மொத்தப் பக்கக்காட்சிகள்

ரூ.7,926.01 கோடி மோசடி : கனரா பேங்க் விளக்கம்


கனரா பேங்க் -லிருந்து  ஒரு தெளிவுபடுத்தல்

 

20 டிசம்பர் 2020, சென்னை/ பெங்களூரு: முதன்மையான பொதுத் துறை வங்கியான கனரா பேங்க் (Canara Bank), டிரான்ஸ்ஸ்ட்ராய் இந்தியா லிமிடெட் (M/s Transstroy India Ltd. (TIL))-க்கு ரூ.678.28 கோடி கடன் கொடுத்ததை தெளிவுபடுத்துகிறது. இது தொடர்பாக வந்த செய்திகள் மோசடியானது என்று 10.02.2020 அன்று ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கடனுக்கு கனரா பேங்க், 100% தொகையை வாராக் கடன் கணக்கில் ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட  டிரான்ஸ்ஸ்ட்ராய் இந்தியா லிமிடெட், சாலைகள், பாலங்கள், சுரங்கங்கள், நெடுஞ்சாலைகள் போன்றவற்றின் ஒப்பந்தக்காரர்கள், பொறியாளர்களாக பல வணிகங்களை மேற்கொண்டு வந்தது. நிறுவனம் 2001 ஆம் முதல் பல வங்கிகளில்  கூட்டாக கடன் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து, கனரா பேங்க்  தலைமையில்  பிற 13 வங்கிகளுடனும் ஒரு கடன் கூட்டமைப்பு 2013 இல் உருவாக்கப்பட்டது மற்றும் அனுமதிக்கப்பட்ட மொத்த வரம்பு ரூ.4,765.70 கோடியாக இருந்தது. இதில், கனரா வங்கியின் பங்கு ரூ.678.28 கோடி ஆகும்.

டிரான்ஸ்ஸ்ட்ராய் இந்தியா லிமிடெட்-ன் ரூ.7,926.01 கோடி மோசடித் தொகையில், கனரா பேங்க் உள்ளிட்ட 14 கூட்டமைப்பு  வங்கிகளும் வழங்கிய கடன் தொகை ரூ.4,765.70 கோடி. மீதமுள்ள தொகை வேறு பல வங்கிகளின் ஏற்பாட்டின் கீழ் பெறப்பட்டது. இதில், கனரா பேங்க் வழங்கிய கடன் ரூ.678.28 கோடி மட்டுமே.

இந்த வழக்கு, ஹைதராபாத்தின் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்துக்கு (National Company Law Tribunal NCLT) 10.10.2018 அன்று பரிந்துரைக்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனம் கலைகப்படும் பணி நடந்து வருகிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே 26.12.2018 அன்று கனரா வங்கியால் வேண்டுமென்றே தவறு செய்ததாக (willful defaulter) அறிவிக்கப்பட்டுள்ளது.

கனரா பேங்க் பற்றி (About Canara Bank):

வாடிக்கையாளர் மையப்படுத்தலுக்கு பரவலாக அறியப்பட்ட கனரா வங்கி 1906 ஜூலை மாதம் கர்நாடகாவின் ஒரு சிறிய துறைமுக நகரமான மங்களூருவில் சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்டவர்  மற்றும்  சமூக அக்கரை கொண்ட அம்மெம்பல் சுப்பா ராவ் பாய் (Ammembal Subba Rao Pai) என்பவரால் நிறுவப்பட்டது. ஏப்ரல் 2020 -ல் சிண்டிகேட் பேங்க், கனரா பேங்க் உடன்   இணைக்கப்பட்ட பின்னர் கனரா பேங்க் நாட்டின் நான்காவது பெரிய பொதுத்துறை வங்கியாகும். தற்போது, இது 10,498 கிளைகளுடனும், 13,023 ஏ.டி.எம் மையங்களுடன் நாடு முழுக்க செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி அதன் நூறு ஆண்டு கால வரலாற்றில் அதன் வளர்ச்சிப் பாதையில் பல்வேறு கட்டங்களை கடந்து  வந்துள்ளது. கனரா வங்கியின் வளர்ச்சி தனித்துவமானது, குறிப்பாக, கடந்த 1969 ஆம் ஆண்டில் வங்கிகள் தேசியமயமாக்கலுக்குப் பிறகு, புவியியல் ரீதியான அணுகல் மற்றும் வாடிக்கையாளர் பிரிவுகளின் அடிப்படையில் தேசிய அளவிலான  வளர்ச்சி நிலையை அடைந்தது. ஜூன் 2006 இல், வங்கி இந்திய வங்கித் துறையில் ஒரு நூற்றாண்டு செயல்பாட்டை நிறைவு செய்தது. வங்கியின்  வங்கிச் சேவை பயணம் பல மறக்கமுடியாத மைல்கற்களாக உள்ளன. இன்று, கனரா  பேங்க், இந்திய வங்கிகளின் வர்த்தகத்தில் முக்கிய ஓர் இடத்தைப் பிடித்துள்ளது.

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...