மொத்தப் பக்கக்காட்சிகள்

ஆக்ஸிஸ் ஸ்பெஷல் சிச்சுவேஷன்ஸ் ஃபண்ட் –ன் சிறப்பு அம்சங்கள்

 

ஆக்ஸிஸ் ஸ்பெஷல் சிச்சுவேஷன்ஸ் ஃபண்ட்ன் சிறப்பு அம்சங்கள் (Salient Features of Axis Special Situations Fund)

·         இந்த ஃபண்ட், இந்திய முதலீட்டாளர்களுக்கு பங்குபெறும் அல்லது இடையூறு விளைவால் புதுமையை புகுத்தி இருக்கும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

·         அதன் பல துறை மற்றும் மல்டி-கேப் சொத்து ஒதுக்கீட்டு உத்தி (multi-sector and multi-cap asset allocation strategy), உலகளாவிய பங்குகளை வெளிப்படுத்துவதோடு, சீர்குலைப்பால் புதுமையை புகுத்திய நிறுவனத்துக்கு மட்டுமல்லாமல், புதுமையை பின்பற்றிய நிறுவனங்கள் (adapter) அல்லது சீர்குலைவை சரி செய்து செயல்படுத்தும் நிறுவனங்களுக்கும் பயனளிப்பதை உறுதி செய்கிறது.

·         வெளிநாட்டு முதலீடுகள் அவற்றின் இடையூறு தத்துவத்தின் (disruption philosophy) அடிப்படையில் ஷ்ரோடர் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் (Schroder Investment Management Limited) மூலம் அறிவுறுத்தப்படும்

ஆக்ஸிஸ் .எம்.சி-ன் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி திரு. சந்திரேஷ் குமார் நிகம் (Mr. Chandresh Kumar Nigam, MD & CEO, Axis AMC) கூறும் போது, ‘ஆக்ஸிஸ் ஏ.எம்.சி, எப்போதும் எங்கள் முதலீட்டாளர்களுக்கு புதுமையான புதிய மியூச்சுவல் ஃபண்ட் யோசனைகளை கொண்டுவர முயற்சி செய்கிறது. இது நீண்ட காலத்தில்  செல்வத்தை உருவாக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். தரத்தில் கவனம் செலுத்தும் பொறுப்பான முதலீட்டின் தனித்துவம் மற்றும் காலத்தால் சோதிக்கப்பட்ட தத்துவத்தால் எங்கள் திட்டங்கள் மேம்பட்டவைகளாக இருக்கின்றன. ஆக்ஸிஸ் ஸ்பெஷல் சிச்சுவேஷன்ஸ் ஃபண்ட்  அறிமுகம் என்பது எங்கள் முதலீட்டாளர்கள் அனைவரின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய தொழில்துறை முன்னணி சொத்து மேலாண்மை தளத்தை உருவாக்குவதற்கான எங்கள் பயணத்தைத் தொடர்வதாக உள்ளது. தொழில்நுட்ப மாற்றம் மற்றும் கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்துவதன் மூலம் உலகம் நம்மைச் சுற்றிலும் உருமாறும் போது, முதலீட்டாளர்கள் இந்தக் கருப்பொருள்களில் தங்கள் முதலீட்டை, இந்திய அல்லது உலகளாவிய சந்தையாக இருந்தாலும் ஒதுக்கீடு செய்து பயனடைய வேண்டும்என்றார்






 விரிவான சொத்து ஒதுக்கீடு மற்றும் முதலீட்டு உத்தி (asset allocation & investment strategy) பற்றி தெரிந்துகொள்ள திட்ட தகவல் ஆவணத்தை (scheme information document)  தயவுசெய்து பார்க்கவும்.

ஆக்ஸிஸ் ஏ.எம்.சி பற்றி (About Axis AMC):

ஆக்ஸிஸ் சொத்து மேலாண்மை நிறுவனம் (Axis AMC), மியூச்சுவல் ஃபண்ட்கள்), போர்ட்ஃபோலியோ மேலாண்மை சேவைகள் மற்றும் மாற்று முதலீடுகள் (alternative investments) என ஒருங்கிணைந்த சொத்து மேலாண்மை வழங்கும் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகும்

ஷ்ரோடர்ஸ் பற்றி (About Schorders):

ஷ்ரோடர்ஸ் ஒரு முன்னணி உலகளாவிய சொத்து மேலாண்மை நிறுவனமாக உள்ளது. இது பல்வேறு சொத்து பிரிவுகள் மூலம்  526 பில்லியன் யூரோவுக்கும் (£526 billion) அதிகமான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இது 37 நாடுகளில் இயங்குகிறது. மற்றும் உலகளாவிய சொத்துகளை நிர்வகிப்பதில் தனித்துவத்துடன்  திகழ்கிறது. 200 ஆண்டுகளுக்கும் மேலான சந்தை நிபுணத்துவத்துடன், இந்திய முதலீட்டாளர்களுக்கு உலகளாவிய பங்குச் சந்தை முதலீடுகளின் மூலம் அவர்களின் முதலீட்டுக் கலவையை பரவலாக்க தனித்துவமான சலுகையை வழங்குகிறது. ஷ்ரோடர்ஸ் ஆக்ஸிஸ் அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் (Axis Asset Management Company Limited) -ன் கூட்டு நிறுவனத்தின் (JV) ஒரு பகுதியாக உள்ளது. 

புதிய ஃபண்ட் வெளியீடு (New Fund Offer- NFO) 2020 டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கி 2020  டிசம்பர் 18 வரை நடக்கிறது.

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உங்கள் வாழ்க்கை , யாரையும் நீங்கள் திருப்தி படுத்த தேவையில்லை Life

🙏உங்கள் இறுதி; ஊர்வலத்திற்குப் பின் ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும், அடுத்த வேளை உணவுக்கு  ஆர்டர்கள்  ஹோட்டலுக்...