மொத்தப் பக்கக்காட்சிகள்

பசுமை பத்திரங்கள், முதலீட்டாளர்களுக்கு வரப்பிரசாதம்..! - நிதி நிபுணர் திரு. வ.நாகப்பன்


 

மத்திய பட்ஜெட் 2022-23-ல் அறிவிக்கப்பட்ட ‘கிரீன் பாண்ட்’ முதலீட்டாளர்களிடையே அதிக ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறதுநிதி நிபுணர் திரு. வ.நாகப்பன் கூறினார்

‘‘ காலநிலை மாற்றம் தொடர்பான பாதிப்புகள் சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு வந்த பிறகுஅது குறித்து மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றனஅந்த மாநாடுகளில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்து சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பது பிரதான நோக்கமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது.  கார்பன் வெளியேற்றத் துக்கு ஏற்ப எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாடுகள்  ஆராய்ச்சி செய்து வருகின்றன.  இதற்கு அதிக முதலீடு தேவைப்படுகிறதுஇதை திரட்ட கிரீன் பாண்ட் திட்டம் கொண்டு வரப்பட்ட்டிருக்கிறது.

பல்வேறு நாடுகள்  பசுமை பத்திரங்களை வெவ்வேறு பெயர்களில் வெளியிட்டு வருகின்றன. கடந்த செப்டம்பர் 2021-ல் . இங்கிலாந்து  ஏஏ ( AA) தரக் குறியீடு கொண்ட கிளைமேட் பாண்டுகளை 10 பில்லியன் பவுண்டுகளுக்கு வெளியிட்டதுடாலர் மதிப்பில் இது 13.6 பில்லியன் டாலர ஆகும்.

இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்ய  10 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்தனஇந்த கிளைமேட் பத்திரங்களுக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து மீண்டும் ஆறு பில்லியன் பவுண்டுகளுக்கு பத்திரங்களை வெளியிட்டதுஅதுவும் 12 மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம்  ஏ ஏ ஏ (AAA) தரக் குறியீடு கொண்ட கிரீன் பாண்டுகளை 12 பில்லியன் யூரோவுக்கு வெளியிட்டதுஅதற்கான விண்ணப்பங்கள் 11 மடங்கு அதிக மாகக் குவிந்தன.

சர்வதேச  எரிசக்தி ஏஜென்சி வெளியிட்டுள்ள கணிப்புப்படிவளர்ந்துவரும் நாடுகள் தங்களின் நாட்டில் பூஜ்ய கார்பன் வெளியீட்டு இலக்கை எட்டுவதற்கு 4 டிரில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டும்இதற்குத் தேவையான நிதியைத் திரட்ட சிறந்த வழியாக இந்த கிரீன் பாண்டுகள் உள்ளனசர்வதேச அளவில் இந்தப் பசுமை பத்திரங்களுக்குக் கிடைத்துள்ள வரவேற்பு இந்தியாவிலும் நிச்சயம் இருக்கும் எனலாம்” என்றார்..



                                                                        திரு. வ
.நாகப்பன் 


இந்தியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்தே  பசுமைப் பத்திரங்கள் வெளியிடப்பட்டு வருக்கின்றன  இவற்றை கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகம் வெளியிட்டுள்ளனகடந்த 2021-ல்தான் அதிகபட்சமாக 6.11 பில்லியன் டாலருக்கு  பசுமை பத்திரங்கள் வெளியிட்டுள்ளன. 2021-ல் வெளியிடப்பட்ட மொத்த கிரீன் பாண்டுகளில் 94% நிதித்துறை அல்லாத கார்ப்பரேட் நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில்தற்போது பட்ஜெட்டில் கிரீன் பாண்டுகளை மத்திய அரசு வெளியிட உள்ளது என்ற அறிவித்துள்ளதுஏனெனில்உலகின் மூன்றாவது பெரிய கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வு நாடாக உள்ள இந்தியா உள்ளதுநம் நாட்டில் கார்பன் சமநிலை நாடாக புத்துயிர் பெறுவதற்கு 10 டிரில்லியன் டாலர் முதலீடுகள் செய்யப்பட வேண்டும்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...