மொத்தப் பக்கக்காட்சிகள்

லஷ்மி விலாஸ் பேங்க் புதிய டிஜிட்டல் வசதிகள்

 

லஷ்மி விலாஸ் பேங்க்-ன்30.09.2020 உடன் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதி நிலை முடிவுகளுக்கு சென்னையில் 2020 நவம்பர் 7 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் வங்கியின் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.

1.     மூலதனம் திரட்டுதல் (Capital raise)  

கோவிட்-19 பரவல் காரணமாக  சரக்கு போக்குவரத்து  சவால்கள் எழுந்த போதிலும், கிளிக்ஸ் குழுமத்தின் கிளிக்ஸ் கேப்பிட்டல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் கிளிக்ஸ் ஃபைனான்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Clix Capital Service Pvt Ltd and Clix Finance India Pvt Ltd) ஆகியவற்றை வங்கியுடன் இணைப்பதற்கான  நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. கிளிக்ஸ் குழுமத்தின் கோரிக்கையின் காரணமாக, இந்தப் பணிகள் இந்த வாரம் நிறைவடைந்தது. இப்போது, இரு தரப்பிலும் செயல்படக்கூடிய மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்டமைப்பின் செயல்பாட்டில் உள்ளன.

மேலும், வங்கியின் இயக்குநர் குழு பங்கு வெளியீடு மூலம் ரூ.500 கோடி திரட்ட அனுமதி அளித்துள்ளது. இதற்கான வணிக வங்கியாளராக (merchant Banker) ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ்  நியமிக்கப்படுகிறது. இப்படி பொதுகளத்தில் நிதி திரட்டுவதற்கான முன்னேற்றங்கள் பற்றிய தகவல்களை வங்கி தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும்.

 

1.     புதிய டிஜிட்டல் வசதிகளை தொடங்குதல் (Launching of new digital offering)

இந்த வங்கி, சமீபத்தில்டிஜிகோ(‘DigiGo’)  என்ற சுயமாக ஆன்லைன்  மூலம் மேற்கொள்ளும் உடனடி கணக்கு திறப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.  இது ஒரு வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கணக்கு ஆகும். இதில் வாடிக்கையாளரின்  முழு கே.ஒய்.சி (KYC)  கணக்கை மாற்ற ஒரு வருடத்திற்குள் தொடர்புடைய கே.ஒய்.சி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.


3. லாபத்தன்மை (Profitability): நேரடி செலவுகள் மற்றும் மறைமுக செலவுகள் இரண்டையும் குறைக்க இந்த வங்கி தொடர்ந்து தீவிர  நடவடிக்கை எடுத்து வருகிறது. மூலதன நிதிக்கு பாதிப்பு இல்லாமல் லாபத்தை மேம்படுத்த தங்கக் கடன்கள், அரசு உத்தரவாதக் கடன்கள் போன்ற கடன்களில் வங்கி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது

 

முக்கிய நிதி நிலை முடிவுகள்  (Performance Highlights):

தென்னிந்தியாவை சேர்ந்த தனியார் துறை வங்கியான  லஷ்மி விலாஸ் பேங்க் (Lakshmi Vilas Bank - LVB), 30 செப்டம்பர் 2020 உடன் முடிந்த   இரண்டாம் காலாண்டு நிதி நிலை முடிவுகளை  அறிவித்துள்ளது

± வங்கியின் மொத்த வணிகம் 30/09/2020 நிலவரப்படி ரூ37,595 கோடியாக உள்ளதுஇது, 2019  செப்டம்பர் 30 நிலவரப்படி ரூ37,471 கோடியாக இருந்தது.

± மொத்த வைப்புத் தொகையில் காசா (CASA) 30.09.2020 நிலவரப்படி 28.94% ஆக உள்ளது,  இது, 30.09.2019 நிலவரப்படி 25%  ஆக இருந்தது.

± வழங்கப்பட்ட மொத்தக் கடன்கள் (Gross Advances), 30.09.2020 -ல் ரூ.16,622  கோடியாக இருந்தது. 30.06.2020-ல் ரூ.16,310  கோடியாக  உள்ளது. 30.09.2019 –ல் வழங்கப்பட்ட மொத்தக் கடன்கள் ரூ.19,251 கோடியாக இருந்தது.

± மொத்த வைப்புத்தொகை (Bulk Deposits) சுமார் ரூ. 982 கோடி குறைந்து ரூ.911 கோடியாக  உள்ளது. இது, 30.09.2019 நிலவரப்படி ரூ. 1893 கோடியாக இருந்தது.

± வங்கியின் செயல்பாட்டு இழப்பு (Operating loss) 30.09.2020 உடன் முடிந்த காலாண்டில் ரூ. 5.66  கோடியாக உள்ளது.  30.09.2019   உடன் முடிந்த காலாண்டில் செயல்பாட்டு இழப்பு ரூ. 40.37 கோடியாக இருந்தது.  30.06.2020 உடன் முடிந்த காலாண்டில் செயல்பாட்டு லாபம் ரூ. 0.09 கோடியாக இருந்தது

± செலவு, வருமானத்துக்கான விகிதம் (Cost to Income ratio),  2020 செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிந்த முதல்  காலாண்டில் 103.67% ஆக உள்ளது. இது, 2019 செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில் 124.07% ஆக உள்ளது.

± வரிக்குப் பிந்தைய நிகர  இழப்பு (Net Loss after Tax) செப்டம்பர் 30  2020 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 396.99  கோடியாக உள்ளது. 2019 செப்டம்பர் உடன் முடிவடைந்த காலாண்டில் நிகர இழப்பு ரூ. 357.18  கோடியாக இருந்தது. மற்றும் 30.06.2020 உடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 112.28 கோடியாக இருந்தது.

± செப்டம்பர் 30, 2020 உடன் முடிந்த காலாண்டில் நிகர வட்டி லாபம் (Net Interest Margin - NIM) 1.37%  ஆக உள்ளது. இது செப்டம்பர் 30, 2019 உடன் முடிந்த காலாண்டில் 1.47%  ஆக உள்ளது. இது, 30.06.2020 உடன் முடிந்த காலாண்டில் 1.58% ஆக இருந்தது

மூலதன தன்னிறைவு விகிதம் (Capital Adequacy):
இந்த வங்கியின் மொத்த மூலதன தன்னிறைவு விகிதம் (Capital Adequacy Ratio  - CAR), பேசல் III விதிமுறைகளின் படி (Basel III guidelines) 2020  செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி 2.85%  ஆக உள்ளது. இது, 31.03.2020  நிலவரப்படி 1.12%  ஆக இருந்தது.

 

வாராக் கடன்  (NPA)

இந்த வங்கியின் மொத்த வாராக் கடன் (Gross NPA) 30.09.2020 -ல் 24.45% ஆக உள்ளது. இது 2019 செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி 21.25%  ஆக இருந்தது. மொத்த வாராக் கடன் 31.03.2020  -ல் 25.39%  ஆக இருந்தது.

நிகர வாராக் கடன் (Net NPA) 30.09.2020 -ல்  7.01%, ஆக உள்ளது. இது, 2019 செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி 10.47%  ஆக இருந்தது . நிகர வாராக் கடன், 31.03.2020  நிலவரப்படி 10.04% ஆக இருந்தது.

 

வாராக் கடன் ஒதுக்கீட்டு விகிதம் (provision coverage ratio - PCR) 79.66% (30.09.2019 –ல் 62.28%)  ஆக உள்ளது. பி.சி.ஆர் குறைந்தபட்ச ஒதுக்கீட்டு அளவான 70% -ஐ விட அதிகமாக உள்ளது.


..எம் மையங்கள் (ATMs):

இந்த வங்கி அதன் அனைத்து .டி.எம் மையங்களையும்  சொந்த தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட ஒபெக்ஸ் மாடலுக்கு (Opex model) மாற்றுகிறது. இதன் மூலம் இந்த வங்கி அதன் மற்றும் அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு அதிக சேவை செய்ய முடியும்.

வங்கிப் பற்றி..!


இந்த வங்கிக்கு 30.09.2020 நிலவரப்படி, 563 கிளைகள், 5 விரிவாக்க மையங்கள் (Extension Counters), 16 மாநிலங்கள் 3 யூனியன் பிரதேசத்தில் 974 .டி.எம் மையங்கள்  உள்ளன. இந்த வங்கி பல்வேறு நிதித் திட்டங்கள் மற்றும் சேவைகளை அளித்து வருகிறது.  நீண்ட காலத்தில் நிலையான மற்றும் உயர் தரமான வணிகத்தை மேற்கொள்ள இந்த வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த வங்கியின் வணிகத்தில் தமிழகம் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது

கூட்டத்திற்கான சேர்மன்

 

(Chairman of the Meeting)

 

குறிப்பு:  வங்கியின் கடந்த மூன்று ஆண்டுகளின் நிதி  தகவல்கள், https://www.lvbank.com/audited-financial-results.aspx-ல் கிடைக்கும். 2018, 2019 மற்றும் 2020 நிதி ஆண்டுகளுக்கான வங்கியின் ஆண்டு அறிக்கைகளைப் பார்க்கவும்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...