மொத்தப் பக்கக்காட்சிகள்

கெம்பிளாஸ்ட் சன்மார் : ஐ.பிஓ மூலம் அடமானப் பங்குகள் மீட்பு, கடன் அடைப்பு...!

 

கெம்பிளாஸ்ட் சன்மார் லிமிடெட்: 

ஐ.பிஓ பணம் மூலம் 

அடமானப் பங்குகள் மீட்பு, கடன் அடைப்பு...!

கெம்பிளாஸ்ட் சன்மார் லிமிடெட் (Chemplast Sanmar Limited -“Chemplast”) நிறுவனம்,  அதன் பங்குகளாக மாறாத பாதுகாப்பான கடன் பத்திரங்களை (Non-Convertible Secured Debentures -  “NCDs”) முன் கூட்டியே திரும்பப் பெற்றுள்ளது. இதற்குத் தேவையான தொகைக்கு, புதிய பங்கு வெளியீடு (IPO) மூலம் திரண்ட தொகையை அது பயன்படுத்தி இருக்கிறது.   

கெம்பிளாஸ்ட் நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமான கெம்பிளாஸ்ட் கடலூர் வினைல்ஸ் லிமிடெட் (Chemplast Cuddalore Vinyls Limited - “CCVL”) -ன் அடமானம் வைக்கப்பட்ட பங்குகளை மீட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து சன்மார் என்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் (Sanmar Engineering Services Limited - “SESL”) கடனை அடைத்துள்ளது.  



சென்னை, செப்டம்பர் 2, 2021: 

கெம்பிளாஸ்ட் சன்மார் லிமிடெட் (Chemplast Sanmar Limited) நிறுவனம், 2019 டிசம்பர் மாதத்தில் பங்குகளாக மாறாத பாதுகாப்பான கடன் பத்திரங்களை வெளியிட்டது. இந்த என்.சி.டிகளை அது 2021 ஆகஸ்ட் 31-ம் தேதி அன்று முழுமையாக திரும்பப் பெற்றுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. திரும்பப் பெறப்பட்ட என்.சி.டிகளின் மொத்த மதிப்பு ரூ.1238.25 கோடிகளாகும். இந்த என்.சி.டிகளை திரும்பப் பெறுவது 2021 ஆகஸ்ட் மாதத்தில் இந்த நிறுவனம், புதிய பங்குகளை வெளியிட்டதன் (IPO) பகுதி நோக்கமாக இருந்தது.   

மேலும், சன்மார் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (Sanmar Holdings Limited) நிறுவனம் மற்றும் எஸ்.இ.எஸ்.எல் (SESL) பங்குகளை பங்குச் சந்தை மூலம் விற்பனை (Offer for Sale - “OFS”) செய்தது. இதன் மூலம் திரண்ட தொகை, எஸ்.இ.எஸ்.எல் நிறுவனம், ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட் (HDFC Limited) நிறுவனத்திடம் வாங்கிய குறித்தக் கால கடனை (term loan) முழுமையாக அடைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

கெம்பிளாஸ்ட் நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனம் சி.சி.வி.எல் (CCVL) ஆகும். அடமானம் வைக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் சம பங்குகள்  2021 ஆகஸ்ட் 31-ம் தேதி முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் மூலம் இந்த நிறுவனம் வைத்திருந்த சி.சி.வி.எல்-ன் நிறுவனப் பங்குகள் மற்றும் கெம்பிளாஸ்ட் சன்மார் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர்களின் (promoters) பங்குகள் எதுவும் அடமானத்தில் இல்லை என்கிற நிலையை அடைந்துள்ளது.  

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உலக ஆரோக்கிய தினம் ஏப்ரல் 7 World Health Day

உலக ஆரோக்கிய தினம்  ஏப்ரல் 7