃபவுண்டேஷன், ஆகியவை ஒருங்கிணைந்து அவர்களுக்கு 20-வது கவின்கேர் எபிலிட்டி விருதுகளை வழங்கி கௌரவித்திருக்கிறது.  வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கு குறுக்கீடு செய்த தடைகளை தங்களது மனஉறுதியாலும், நம்பிக்கையாலும் உடைத்தெறிந்து, வெற்றி கண்டிருக்கின்ற ஊனமுற்ற நான்கு சிறந்த சாதனையாளர்களுக்கு கௌரவம்மிக்க இவ்விருதுகள் வழங்கப்பட்டன.  கௌரவம்மிக்க இவ்விருதுகளையும் மற்றும் விருதுபெற்ற சாதனையாளர்களையும் கொண்டாட தலைமை விருந்தினரான திரு. .ஆர். ரகுமான் அவர்கள் ஒரு சிறப்பான இசை நிகழ்ச்சியை வழங்கினார்.

பல்வேறு சிரமங்களையும், தடைகளையும் பொருட்படுத்தாமல், தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் முன்மாதிரி சாதனைகளை நிகழ்த்தியவர்களை அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் நோக்கத்தோடு இந்த ஆண்டு நிகழ்விற்காக பல்வேறு செயல்தளங்களில் இயங்குகின்ற சாதனையாளர்களை புகழ்பெற்ற ஆளுமைகள் அடங்கிய ஒரு நடுவர் குழு தேர்வு செய்தது. இந்த ஆண்டு நிகழ்விற்கான நடுவர் குழு உறுப்பினர்களில், பாடகரும், இசையமைப்பாளருமான திரு. சங்கர் மகாதேவன், தக்ஷின் பாரத் பிராந்தியத்திற்கான தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் A. அருள் GOC, பொன் பியூர் கெமிக்கல்ஸ்ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. எம். பொண்ணுசாமி, திரைப்பட தயாரிப்பாளர் திரு. அருண்மொழி மாணிக்கம், மைக்ரோசாஃtப் இந்தியா நிறுவனத்தின் தலைமை உருமாற்ற அதிகாரி திரு. மிதுன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த கவின்கேர் பிரைவேட் லிமிடெட் - ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. சி.கே. ரங்கநாதன், “கவின்கேர் எபிலிட்டி விருதுகள் நிகழ்வை வெற்றிகரமாக 19 ஆண்டுகள் நிறைவு செய்ததற்குப் பிறகு 20-வது ஆண்டில் இப்போது நாங்கள் நுழைந்திருக்கிறோம். ஊனங்கள் இருப்பினும், பெருமைக்குரிய சாதனைகளை செய்தவர்களை அங்கீகரித்து, கௌரவிப்பதில் எமது 20 ஆண்டுகால பயணம் எங்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியும், திருப்தியும் அளிப்பதாக இருந்திருக்கிறது.  நம்மால் ஒருபோதும் கற்பனை செய்திடாத வழிமுறைகளில் அவர்களது செயல்திறனையும், மனஉறுதியையும் உலகறிய வெளிப்படுத்தியிருக்கின்ற இந்த தைரியம் மிக்க திறமையான நபர்களைக் காண்பது உத்வேகமளிக்கிறது.  ஊனங்கள் இருப்பினும், சாதிக்கின்ற இன்னும் அதிகமான தனிநபர்களை அடையாளம் கண்டு, அவர்களது நேர்மறை உணர்வையும், சாதனைகளையும் பலரும் அறியுமாறு செய்வது எனது நோக்கமாகும்.  இவ்விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் ஔிமயமான, வளமான எதிர்காலம் அமையவும், அவர்களது எதிர்கால முயற்சிகள் சிறப்பான வெற்றிகாணவும் நாங்கள் வாழ்த்துகிறோம்,” என்று கூறினார்.

எபிலிட்டி ஃபவுண்டேஷனின் நிறுவனரும், கௌரவ நிர்வாக இயக்குனருமான திருமதி. ஜெயஸ்ரீ ரவீந்திரன் பேசுகையில், “கவின்கேர் எபிலிட்டி விருதுகள் நிகழ்வின் 20-வது ஆண்டு தருணத்தில் இவ்விருதுகள் முக்கியமான திருப்புமுனைகளாகவும், சாதனை நிகழ்ச்சிகளாகவும் இருந்திருக்கின்றன என்று பெருமையோடும், அதே வேளையில் தாழ்மை உணர்வோடும் என்னால் சொல்ல இயலும்.  நமது நாட்டில் ஊனமுற்றோர் சமூகமும் மற்றும் மிக முக்கியமான ஊனமற்ற நபர்களும் அவர்களது உண்மையான சாத்தியமுள்ள செயல்திறன்களுக்காக கண்டறியப்படுகின்ற, அங்கீகரிக்கப்படுகின்ற மற்றும் புரிந்துகொள்ளப்படுகின்ற நிலையில் இருக்கின்றனர் என்று நான் நம்புகிறேன்.  இந்த விருதுகளும் மற்றும் எபிலிட்டி ஃபவுண்டேஷனின் ஒவ்வொரு செயல்பாடுமே இந்த திசையை நோக்கிய எமது முன்னேற்றப் பாதையில் முக்கியமான படிக்கட்டுகளாக இருந்திருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.  ஊனங்கள் இருப்பினும், அவற்றையும் பொருட்படுத்தாது, வியப்பூட்டுகின்ற மற்றும் பிரமாதமான இத்தகைய சாதனையாளர்களை இந்நாட்டிலுள்ள அனைவருக்கு முன்பாக வெளிச்சம் போட்டுக்காட்டுவது மிகவும் சவால் மிக்கதாகவும் மற்றும் உற்சாகமூட்டுவதாகவும் எங்களுக்கு இருந்திருக்கிறது.  இக்குறிக்கோளுக்காக மாற்றமடைந்திருக்கின்ற ஒவ்வொரு மனப்பான்மையும், மனதிலிருந்து தூக்கியெறியப்பட்ட ஒவ்வொரு வழக்கமான பழைய கண்ணோட்டமும் மற்றும் ஊனமுற்றோர் நலனுக்காக செயல்பட மனமாற்றம் பெற்றிருக்கின்ற ஒவ்வொரு தனிநபரும் இந்த முன்னேற்றத்திற்காக மிக முக்கிய பங்குகளை ஆற்றியிருக்கின்றனர்.  ஊனங்கள் இருப்பினும், பிற மக்களைப்போல சமத்துவத்தையும், அங்கீகாரத்தையும் ஊனமுற்றோர் பெறுகின்ற நிலை என்ற இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டிய தூரம் மிக நீண்டது...  இதற்கு முன்பு வரை இருந்து வந்திருக்கின்ற முழு பாகுபாடும், அலட்சியமும் கடந்த காலத்தைச் சேர்ந்தது என்று பின்னோக்கிப் பார்க்கின்ற மற்றும் சமத்துவம் நிலவுவதை பெருமை உணர்வோடு நாம் அனைவரும் காண்கின்ற நாளும் இன்னும் வெகுதூரத்திலில்லை.” என்று கூறினார

தேசிய அளவிலான இவ்விருது இரு வகையினங்களில் வழங்கப்படுகிறது: கவின்கேர் எபிலிட்டி எமினன்ஸ் விருது மற்றும் கவின்கேர் எபிலிட்டி மாஸ்ட்டரி விருது, நாடெங்கிலுமிருந்து விருதுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள், இவர்கள் எதிர்கொண்ட சிரமத்தின் அளவு, தடைகளின் மீது கண்ட வெற்றி மற்றும் சாதித்த பணியின் தனித்துவத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் குறும்பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டன.

கவின்கேர் எபிலிட்டி விருதுகள் 2022- பெற்ற சாதனையாளர்கள்: 

கவின்கேர் எபிலிட்டி எமினன்ஸ் விருது

கிருஷ்ணகுமார் PS, கொல்லம், கேரளா

முதுகெலும்பு தசைச் சிதைவு மற்றும் தசைநார் தேய்வு பாதிப்புள்ள நபர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்காக திரு கிருஷ்ணகுமார் மற்றும் அவரது நண்பர்களால் மைண்ட்(MinD) (Mobility in Dystrophy) என்ற அமைப்பு 2017ம் ஆண்டு நிறுவப்பட்டது. விழிப்புணர்வு, கல்வி, திறன் உருவாக்கம், வேலைவாய்ப்பு, மறுவாழ்வு மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் வழியாக மாற்றத்தை இவர்கள் வாழ்வில் கொண்டுவருவதே MinD அமைப்பின் நோக்கமாகும். ஆறு மாத கால குழந்தையாக இருக்கும்போது முதுகெலும்பு தசைச்சிதைவு கிருஷ்ணகுமாருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. இதன் விளைவாக, அவரது உடல் முற்றிலும் இயக்க செயல்பாடு அற்றதாக பாதிக்கப்பட்டது. பள்ளியில் கல்விகற்க கிருஷ்ணகுமாரால் இயலாததை ஈடுசெய்ய அவருக்கு ஒரு சிறப்பான கல்வியை வழங்குவதற்கு அவரது தந்தை ஒரு வழிகாட்டுனராக கடுமையாக பாடுபட்டார். கிருஷ்ணகுமாரின் 26வது வயதில் நடந்த ஒரு விபத்தில் அவரது தந்தையையும், சகோதரியையும் அவர் இழந்தார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டெழுவதற்காக அவருக்கு தேவைப்பட்ட ஆண்டுகளின்போது அவரைப்போன்று பாதிக்கப்பட்ட பிறர் நபர்களின் மீதும் அவர் சிறப்பு கவனம் செலுத்தத் தொடங்கினார். இன்றைக்கு, முதுகெலும்பு தசைச் சிதைவு மற்றும் தசைநார் தேய்வு பாதிப்புள்ள நபர்கள் சமூகத்தில் தீவிர செயல்பாடுள்ள பங்கேற்பாளர்களாக ஆவதற்கு அவர்களுக்கு திறனதிகாரம் பெறச் செய்யும் பல்வேறு செயல்நடவடிக்கைகளில் கிருஷ்ணகுமார் வெகு ஆர்வத்தோடு ஈடுபட்டிருக்கிறார்.]

கவின்கேர் எபிலிட்டி மாஸ்ட்ரி விருதுகள்

வித்யஸ்ரீ அன்குஷ், சோலாப்பூர், மஹாராஷ்ட்ரா

 

ஊனங்கள் உள்ள குழந்தைகளுக்கு உதவவே வித்யஸ்ரீ எப்போதும் தீராத விருப்பம் கொண்டவராக இருந்திருக்கிறார். 14 ஆண்டுகளாக இத்தகைய நபர்களுக்கான ஒரு சிறப்பு கல்வியாளராக அவர் செயலாற்றி வருகிறார். குறைவான பார்வைத்திறனோடு பிறந்த இவர், 2017ம் ஆண்டில் முற்றிலுமாக அவரது பார்வையை இழந்தார். ஆனால் அவர் தேர்வு செய்த வாழ்க்கைப் பணிக்கான பாதையில் இவர் தொடர்ந்து செல்வதற்கு இந்த இழப்புகள் தடையாக இருந்ததில்லை. உடல்சார்ந்த, உணர்வு சார்ந்த மற்றும் நிதி சார்ந்த சிரமங்களும், போராட்டங்களும், கடுமையாக உழைப்பதிலிருந்தோ, மற்றும் தன்னைப்போன்ற இச்சமூகத்தை சேர்ந்த நபர்களுக்கு உதவிக்கரம் நீட்டவோ இவரை ஒருபோதும் தடைக்கற்களாக இவருக்கு இருந்ததில்லை. அவரது நண்பர்களோடு சேர்ந்து, இரு மொபைல் செயலிகளை வித்யஸ்ரீ உருவாக்கியிருக்கிறார். பார்வைத்திறன் பாதிப்புள்ள நபர்கள் தொழில்நுட்பத்தை உகந்தவாறு பயன்படுத்திக்கொள்வதை ஏதுவாக்க இவர் உருவாக்கிய ஹேப்பி லேர்னிங்(Happy Learning) மற்றும் பிளைன்ட் டெக் (Blind Tec Hindi) ஹிந்தி என்ற இரு செயலிகளும் சிறப்பாக உதவுகின்றன.

 மனாசி ஜோஷி, அஹமதாபாத், குஜராத்

கல்வி மூலம் ஒரு பொறியியலாளராக மற்றும் பணியின் காரணமாக ஒரு மென்பொருள் உருவாக்குனராக இருந்த மனாசியின் உலகம், 2011ம் ஆண்டு இவர் ஒரு விபத்தில் சிக்கியபோது முற்றிலுமாக மாறிப்போனது. விபத்தின் காரணமாக, ஊனமும் இவருக்கு ஏற்பட்டது. குழந்தை பருவத்திலிருந்தே இவருக்கு மிகவும் பிடித்த விளையாட்டான பேட்மின்டனை, பாதிப்பிலிருந்து மீண்டு மறுவாழ்வு பெறுவதற்காக மனாசி பயன்படுத்தினார். ஒரு செயற்கை காலை பயன்படுத்தி இதற்கான பயிற்சியை இப்பெண்மணி தொடங்கினார் மற்றும் கூடிய விரைவிலேயே தனது பணிக்கு அவர் திரும்பினார்


Manasi Joshi

அவர் பணியாற்றிய நிறுவனத்தின் கார்ப்பரேட் நிகழ்வுகளின்போது ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகளில் வென்றது, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஊனமுற்றோருக்கான பாரா விளையாட்டுகளில் பங்கேற்பதற்கான நம்பிக்கையையும், தைரியத்தையும் தந்தது. பாரா பேட்மின்டன் வீராங்கனையாக மாறுவதற்காக தனது கார்ப்பரேட் பணியிலிருந்து இவர் விலகினார். அதற்குப் பிறகு நம் நாட்டிற்காக இதுவரை 30 பதக்கங்களை இவர் வென்றிருக்கிறார். பாரா பேட்மின்டனில் மனாசி இப்போது உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்கிறார்; அதுமட்டுமன்றி 2019ம் ஆண்டிலிருந்தே இந்த நிலையை அவர் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்ருத்திலதா சிங், ஹிம்மத் நகர், குஜராத்

பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் பார்வையற்ற காதுகேட்காத நபர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து போராடி வருபவரான ஸ்ருத்திலதா, இன்று ஒரு சுதந்திரமான ஈடுபாடுள்ள உற்சாகமான வாழ்க்கையை நடத்துகிறார். தனிப்பட்ட அளவில் அங்கீகாரத்தை பெற்ற சாதனையாளராக மட்டுமன்றி, தன்னைப்போல் இருக்கிற பிற ஊனமுற்றோருக்காகவும் அவர்களது கோரிக்கைகளுக்காக குரலெழுப்பும் தீவிர செயல்பாட்டாளர்களாக தனது பணியை இவர் தொடங்குகிறார். சிறுமியாக வளரும்போதே பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் ஆகிய இரண்டையும் இழந்த ஸ்ருத்திலதா, ஆங்கிலத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த பிறகு பிசியோதெரபி எனப்படும் இயன்முறை சிகிச்சையில் டெப்ளமா பெற்றார். இத்தகைய சாதனையை இந்தியாவில் நிகழ்த்திய செவித்திறனும், பார்வைத்திறனும் அற்ற முதல் நபர் இவரே. ஓராண்டாக இயன்முறை சிகிச்சையாளராக பணியாற்றிய ஸ்ருத்திலதா, தற்போது சென்ஸ் இன்டர்ஷேனல் இந்தியா என்பதில் நெட்வொர்க் ஆதரவுக்கான சிறப்பு நிபுணராக பணியாற்றி வருகிறார

கவின்கேர் பிரைவேட் லிமிடெட் குறித்து: கவின்கேர் பிரைவேட் லிமிடெட், தனிநபர் பராமரிப்பு, தொழில்முறை பராமரிப்பு, உணவுகள், பால்பொருட்கள், பானங்கள், சூழல் மற்றும் சலூன்கள் ஆகிய துறையில் தொழிற்பிரிவுகளைக்கொண்டு, ஒரு பன்முக செயல்பாடுள்ள ஒரு எஃப்எம்சிஜி பெருநிறுவனமாகும். இதன் பிராண்டுகள் தொகுப்பில் ஷாம்புகள் (சிக், மீரா, கார்த்திகா மற்றும் நைல்), ஹேர் வாஷ் பவுடர்கள் (மீரா மற்றும் கார்த்திகா), தேங்காய் எண்ணெய் (மீரா), ஃபேர்னஸ் கிரீம்கள் (ஃபேர் எவர்), டியோடரண்ட் மற்றும் டால்க் (ஸ்பின்ஸ்), ஊறுகாய்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் (ருச்சி, சின்னிஸ் & கார்டன்), ஹேர் கலர்ஸ் (இன்டிகா), ரீடெய்ல் சலூன் தயாரிப்புகள் (ராகா புரொஃபஷனல்), பானங்கள் (மா), பால் பொருட்கள் (கவின்ஸ்), மற்றும் பியூட்டி சலூன்கள் (கிரீன் டிரென்ட்ஸ் & லைம்லைட்) ஆகியவை அடங்கும். உடல்நலம் மற்றும் தூய்மை வகையினத்தில் தனது செயல்பாடுகளை சமீபத்தில் விரிவாக்கம் செய்திருக்கும் கவின்கேர், காய்கறிகள் மற்றும் பழங்களின் தூய்மை மற்றும் பாதுகாப்பிற்காக சாஃபூ (மற்றும் பல்வேறு மேற்பரப்புகள் மற்றும் சாதனங்களுக்கான தொற்றுநீக்கியான பாக்டோ-வி என தொற்றுநீக்கல் செய்து தூய்மைப்படுத்தும் தயாரிப்புகளின் அணிவரிசையை வழங்குகிறது. இதன் முக்கியமான ஃபர்சனல் கேர் பிராண்டுகளின் கீழ் ஹேண்டு சானிடைசர்கள் மற்றும் லிக்விட் சோப்பு தயாரிப்புகளையும் கவின்கேர் வழங்கி வருகிறது. இதன் பெரும்பாலான பிராண்டுகள் அவைகளுக்குரிய தயாரிப்பு வகையினங்களில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிற பிராண்டுகளாகும். நவீன சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப திறன்கொண்ட ஒரு பிரத்யேக ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் மையமானது, இந்த பல்வேறு துறைகள் முன்னேற்றம் காண்பதற்கு தொடர்ந்து பெரிதும் உதவுகிறது. மிகப்பெரியளவில் சந்தையாக்கல் செய்வதற்கான யுக்திகளையும், அம்சங்களையும் மிகச்சரியாக புரிந்துகொண்டிருக்கும் இந்நிறுவனம், தேசிய அளவிலான சந்தையில் மிக வலுவாக காலூன்றி இருக்கிறது. “பேரார்வமும், பெருமகிழ்ச்சியும் கொண்ட பணியாளர்கள் வழியாக புத்தாக்கத்தை ஊக்குவித்து மக்களால் பெரிதும் விரும்பப்படும் பிராண்டுகளை உருவாக்குவதன் மூலம், தொழில்துறையின் வளர்ச்சியை விட கணிசமான அளவு இன்னும் சிறப்பாக நாங்கள் வளர்ச்சி காண்போம்என்ற தனது கார்ப்பரேட் செயல்நோக்கம் மற்றும் திட்டத்தின் மீது வலுவான அடித்தளத்தை அமைத்திருப்பதே கவின்கேரின் வெற்றிக்கு காரணமாகும்.

எபிலிட்டி ஃபவுண்டேஷன் குறித்து: எபிலிட்டி ஃபவுண்டேஷன், சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு நாடெங்கிலும் தேசிய அளவில் பல்வேறு ஊனமுற்றோர்கள் நலனுக்காக பணியாற்றிவருகிற ஒரு முதன்மை அமைப்பாகும். ஊனமுற்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் சமவாய்ப்புகள் உள்ள சமுதாயம் அமைந்திட வேண்டும் என்ற இலக்கை நோக்கி வலுவாக முன்னேறிக்கொண்டிருக்கும் எபிலிட்டி ஃபவுண்டேஷன், ஊனமுற்ற நபர்களுக்கு ஆற்றலையும், அதிகாரத்தையும் ஏதுவாக்கி அவர்களது திறன்கள் வெளிப்படுமாறு செய்வதில் கவனம் செலுத்திவருகிறது. அத்துடன், ஊனமுற்றோர்கள் மற்றும் ஊனமற்ற பிற மக்களுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்புவதும் இதன் கூர்நோக்கங்களுள் ஒன்றாகும்.

தகவல் பரவலாக்கம், ஆலோசனை, அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான கல்வியை முன்னிலைப்படுத்தல், பணி அமைவிடத்தில் பன்முகத் தன்மை, உரிமைகள் மற்றும் பொது கொள்கை ஆகியவை எபிலிட்டி ஃபவுண்டேஷன் பங்களிப்பு நல்கி, ஈடுபாட்டுடன் செயலாற்றி வருகின்ற முக்கிய தளங்களாகும். இந்நோக்கங்களுக்காக பிரசுரித்தல், பணி வாய்ப்பு வழங்கல், ஊடகம், கலாச்சாரம், கொள்கை அமலாக்கம், சட்டம் இயற்றல் மற்றும் மனித உரிமைகள் என பல துறைகளில் இந்த அறக்கட்டளையின் செயல்பாடுகள் நீள்கின்றன. சரியான நேரத்தில், சரியான வாய்ப்புகளை கிடைக்குமாறு செய்யும் குறிக்கோளின் மீது தளராத பொறுப்புறுதியினை இது கொண்டிருக்கிறது. அனைவரும் சமஅளவில் போட்டியிடுகின்ற களமும் இருக்குமானால், இன்னும் அதிகமானவை சாத்தியமே. இதற்கு அவசியப்படுவதெல்லாம் ஏற்றுக்கொள்கிற, பக்குவப்பட்ட ஒரு திறந்த மனநிலை மட்டுமே.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...