மொத்தப் பக்கக்காட்சிகள்

புத்தாண்டு 2022: உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் 10 நிதி, முதலீட்டு தீர்மானங்கள்

 

புத்தாண்டு 2022:   

நிதி, முதலீட்டு தீர்மானங்கள்

-   புத்தாண்டு பிறக்கப் போகிறது, நாம் அனைவரும் ஒரு புதிய ஆரம்பத்துக்கு தயாராகிவிட்டோம். புத்தாண்டில்,ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை (lifestyle) பின்பற்ற விரும்புவோம், நிதி ஒழுக்கத்தை ஏற்றுக் கொள்வது, மற்றும் நிதி ரீதியாக ஆரோக்கியமாக இருக்க முதலீடு செய்ய விரும்புவோம். ஒவ்வொரு ஆண்டும் நாம் பல நிதித் தொடர்கான தீர்மானங்களை எடுத்தாலும், நம்மில் பெரும்பாலோர் அவற்றை சரியாக பின்பற்றுவதில்லை. தனிநபர் நிதித் திட்டமிடுவது (personal finance) என்பது நமது வாழ்க்கை நன்றாக மற்றும் சிறப்பாக இருக்க ஊக்கப்படுத்துவதாக இருப்பது தேவையாக உள்ளது.

நாம் வலிமையான நிதி தீர்மானங்களுடன் புத்தாண்டை ஆரம்பிக்கும் போது, நமது நிதி இலக்குகளை (money goals) எளிதில் அடைய முடியும். அந்த நிதி இலக்குகள், ஓய்வுக்கால சேமிப்பை அதிகரிப்பதாகவோ அல்லது வீட்டுக் வாங்குவதற்கான முன் பணத்தை (down payment) திரட்டுவதாகவோ அல்லது வருங்காலத்துக்கான நிதி பாதுகாப்புக்காக முதலீடு செய்வதாகவோ இருக்கலாம்.



ஓர் ஆரோக்கியமான நிதியியல் வாழ்வை பின்பற்ற விரும்புபவர்களுக்கான  10 புத்தாண்டு தீர்மானங்கள் (Resolutions) இதோ...!

1.  உங்கள் நிதிகளை மதிப்பாய்வு செய்து,  தனிப்பட்ட இலக்குகளை  நிர்ணயம் செய்யவும்.  

உங்கள் சொத்து மற்றும் பொறுப்புகளை (liabilities), கணக்கெடுத்து உங்களின் நிதி நிலையை ஆய்வு செய்யுங்கள். பணம் எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். உதாரணத்துக்கு, கிரெடிட் கார்ட் மூலம் செலவு செய்வதை கட்டுபடுத்துவதன் அர்த்தம் குறைவான கடன்; தேவையில்லாமல் பொருட்களை வாங்குவதை குறைப்பதன்  (உதாரணம், உணர்ச்சிவசப்பட்டு தூண்டுதல் மூலம் பொருள்களை வாங்குதல்) அர்த்தம் அதிக சேமிப்பு. எதற்கு சேமிக்க விருப்புகிறீர்கள் (குழந்தைகள் கல்வி, புதிய வீடு, கார் அல்லது கனவு சுற்றுலா போன்றவை)  என்பது பற்றி சிந்தியுங்கள். மேலும், குறிப்பிட்ட இலக்கை அடைய எவ்வளவு நாளைக்கு சேமிக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்.

2.       பட்ஜெட் போட ஆரம்பியுங்கள்

2022 –ம் ஆண்டு பிறக்கப் போகிறது. புத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை (budget) தயாரிக்க  இதுவே சரியான நேரமாகும். பட்ஜெட்க்குள் உங்கள் செலவுகள் இருந்தால், அது உங்கள் நிதி இலக்குகளை அடைவதை உறுதிப்படுத்தும். தூண்டுதல் மூலம் பொருள்களை வாங்கிக் குவிப்பது, பணவரத்தில் கடன்கள் மற்றும் பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடும். வங்கி சேமிப்பு கணக்கை செயல்பாட்டில் வைத்திருங்கள். உங்கள் நிதி நிலையை தீர்மானிக்க உங்கள் கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு என பார்த்து தேவைப்பட்டால் அதனை அதிகரிக்க பாருங்கள். மேலும், தொடர்ந்து உங்கள் பட்ஜெட்-ஐ புதுப்பித்து வாருங்கள். 

3.       குடும்பமாக கலந்து பேசி நிதி முடிவுகளை எடுங்கள்

உங்கள் பிள்ளைகளுக்கு, பணத்தை சேமிப்பதற்கும் தேவையற்ற செலவுகளை குறைப்பதற்கும்  சொல்லிக்கொடுங்கள்; இந்த அடிப்படை நிதி கருத்துகளைப் பற்றி பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பது குடும்பத்தின் நிதி இலக்குகளை  அவர்களுக்கு புரிய வைக்கும். குடும்ப பட்ஜெட்-ஐ குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து திட்டமிடுங்கள். இதன் மூலம் அனைவரும் சேமிப்பு மற்றும் செலவில் பங்கேற்க முடியும் மற்றும் பொறுப்புகளை சமமாக பகிர்ந்துகொள்ள முடியும்.

4.       உங்கள் உடல்நலத்திற்காக சேமிக்கத் தொடங்கவும்

நல்ல ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த, நீங்கள் உங்கள் நிதித் திட்டமிடலை முன்னதாக தொடங்க வேண்டும்ஒருங்கிணைந்த ஹெல்த் பாலிசியை எடுங்கள். இது அவசர மருத்துவ செலவுக்கு கைகொடுக்கும். நிதி நெருக்கடியிலிருந்து குடும்பத்தினரை பாதுகாப்பது நல்ல நிதித் திட்டமிடலாகும்.

 

5.       உங்கள் குழந்தையின் எதிர்காலத் தேவைக்கு நிதித் திட்டமிடலை தொடங்கவும்

தேசிய அளவில் அவிவா நடத்திய கணக்கெடுப்பின்படி, குழந்தைகள் கல்விக்கான நிதித் திட்டமிடலுக்கு பெரும்பாலான இந்திய பெற்றோர்கள் அதிக  முன்னுரிமை கொடுப்பது தெரிய வந்துள்ளது. இருந்தாலும், பெரும்பாலான பெற்றோருக்கு முறையான நிதித் திட்டமிடல் தெரியவில்லை என்பதால் அவர்கள் குழந்தைகளின் உயர்கல்விக்கு தேவையான தொகையை கடனாக வாங்குகிறார்கள். கல்விச் செலவுக்கான கால்குலேட்டரை பயன்படுத்தி அவர்களின் உயர்கல்விக்கு தேவைப்படும் முதலீட்டை மேற்கொள்வதை உறுதிப்படுத்த முடியும்.


6.       நீங்கள் அன்பு செலுத்துபவர்களின் எதிர்கால  பாதுகாப்பு

நிதித் திட்டமிடலின் அடிப்படை நிலை ஆயுள்  காப்பீடு (Life insurance) எடுப்பதாகும். நீங்கள் உங்களுக்கு சரியான ஆயுள் காப்பீடு செய்து, உங்கள் குடும்பத்தின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் இல்லாத நிலையில் குடும்ப உறுப்பினர்கள் வாழ்க்கைத் தரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு தேவைப்படும் தொகையை கணக்கிட்டு, அந்தத் தொகை அளவுக்கு ஆயுள் காப்பீடு எடுக்கவும். டேர்ம் பிளான்  மிகவும் மலிவானது, இது, குடும்பத்திற்கு முழுமையான பாதுகாப்பு வழங்குகிறது.

 

7.        கடன்களை அடைக்கவும்

உங்கள் நிதித் திட்டமிடலின்  மிகப்பெரிய தடை கடன் ஆகும். சரியான நேரத்தில் உங்கள் கட்டணங்களை செலுத்துங்கள் மற்றும் நிலுவையிலுள்ள உங்கள்  கடன்களை அடையுங்கள். கிரெடிட் கார்டு பாக்கி தொகைக்கு அதிக வட்டி கட்ட வேண்டும். எனவே, அதனை சரியான நேரத்தில் அடைத்துவிடுவது நல்லது. உங்கள் கடன்களை அடைக்க முயற்சி எடுங்கள். இது வட்டிச் செலவை குறைக்க உதவும்.

8.        முதலீடு செய்யும் முன் சேமிப்பை ஆரம்பிக்கவும்

முதலீட்டு செய்வதற்கு முன், சேமிப்புக்கான பழக்கத்தை ஆரம்பிக்கவும்.  தேவை இல்லாத செலவுகளை குறைக்கவும். இதற்காக நீங்கள் தனியாக வங்கி சேமிப்பு கணக்கை ஆரம்பிக்கவும். அதை உங்கள் பிக்கி வங்கியாக புயன்படுத்துங்கள். காரணம், பணம் சேமிக்கப்படுவது சம்பாதிப்பதற்கு சமம் 

9.        உங்கள் ஓய்வூதியத்திற்காக சேமிக்க தொடங்கவும்

20 வயதிற்குள் நீங்கள் ஓய்வு காலத்துக்கு சேமிக்க தொடங்க வேண்டும், ஆனால் இதுவரை நீங்கள் செய்யாவிட்டால் 2022 -ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து தொடங்கலாம். உங்களின் ஓய்வு காலத்துக்காக சேமிப்பது உங்களின்  வேலை பார்ப்பது அல்லது சம்பாதிப்பதற்கான நியாயமான வயதை தாண்டி நீங்கள் நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்த உதவுகிறது. பொது சேமநல  நிதி,  ஓய்திய  திட்டங்கள், தேசிய ஓய்வூதியத் திட்டம்  போன்ற முதிர்வில் வருமானத்துக்கு  உத்தரவாதம் அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.*.

10. அவசர கால நிதியை  உருவாக்குங்கள்

அவசர  தேவைக்காக உங்கள் சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் / அல்லது லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட்களில் நிதியை ஒதுக்கி வைக்க வேண்டும். வேலை இழப்பு, மருத்துவ அவசரத் தேவைகள் போன்றவை உங்கள் தனிப்பட்ட நிதிகளை எளிதாக பாதிக்கக்கூடும். சாதாரண மாத செலவுகளை போல் 6-24 மடங்கு தொகையை அவசர நிதியாக வைத்திருப்பது சிறந்தது. இதில், கடன் மாத தவணை தொகையும் சேரும். இந்தத் தொகை கஷ்டமான காலங்களில் நிலைமையை சமாளிக்க தயாராக இருக்க உதவும்.

Thanks to  avivaindia.com   

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உலக ஆரோக்கிய தினம் ஏப்ரல் 7 World Health Day

உலக ஆரோக்கிய தினம்  ஏப்ரல் 7