மொத்தப் பக்கக்காட்சிகள்

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் ஆக்ஸிஸ் கன்சம்ஷன் இ.டி.எஃப்: நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றத் திட்டம்

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகப்படுத்தும் ஆக்ஸிஸ் கன்சம்ஷன் இ.டி.எஃப்

 

முக்கிய அம்சங்கள்: -

·        இது ஓப்பன் எண்டெடட், நிஃப்டி இந்தியா கன்சம்ஷன் இண்டெக்ஸை பின்பற்றும் எக்சேஞ்ச் டிரெடட் ஃபண்ட் ஆகும்.

·        நிஃப்டி இந்தியா கன்சம்ஷன் இண்டெக்ஸை பின்பற்றி, அதில் இடம் பெற்றிருக்கும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து, டிராக்கிங் பிழைக்கு ஏற்ப, அந்த ஃபண்ட் அளவுக்கு வருமானம் ஈட்டும் ஃபண்ட் இதுவாகும்.

·         புதிய ஃபண்ட் வெளியீட்டில் குறைந்தபட்ச முதலீடு ரூ. 5,000 மற்றும் அதன்பிறகு ரூ. 1-ன் மடங்கு

·        பெஞ்ச்மார்க்: நிஃப்டி இந்தியா கன்சம்ஷன் டி.ஆர்.ஐ இண்டெக்ஸ்

·        புதிய ஃபண்ட் வெளியீடு தேதி: ஆகஸ்ட் 30, 2021  முதல் செப்டம்பர் 13, 2021

 


மும்பை, ஆகஸ்ட் 30, 2021:  வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஒன்று ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் (Axis Mutual Fund) ஆகும். இந்த நிறுவனம், அதன் புதிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டமான ஆக்ஸிஸ் கன்சம்ஷன் இ.டி.எஃப் (‘Axis Consumption ETF’) அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தப் புதிய ஃபண்ட் வெளியீடு (New Fund Offers - NFO) ஆகஸ்ட் 30-ம் தேதி திங்கள் கிழமை தொடங்கியது. நுகர்வு கருத்தின் (Consumption Theme) அடிப்படையிலான பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் ஃபண்ட் (Exchange Traded Fund.) இதுவாகும். இந்தப் புதிய ஃபண்ட், நிஃப்டி இந்தியா நுகர்வு குறியீட்டில் (NIFTY India Consumption Index) இடம் பெற்றிருக்கும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது மூலம் நீண்ட காலத்தில் முதலீட்டில் செல்வம் உருவாக்கும் தீர்வுகள் மற்றும் லாபம் ஈட்டுவதற்கான இலக்கை கொண்டிருக்கிறது.

 

அடுத்த பத்து வருடங்களுக்கு இந்தியாவின் பொருளாதாரம் வலுவான வளர்ச்சி பெறும்  வாய்ப்புகளை ஏற்கனவே கொண்டுள்ளது. இந்தியாவின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி என்கிற ஜிடிபி (GDP) வளர்ச்சியின் போக்கு 1990 ஆம் ஆண்டுகளில் 5.8%  ஆக இருந்தது. இது புதிய மில்லினியத்தின் முதல்  இரு தசாப்தங்களில் (decades) 6.9% ஆக அதிகரித்துள்ளது (ஆதாரம்: மோர்கன் ஸ்டான்லி).( தசாப்தம் என்பது 10 ஆண்டுகளை குறிக்கும்).

 

பின்வரும் கட்டமைப்பு காரணிகளால் இந்தப் போக்கு அடுத்த தசாப்தத்தில் தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம்:

 

·        சாதகமான மக்கள் தொகை (Favourable demographics):  அடுத்த 10 ஆண்டுகளில், 122 மில்லியன் தனிநபர்கள் பணிக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. இது இந்தியாவின் தற்போதைய பணியாளர்களின் மொத்த எண்ணிகையில்  20 சதவிகிதக்கு சமமாகும். (ஆதாரம்: மோர்கன் ஸ்டான்லி).           

 

·        உலகமயமாக்கல் (Globalization): இது வளர்ச்சியை அதிகரிக்கப் பயன்படுத்தக்கூடிய வெளிப்புற தேவை மற்றும் நிதி உதவி செய்யும் சாத்தியமான காரணிகளை வழங்குகிறது.

 

·        சீர்திருத்தங்கள் (Reforms): கடந்த 1990 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் இந்தியாவில் தொடங்கிய சீர்திருத்தங்களை மத்திய அரசாங்கம் தொடர்கிறது. இது வணிகம் எளிதாக்குதல், அந்நிய நேரடி முதலீடு, அரசு நிதி உதவி, வரிவிதிப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மாநிலங்களுக்கு அதிக சுயாட்சி வழங்குவது ஆகியவற்றுடன் தொடர்புடையதாக உள்ளது.

 

டிஜிட்டல்மயமாக்கல் (Digitization) என்பது எங்கள் பார்வையில் இந்த வளர்ச்சிக்கு ஒரு கூடுதல் அம்சத்தை சேர்க்கிறது. டிஜிட்டல்மயமாக்கல் இரண்டு மாற்றங்களை ஒருங்கிணைந்தது: ) அனைவருக்கும் நிதிச் சேவையை ஊக்குவிக்கும் கொள்கை முன் முயற்சிகள் மற்றும் ) தொழில்நுட்ப மாற்றங்கள், பொதுமக்கள் மற்றும் சிறு நிறுவனங்களுக்கு நிதி சேவைகளை வழங்குவதற்கான செலவைக் குறைக்கிறது.

 

இவை, அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்கிற மத்திய அரசின் திட்டம், வளர்ச்சியை  உள்ளடக்கியதாக மாற்றும். இது இந்தியாவின் வளர்ச்சிக் கண்ணோட்டம் குறித்து எங்களுக்கு அதிக நம்பிக்கையை அளிக்கிறது. இந்த வளர்ச்சியின் ஒரு முக்கிய பயன் நுகர்வு ஆகும். அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா, இன்று, நுகர்வு சுற்றுச்சூழலில் மிகப்பெரிய வளர்ச்சியில் சீனாவுக்கு அடுத்த இரண்டாவது நிலையில் உள்ளது. நாட்டு மக்களின் சராசரி வருமானம் உயரும் போது, ​​இந்திய குடும்பங்களுக்களின் செலவு அதிகரிக்கும். குறிப்பாக, பொழுதுபோக்கு, பயணம், நுகர்வோர் உபகரணங்கள் மற்றும் சொத்து உள்ளிட்ட  விருப்பமான  செலவுகளுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால், நுகர்வு மிகவும் அதிகரிக்கும்.

 

இந்த வளர்ச்சி ஏற்கனவே பல்வேறு துறைகளில் பல வணிகம் முதல் நுகர்வோர் வரையிலான  (Business-to-Consumer - B2C) வணிகங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தச் செயல்திறனை நிஃப்டி இந்தியா நுகர்வு (The NIFTY India Consumption) குறியீடு சுட்டிக் காட்டி வருகிறது. குறுகிய கால பயன்பாட்டுக்கான நுகர்வோர் பொருட்கள் (Consumer Non-durables), ஆரோக்கியப் பராமரிப்பு, வாகனங்கள், தொலைத் தொடர்பு சேவைகள், மருந்துகள், ஹோட்டல்கள்,  மீடியா மற்றும் பொழுதுபோக்கு போன்ற துறைகளை சேர்ந்த பல்வேறு வகையான நிறுவனங்களை இந்தக் குறியீடு உள்ளடக்கி இருக்கிறது. நிஃப்டி இந்தியா நுகர்வு குறியீட்டில் (NIFTY India Consumption Index), பங்குச் சந்தை மதிப்பின் அடிப்படையில் 30 பெரிய நிறுவனங்களின் பங்குகள் இடம் பெற்றுள்ளன..

 

இந்திய நிதிச் சந்தைகளில் (Financial Markets)  பேசிவ் முதலீடுகள் என்கிற செயலற்ற முதலீடுகளின் (Passive Investing) வாய்ப்புகள் மிகவும் வேகத்தை பெற்றுள்ளன. இது தொடர வாய்ப்புள்ளது. பேசிவ் முதலீட்டிற்கான இரண்டு மிகவும் பிரபலமான முதலீடுகள், இண்டெக்ஸ் ஃபண்ட்கள் மற்றும்  எக்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்களாகும்.

 

பேசிவ் முதலீடு என்பது ஒரு குறிப்பிட்ட குறியீட்டை முடிந்தவரை  அப்படியே பின்பற்றி,  அதில் இடம் பெற்றிருக்கும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் உத்தியாகும். இதில், குறியீட்டின் அதே விகிதத்தில்  பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால், முதலீட்டுக்கான பங்கு தேர்வில் இருக்கும் இடர்ப்பாடு (Risk) நீங்குகிறது. மேலும், பரந்து விரிந்த சந்தையில் குறைவான செலவில் முதலீட்டு உத்தியை உருவாக்கப்படுகிறது.

 

செலவு குறைவு என்பதைத் தவிர, இ.டி.எஃப்கள் மூலம் முதலீடு செய்யும் போது, நாள் விலை முடிவுக்கு மாறாக நிகழ்நேர விலையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது.  இது,  அவர்களின் முதலீடுகளை குறுகிய கால முதலீட்டாளர்களின் முதலீடு மற்றும் வெளியேற்றத்திலிருந்து பாதுகாக்கிறது. பங்குச் சந்தையில் உடனடியாக முதலீடு செய்யும் வாய்ப்பை நெகிழ்வான  திட்டங்களில் ஒன்றாக இ.டி.எஃப்கள் இருக்கின்றன.

 

 

ஆக்ஸிஸ் .எம்.சி-ன் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி திரு. சந்திரேஷ் குமார் நிகம் (Mr. Chandresh Nigam, MD & CEO, Axis AMC,) ‘’இந்த புதிய ஃபண்ட் வெளியீட்டின் போது, ஆக்ஸிஸ் ஏஎம்சி -யில் நாங்கள் பொறுப்புள்ள மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனமாக வலுவாக செயல்பட்டு வருகிறோம்.  நாங்கள் எங்கள் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை தரமாக அளித்து வருகிறோம். தற்போதைய சூழலில் நீண்ட கால வருமானத்தை கொடுக்கும் வகையில் இந்த ஃபண்டை வழங்க முயற்சி செய்து வருகிறோம்.. ஆக்ஸிஸ் கன்சம்ஷன் இடிஎஃப் ஃபண்டை அறிமுகப்படுத்துவது மூலம், எங்கள்  முதலீட்டாளருக்கு வளர்ச்சி மற்றும் வலுவான வருமானத்திற்கான முதலீட்டு விருப்பத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். கடந்த சில தசாப்தங்களாக நுகர்வு சந்தை வலுவாக உள்ளது.. இடையில் சற்று குறைவு ஏற்பட்டாலும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. எங்கள் முதலீட்டாளர்கள் புத்திசாலிகள் மற்றும் புள்ளி விவரங்களால் முழுமையாக உந்தப்படுகிறார்கள், பேசிவ் முதலீட்டின் எழுச்சியை நாம் தெளிவாகக் காண்பிப்பது முக்கியம். முதலீட்டாளர்களுக்கு ஆக்ஸிஸ்  கன்சம்ஷன் இ.டி.எஃப் ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பு என்று நான் நம்புகிறே. அத்துடன் சந்தையில் ஒரு நிலையான மற்றும்  நீண்டகால வளர்ச்சியைப் பெறும்.” என்றார்.

Source: Axis MF Research

விரிவான சொத்து ஒதுக்கீடு மற்றும் முதலீட்டு உத்திக்கு, தயவுசெய்து திட்ட தகவல் ஆவணத்தைப் (scheme information document) பார்க்கவும்.

ஆக்ஸிஸ் .எம்.சி பற்றி (About Axis AMC): 

ஆக்ஸிஸ் சொத்து மேலாண்மை நிறுவனம், மியூச்சுவல் ஃபண்ட்கள்), போர்ட்ஃபோலியோ மேலாண்மை சேவைகள் மற்றும் மாற்று முதலீடுகள் என ஒருங்கிணைந்த சொத்து மேலாண்மை வழங்கும் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகும்

 


 

 

 

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...